Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா?

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்க்கிறீர்களா? செல்ல நாய்க் குட்டிகளை பராமரிக்கும் வழிகளை தெரிந்து கொள் ளுங்கள்…

நாய்கள் வளர்ப்பு பிராணி களல்ல, வளர்ப்புப் பிள்ளை கள் போல வே மாறிவிட்டன. வீட்டுக் காவலுக்காக நாய்க ளை வளர்த்த காலம் போய், கவுரவத்துக்காக நாய்கள் வள ர்ப்பவர்கள் பெருகிவிட்டா ர்கள். தோற்றத்தில் அழகா னது, கம்பீரமானது என்று வகைவகையாகப் பிரித்து அதிக விலை கொடுத்து நாய் க்குட்டி வாங்கி வளர்க்கி றார்கள். வீட்டு பாதுகாப்பிற்கு ஒரு நாய் என்பதை விட அதற்கு ஜோடியாக இன்னொரு நாயையும் சேர்த்து வளர் க்கத் தொடங்கிவிட்டனர். நாய்களுக்கு சாப்பாடு போடுவது மட்டும் போதாது. ஒரு சில பராமரிப்பு முறைகளையும் கவ னித்தால் அவை நலமாக இருக்கும்.

* நாய்க்குட்டியாக வாங்கி வளர்க்க விரும்பினால், குட்டி பிறந்தவுடன் தாயிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள். குழந் தைகள்போலவே அவற்றுக் கும் தாய்ப்பால் அவசியம். 40 நாட்கள் வரை தாய்ப்பால் குடித்து வளர்ந்த பிறகு நாய் க்குட்டியை வாங்கி வளர்க்க லாம்.

*ஒருவேளை நாய்க்குட்டி யை பிரித்து, வாங்கி வந்து விட்டால் அதற்கு மாட்டுப் பால் கொடுக்கலாம். பாலில் கொஞ்சம் தண்­ணீர் சேர்த்து கொதிக்க வைத்து ஆறியபிறகு கொடுக்க வேண்டும்.

* குட்டி நாய்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை பால் கொடுக்க வேண்டியதிருக்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் ஊட்டச் சத்து பானங்களையும் கொடுக்கலாம்.

* நகரசபை, மாநகராட்சி யில் அனுமதி வாங்கி த்தான் நாய் வளர்க்க வேண்டும். அனுமதியி ல்லாமல் வளர்த்தாலோ அல்லது தெருவில் நாய் களைத் திரியவிட்டா லோ அவற்றை அப்புறப் படுத்த அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே அனுமதி பெற்று கழுத் தில் ‘டை’ கட்டி, வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும்.

* நாய்களுக்கு சத்துணவு கொடுத்து வளர்க்க வேண்டும். இ றைச்சி கொடுத்தால் நாய்கள் கொழுகொழுவென்று வளரும்.

* நாய்கள் தரையில் படுத்துக் கிடக்கும். இதனால் கிருமிகள் தொற்ற நிறைய வாய்ப்புள்ளது. அவற்றுக்கும் சளி, காய் ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். இதற்கு கால் நடை டாக்டரிடம் காண் பிக்கலாம்.

* நாய்களுக்கும் முடி கொ ட்டும். பொமரேனி யன் போன்ற முடி அதிகம் உள்ள நாய்களுக்கு முடி உதிர்வதை நாம் பார்க்க முடியும். இரு ம்புச் சத்து குறைபாடு, வயிற்றில் பூச்சி இரு ப்பது போன்ற காரண ங்களால் முடி உதிரும். வைட்ட மின், தாது உப்புக்கள் நிறைந்த உணவுகளைக் கொடுத்தால் முடிஉதிர்வதை தடு க்கலாம்.

* எவ்வளவு செல்லமாக வளர்த்தாலும் நாய்களை படுக்கை அறைக்குள் அனுமதிக்க வேண்டாம்.

* ஏ.சி. அறைக்குள்ளும் நாய்களை அனுமதிப்பதை தவிர் க்க லாம். இதனால் அவற்று க்கு சளி பிடிக்க வாய்ப்பு ள்ளது.

* நாய் பிறந்து 4 மாதத் தில் இருந்து 8 மாதம் வ ரை 20 நாட் களுக்கு ஒரு முறையும், 8 மாதத்தில் இருந்து உயிரோடு இரு க்கும் வரையும் நாயின் எடையைப் பார்த்து அத ற்கேற்ப பூச்சி மருந்து கொடுத்து வர வேண்டும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட நாய்கள் சேர்ந்து கொண்டால் அவைக ளும் விளையாடத் தொடங்கி விடும். அப்போது ஒன்றை யொன்று கடித்துக் கொள் வதும் உண்டு. இதனால் பெரிய பாதி ப்புகள் ஏதும் ஏற்படாது.

* நாய்களால் மனிதர்களு க்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், அதற்கு தடு ப்பு ஊசி போட வேண் டும். எல்லாவிதமான தடுப்பு ஊசிகளையும் போட்டு, பாது காப் பாக நாய்களை வள ருங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: