Saturday, December 5அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இரத்த வகைகள்

மனித உடலில் ஓடும் இரத்தத்தின் நிறம் சிவப்பு மட்டுமே. ஆனால் அனைவரின் ரத்தமும் ஒரே வகை அல்ல. இரத்த வகைகள் பற்றிய விவரம் அறியப்படாத காலத்தில் இரத் தம் தேவைப்பட்ட நோயாளிகளைக் காப் பாற்ற இயலவில்லை. அவர்களுக்கு இர த்தம் செலுத்துவது மிகக் கடினமாக இரு ந்தது. ஏனெனில் பல எதிர் விளைவுகள் ஏற்பட்டன. உயிர்களைக்காக்க முடிய வில்லை.

1900 ஆம் ஆண்டில் டாக்டர். லான்ஸ்டைனர் என்பவர் ரத்தத் திலுள்ள பிரிவுகளைக் கண்டு பிடித்தார். இரத்தமானது பொ துவாக 4 வகைகளாகப் பிரிக்க ப்படுகிறது. அவை 1. “A” வகை ரத்தம், 2. “B” வகை ரத்தம், 3. “AB” வகை ரத்தம் 4. “O” வகை ரத்தம். இவற்றில் “A” வகை ரத்தத்தை A1, B2 என்ற துணை வகைகளாகப் பிரிக்கப்படுகி றது.

இரத்தப் பிரிவுகளில்… A வ கையினர் 42%ம், ஆ வகை யினர் 8%ம், AB வகையினர் 3% ம், O வகையினர் 47%ம் மனிதர்க ளில் அமைந்துள்ளனர். ‘O’ வகை ரத்தமானது பொது ரத்த தானத்திற்குத் தகுதி யானது அதனை “Universal Donor” என் பார்கள். ஏனென்றால் ‘O’ வகை ரத்தமுள்ளவர்கள் A, B, AB போன்ற ரத்த வகை யினருக்கும் ரத்தம் கொடுக்க லாம்.

அதுபோன்று AB ரத்த வகையி னரை Universal Recipient என் று அழைப்பார்கள். இவ்வகை ரத்தமு ள்ளவர்களுக்கு O, A, B வகை ரத்த ங்களில் எதனையும் செலுத்தலாம் (ஆயினும் அந்தந்த வகை ரத்ததிற்கு அந்தந்த வகை ரத்தம் செலுத்தும் முறை தான் சிறந்தது)

புதிய இரத்த வகைகள் :

த்தப்பிரிவுகளைக் கண்டுபிடித்த பின் னர், ஒரே ரத்த வகையைத் தானம் செய் த போதிலும் பல எதிர்விளைவுகள் ஏற் பட்டன. அதன் காரணமாக மருத்துவ அறிஞர்கள் இரத்தம் சம்பந்தமான தொ டர் ஆராய்ச்சிகளில் இறங்கினர். Rh ரத்த வகையைக் கண்டுபிடித்தனர் A, B, AB, O ரத்த வகைகள் 1900லும், Rh ரத்த வகை கள் 1940-லும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தப் புதிய ரத்த வகையானது Rhesus என்ற குரங்கிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் Rh-group என்று பெயரிடப் பட்டது. இது Rh – positive group என்றும் Rh – negative group என்றும் பிரிக்கப்பட்டது.

இதன் பின்னர்… A வகை ரத்தம் உள்ள ஒருவருக்கு A வகை ரத்தம் செலுத் தும்போது Rh வகையும் ஒற்றுமையாக அமை ய வேண்டும் என்ற புதிய அணுகு முறை கடைப்பிடிக் கப்பட் டது. அதாவது A வகை யினர் Rh+ ஆக இருந்தால் அவர்க ளுக்கு A வகை Rh+ ரத்தம் தான் கொடுக்க வேண்டும். Rh நெகடிவ் உள்ளவருக்கு Rh நெகடிவ் ரத்தமே சேரும்.

பாதுகாப்பான ரத்தம் செலுத்தும் முறைகள் :

இரத்தம் பெறுபவர், தருபவர் இருவரின் ரத்த வகையும், ஒன் றாக இருக்கவேண்டும். இர த்தம் வழங்குபவருக்கு எவ் வித தொற்று நோய்களும் இருக்கக் கூடாது. (உம். மலேரியா, மஞ் சள் காமா லை, பால்வினை நோய், எய்ட்ஸ்.

இரத்ததானம் செய்பவருக் கு ரத்தம் போதுமானளவு இருக்க வேண்டும் (HB 8% க்கு மேல் தேவை). இளைஞர்கள், நடுத்தர வயதினர் ரத்தம் வழங்கலாம். 60 வயதிற்கு குறைந் தவராக இருத்தல் அவசியம். ஒரு முறை ரத்தம் கொடுத் தவர் குறை ந்தது மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் ரத்தம் கொடுப்பது நல்லது. ரத்தம் செலுத்தும் முன்பு Cross matching செய்ய வேண்டும்.

இரத்த தானம் ஏன்?

இரத்த சோகை நோய்களில் மிகக் கொடுமையானது தலா சீமியா என்னும் நோய். இந்நோய் உள்ள குழந் தைகளுக்கு 15 நாட்களுக் கொருமுறை வீதம், ஆயுள் முழுவதுமே இரத்த தானம் தேவைப் படுகிறது. இது ஒரு பார ம்பரிய ரத்தசோகை நோய்.

கருவிலுள்ள குழந்தை யின் ஹீமோகுளோபின் குழந்தையாகப் பிறந்தவுடனும் மா றாமல் இருப்பதால், உயிர்வாழ புது ரத்தம் தேவைப்படு கிறது. இந்நோய் தாக்கிய 3 -4 வயது குழந்தைகளுக்கு 6 வார ங்களுக்கு ஒரு தடவையாவது ரத்த தானம் கொடுக்க வேண் டும். வளர, வளர அடிக்கடி ரத்தம் தேவைப்படும்.

இதுபோன்ற ரத்தசோகை பீடித்த ஆயிரக்கணக்கானோர் மாற்று ரத்தம் பெற்றே உயிர் வாழ்கின் றனர். விபத்து ஏற்பட்டு இரத்த மிழந்தவர்கட்கு மட்டும்தான் ரத்ததானம் பயன் படுகிறது என எண்ண வேண்டாம். குறிப்பிட்ட காலங்களில் கோயில்களுக்குச் சென்று வழிபடுவதைப் போல, ரத்த தானம் செய்து பல உயிர் களை வாழச்செய்யலாம். மேலு ம் ரத்த தானம் செய்பவர்களுக்கு இருதய நோய் வருவது குறை வு என்று ஓர் மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

ஹீமோபிலியா :

இரத்தம் தொடர்பான வியாதி களில் ஒன்று ஹீமோபிலியா. இது பெரும் பாலும் ஆண் களையே தாக்குகிறது. இது மரபு அணு சார்ந்த பிறவிக் கோளாறு. இதனால் காய ங்கள் ஏற் பட்டால் இரத்தம் எளிதில் உறையாமல் இர த்தம் தொடர்ந்து வெளி யேறிக் கொண் டே இருக்கும். இரத்தம் உறையச் செய் யும் செயல் முறைகளில் 8வது காரணி இல்லாமல் இருப்பது அல் லது குறைவாக இருப்பதே இதற்கு காரணம். இரத்தத் தின் உறையும் தன்மையில் ஏற்படும் குறைபாடு நோயான ஹீமோ பிலியாவை மாற்றுமுறை மருத்துவமான ஹோமி யோபதி மூலம் பெருமளவு கட்டுப்படுத்த இயலும். இதற்கு பயன்படும் முக்கியமான ஹோமியோபதி மருந்து: பாஸ் பரஸ் இரத்தம் கசியும் வியாதிகள் அனைத்தும் ஹீமோ பிலியா அல்ல. இரத்தம் உறைவதில் ஏற்படும் கோளாறுகள் பல காரணங்களால் ஏற்படுகின்றன

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply