Monday, March 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஐந்து வயதிலேயே எதிர்காலத் தலைவனை நீங்கள் இனம்கண்டு கொள்ள . . .

சிலர் மட்டும் முன்னால் நடக்கிறார்கள். அவர்களின் பின்  னே அநேகம் பேர். தலைமை ஏற்பவர்களுக்கு, மற்றவர்க ளை தனது பின்னாக வரச் செய்யும் சக்தி எப்படி அமைந் தது? எப்போதாவது நீங்கள் எண்ணிப் பார்த்தது உண்டா? உலகில் எல்லாமே தற்செய லாக நடந்து விடுவதில்லை. தகுதியற்ற ஒருவர் தலைவ ராவது விபத்து மாதிரி. அவ ரால் நீடிக்க முடியாது. வரலா ற்றில் நிலையான இடம் பெற் றவர்கள் எல்லாம் படிப்படியாக உழைத்து முன்னுக்கு வந்த வர்கள். அவர்கள் பட்ட சிரமங்களுக்கு அளவே இருக்காது.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். யாரும் பிறவியிலேயே தலைவராகிவிடவில்லை. அவர்கள் உருவாகிறார்கள், உரு வாக்கப்படுகிறார்கள். சிறு வயதிலேயே தலை மைக்குரிய மனோ பாவ த்தை பெற்றோர் அவர்க ளுக்குள் வளர்த்து விட் டிருப்பார்கள். ஒரு நிறுவ னத்தலைவர், விளையா ட்டுக் குழு வின் கேப்டன், ஆராய்ச்சித் துறை முத ல்வர் என்று அவர வரின் பின்னணியை ஆராய்ந் தால் உண்மை விளங்கும்.

அதென்ன தலைமைக்குரிய மனோபாவம்? கேட்பீர்கள். மன திடமும், சுயேச்சையான சிந்தனையும்தான் தலைமைக் குரிய திறமை. அது உள்ள குழந்தையை நீங்கள் அடையா ளம் காண முடியும். அது தன் வயது ஒத்த குழந்தைகளின் பேச்சுக்கு இணங்கிப் போகாது. தான் நம்புகிறதையே அது பின் பற்றும். மற்ற குழந்தைகளையும் தன்னைப் பின்பற்றுமாறு செய் யும்.

இன்று விதைப்பது, இன்னொரு நாளில்தான் பலன் கொடுக் கும். தலைமை தாங்குகிற மனோ பாவமும் அப்படித்தான். குழந் தைப் பருவத்தில் வகுப்புத் தலை மை மாணாக்கனாக இருப்பது, விளையாட்டு, மாணவர் மன்றம் போன்ற இதர நடவடிக்கைகளில் ஈடுபடுவது இவை யெல்லாம் பின்னாள் உயர்வுக்கு இந்நாளில் போடப்படும் அடித்தளமாகும்.

தலைமைக்குரிய தகு தியை, தேர்வில் வாங் கும் மதிப்பெண்கள் நிரூபிப்பதில்லை.

நான்கு, ஐந்து வயதி லேயே எதிர்காலத் தலைவனை நீங்கள் இனம்கண்டு கொள்ள முடியும். அந்தக் குழந்தை பெரியவர் களை மட்டுமின்றி தன் வயதொத்தவர்களையும் மரியாதையாக நடத்தும். அதனு டைய பேச்சிலும், செயலிலும் தன்னம் பிக்கை மிளிரும். நகைச்சுவை உணர்வு கொண்டிருக்கும். தன்னுடைய விளை யாட்டு கருவிகளை மற்ற குழந்தைகளுடன் மனமுவந்து பகிர்ந்துகொள்ளும். எதையும் அறிந்து கொள்கிற ஆவலை, எதையும் துணிச்சலுடன் தொடங்குகிற போக்கை வெளிப் படுத்தும்.

டீன்ஏஜ் பிள்ளைகளி டையே அவர்களை எப் படிக் கண்டு பிடிப்பது? அவர்கள் எப்போதும் புன்முறுவலுடன் காண ப்படுவார்கள். தங்களை நல்லவிதமாக உணர் வார்கள். மற்றவர்களை யும் அப்படியே உணரச் செய்வார்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: