Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தடையும், கருத்தடை சாதனங்களும்…

எதிர்பாராத கர்ப்பம், கருக்கலைப்பு என்றெல்லாம் கஷ்டப் படாமல் இல்லத்தரசிகள் நிம்ம தியான வாழ்க்கை வாழ, கருத் தடை பற்றிய விழிப்பு உணர்வு அவசியம். அதற்காகத் தான் கருத்தடை சாதனங்கள் பற்றி இங்கு முழுமையான விள க்கம் தருகிறார் சென்னையை ச் சேர்ந்த மகப்பேறு மருத்துவ ர் ஜெயம் கண்ணன்.

ஆண்கள் பயன்படுத்தக்கூடிய காண்டம் (Condoms) வகைகள், (பெண்களுக்கான காண்டம் இருக்கிறது. ஆனால் நம் நாட் டில் அது நடைமுறையில் இல்லை) அவசர கால கருத்தடை மாத்திரைகள் (Emergency Contraceptive Pills), கருப்பைக்குள் வைக்கிற கருத்தடை சாதனங்களான லூப், காப்பர்-டி மற் றும் கருப்பையில் வைக்கக் கூடிய “லெவொநர்ஜெஸ்ட்ரல்” (Levonorgestrel) சாதனம்…. என தற்போது நிறைய கருத் தடை சாதனங்கள் இருக்கின்றன.

லூப்-ஐ மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண் டும்.

கருப்பையில் வைக்கக்கூடிய லெவொநர்ஜெஸ்ட்ரல் சாதன மும் காப்பர்-டி போன்ற அமைப்போடுதான் இருக்கும். ஆனால், இதில் காப்பருக்கு பதிலாக கருத் தடை மாத்திரை யை வைத்திருப்பார்கள். காப் பர் சிலருக்கு அலர்ஜி ஆகும். இதைப் பொருத் திக் கொள்வதால் மாத விலக்கின்போது மட் டும் அதிக ரத்தப்போக்கு மற் றும் வெள்ளைப்படுதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும்.

ஆனால், கருப்பையில் வைக்கக்கூடிய இந்த லெவொநர்ஜெ ஸ்ட்ரல் சாதனத்தில், காப்பருக்குப் பதில் லெவொநர் ஜெஸ் ட்ரல் மாத்திரை வைக்க ப்பட்டிருப்பதால், இது போன்ற எந்த பக்க விளை வுகளையும் இந்த மாத் திரை ஏற்படுத்து வதில் லை. இந்த மாத்திரை, விந்தணு கருப்பைக்குள் நுழை வதையும் ஐந்து வருடம் வரை தடுக்கிறது.

காப்பர்-டி பொருத்திக் கொ ண்டவர்கள் மூன்று வருடங் களுக்குப் பிறகும், லெவொ நர்ஜெஸ்ட்ரல் மாத்திரை பொரு த்திக் கொண்டவர்கள் ஐந்து வருடங்களுக்குப் பிறகும் கண்டிப்பாக மருத்துவரிடம் செ ன்று மாற்று சாதனத்தை பொருத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், அந்த சாதனத்தை கருப்பைக்குள் இரு ந்து நீக்கி விட வேண்டும்.

இப்படிச் செய்யாமல் விட் டால், நீண்ட நாட்கள் சாத னம் ஒரே இடத்தில் இருந்து இன்ஃபெக்ஷன் ஏற்பட வாய் ப்புண்டு. அதோடு, சாதனம் தன் சக்தியை இழந்து விடு வதால் மீண்டும் கருத்தரி க்கவும் வாய்ப்புண்டு. அதி லும் இந்தக் கருத்தரிப்பு கரு ப்பையில் நிகழாமல், கரு ப்பை குழாய் போன்ற இடங் களில் நிகழ்ந்து (Ectopic Pregnancy), இதனை கவனிக்காமல் விட்டுவிட்டால் உயி ருக்கு ஆபத்து ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அவசியம் மருத் துவரிடம் சென்று உரிய ஆலோசனைகளை பெற்றுக் கொள் ள வேண்டும்.

எக்காரணம் கொண்டும் அவ சர கால கருத்தடை மாத்தி ரை களை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக் கூடாது. காரணம், அந்த மாத்திரைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.

இவை தவிர, ஸ்பெர்மிஸைட்ஸ் (Spermicides) எனப்படும் ஜெல் வகைகளும் உண்டு. இவற்றை மருத்துவரின் பரிந்து ரையின் பேரில் கணவன் அல்லது மனைவி இருவரில் யாரே னும் உபயோகிக்கலாம். இவை, உள் ளே செல்லும் விந்தணு க்களின் உயிர் ப்புத் தன்மையை அழித்து விடும் சக்தி படை த்தவை.

கருத்தடை மாத்திரைகளை (Oral Contraceptive Pills) உட் கொள்பவர்கள், அவற்றை தினமும் சாப்பிட வே ண்டும். இவை கர்ப்பவாயில் சுரக்கிற மியூக்கஸ் (Mucous) என்கிற திரவத்தின் சுரப்பை அடர்த் தியாக்குவதால், விந்துவினால் நீந்தி உள்ளே செல்ல இயலாது. எனவே கரு உருவாகாது.

எத்தனை வருடங்கள் கரு உருவாகக் கூடாது என்று நினைக்கிறார்களோ அத்தனை வருடங்கள் தினமும் தவறா மல் இந்தக் கருத்தடை மாத்தி ரைகளை உட்கொள்ள வேண் டும். இந்த மாத்திரைகள் விந்தணுவை கருப்பைக்குள் நு ழை யவிடாமல் தடுப்பதோடு, சினைமுட்டை உருவாக்கத்தை யும் தடுக்கிறது. எனவே இரண்டு விதங்களில் கரு உருவாவது தடுக்கப்படுகிறது.

குழந்தை பிறந்து சில நாட்களே ஆன அம்மாக்களுக்கு தாய்ப் பால் கொடுப்பதே சிறந்த கரு த்தடை முறைதான். தாய்ப்பால் கொடுக்கும்போது பிட்யூ ட்டரி சுரப்பியில் சுரக்கும் புரோ லாக்டின் (Prolactin) ஹார் மோன், சினைப்பையில் (Ovary) கரு முட்டைகள் உரு வாகாமல் தடுக்கிறது.

கரு உருவாகக் காரணமாக இருக்கும் இந்த ஹார் மோன் தாய்ப்பாலை சுரக் கச் செய்யும் வேலையில் தன்னை ஈடு படுத்திக் கொள்வதால், அந்த சமயத்தில் கரு முட்டை உருவாக மிகவும் குறைவான வாய்ப்பே இருக் கிறது.

இவை தவிர இயற்கையான கருத் தடை முறையும் உண்டு. மாதவிடாய் ஆரம்பித்த மூன் றாவது நாளில் இருந்து பத் தாவது நாளுக்குள்ளும், பிறகு இருபதாவது நாளில் இருந்து அடுத்த மாதவிடாய் வருகிற நாள் வரையும் தாம்பத்திய உற வு வைத்துக் கொள்ளலாம். இந் த சமயங்களில் கரு உருவாவ தற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: