Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருத்தடை வரலாறு

இது சரியானது என்றும் இல்லை பிழையானது என்றும் ஒரு வாதம் இருந்து கொண்டே இருக்கிறது கால ஓட்டத்தில் இது தப்பில்லை என்னும் அளவிற்கு மாறியிருக்கிறது.

பெண்கருத்தடை முறையில் சில சட்டரீதியாகவும் பல சட்ட ரீதியற்றதாகவும் இருக் கும் நிலையில் இன்று நான் எடுத்து விளக்கப்போவது சட் ட ரீதியான முறை ஒன்றைப் பறிய தாகும்.

 கதை கீழே உள்ளது அதற்கு முன் விடயத்தை சொல்லிப் போகிறேன். இதற்கு T வடிவ லூப் பயன்படத்தப்படுகிறது இது intrauterine devices எனப்படும். இது T வடிவம் எனப் பொதுவாகச் சொன்னாலும் இதிலும் சில வடிவமாற்றங்கள் இருக்கிறது. இதன் செயற் பாடு என்னவென்றால் கரு ப்பை யின் உட்சுவர்களில் தொடுகையை எற்படுத்துவ தன் மூலம் அங்கே கருத்தங் கலை தடுக்கிறது. விந்தும் சூலும் சேர்ந்து கருக்கட்டப்ப ட்டபின் அக்கருவானது கருப் பையின் உட் சுவரான endometrium ல் பதிக்கப்படும். அனால் உட்சுவரில் ஏதாவது வேற்றுப் பொருட்கள் (foreign body) இருக்குமானால் கருப்பை அங்கே கருவளர அனுமதி க்காது.

இதில் இன்னுமொரு விடயம் என்னவென்றால் லூப் ன் இந்த இரு அந்தங்களும் சூல் வெளிவரும் வாசலான பாலோப் பியன் குழாயை (fallopian tube) அடைப்பதே காரணம் எனச் சொல்லிக் கொள்கி றார்கள். ஆனால் அங்கே ஏற்படும் தொடு கை தான் காரணமாகும் என்பதற்கு இதன் ஆரம்ப வரலாறே தீர் க்க சான்றாகும்.

கதை

முன்னைய காலங்களில் பாரசிக நாடுகளில் பொதிகளை சுமப்பதற்கு கழுதைகளைப் பயன்படுத்தவார்கள். அவை பல நீரே இல்லாத (நானில்லை ங்க தண்ணீர்) சிரமமான இடங்க ளுக்குச் செல்ல வேண் டியிருக்கும் அவை தம்முள் உறவு கொள்வதால் அடையும் கர்ப்பத்தால் அதை தொழில் ரீதியாக பயன்படுத்துவது சாதக மானதாக இருக்கவில்லை. அதனால் என்ன செய்தார்கள் தெரியுமா கூழாங்கற்களை எடுத்து அவற்றை வடிவாக அவி த்தார்கள் பின் அதனை கிரு மி நீக்கம் (sterilization) செய்து அந்த கற்களை பெண் உறுப்பு வழியாக (vagina) கருப்பை யினுள் (uterus) செலுத்தினார்கள். என்ன அதிர்ச்சியாக இருக்கி றதா எத்தனை கழுதை கள் விசக் காய்ச்சலால் (septic) இறந்தனவோ தெரி யல.

நீங்கள் பயப்பட வேண் டாம் மனிதன் இதனை தனக்கு சாதகமானதாக மாற்றிவிட்டான். இதை உட்செலுத்தவது கூட பெரிய வலி யான விடயமில்லை. மாதவிடாய் முடிவு ற்ற நாளில் தான் இதை உட்செலுத்த இலகுவானதாய் இருக் கும் காரணம் கருப்பை கழுத்த சற்று விரிந்திருக்கும். சாதா ரணமாகவே 8 வருடங்களிற்கு இதை பொருத்தியிருக் கலாம். இதனால் பக்க விளைவாக (side effect) சிலவேளை சிறிதளவு ரத்தப் போக்கு ஏற்படும் எனச் சொல்லப்பட்டாலும் மற்றைய தற்காலிக கருத்தடைகளுடன் ஒப்பிடும் போது உடலுக்கான பக்க விளைவு குறைவு தான் காரணம் (oral contraceptive peals) வாய் வழி உட்கொள்ளும் மாத்திரை களால் அதி லுள்ள (oestrogen and progesterone) காரணமாக உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் எற்படலாம். இதனால் அண்ணளவாக 6 மாதத்திற்கு 2 (kilo gram) அதிகரி க்கலாம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் சிலருக்க கருப்பை புற்று நோயும் எற்படச் சாத்தியம் இருக்கலாம் எனவும் சொல் லப்படுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: