Tuesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கருப்பையினுள்ளே குழத்தை இறந்துபோவதை தடுப்பது எப்படி?

கருப்பையில் இருக்கும் போதே குழந்தை இறந்து விடலாம். ஒரு குழந்தை உருவாகி 28 வார ங்களுக்கு பின்பு கருப் பையிலே இறந்து விட் டால் அது intra uterine death (IUD) எனப் படுகிறது.

அதாவது 28 வாரங்கள் (7 .மாதம் ) ஆன குழந்தைகள் இறந்தால் அது குழ ந்தையின் இறப்பு எனப்படுகிறது. அதற்கு முந்தி இறந்தால் அது கருக்கலைதை (miscarriage or abortion ) எனப்படுகிறது.

என்ன காரணத்தினால் இந்தக் குழந்தைகள் இறக்கலாம்?

உள்ளே இருக்கும் குழந்தைக்கு தேவையான அத்தியாவசிய பதா ர்த்தங்கள் அனைத்தும் தொப் புள் கொடியின்(umbilical cord) ஊடா கவே குழந்தைக்கு கிடைக் கிறது. சில வேளை இந்த தொப்புள் கொடி குழதை யின் கழுத்தைச் சுற்றிக் கொள்வதால் அதனூடாக ரத்த ஓட்டம் நடை பெ றாமல் குழந்தை இறக்கலாம்.

இந்த தொப்புள் கொடி சூழ் வித்தகம் (placenta) மூலமே தா யில் இருந்து ரத்தத்தைப் பெற்றுக் கொள்ளும். இந்த சூல் வித்தகம் கருப்பை யி ல் ஒட்டிக் கொண்டு தா யில் இருந்து குழந்தை க்குத் தேவையான வற்றை பெற்றுக் கொ டுக்கும். இந்த சூழ் வித் தகம் குழந்தை பிறந்த பின்பே கருப் பையில் இருந்து பிரி யும். சில வேளை இது

குழந்தை பெற முன்பே பிரிந்து விட்டால் குழந்தை இறந்து விடலாம். போதிய வளர்ச்சியில்லாத குழந்தைகள் கருப் பையினுல்லேயே இறந்து விடலாம்.

குழந்தையின் உடலிலே பிறப்புக் குறைபாடுகள் ஏதாவது இருப்பதால் குழந்தை இறக்கலா ம்.

இப்படி பல காரணங்கள் இருந்தா லும் எந்தக் காரணமும் இல்லா மலும் குழந்தை சடுதியாக கருப் பையினுல்லேயே இறந்து விட லாம்.

எப்படியான தாய்மாரின் குழந் தை இப்படி இறப்பதற்கான சந்தர் ப்பம் அதிகம்?

35வயதிற்கு மேற்பட்ட தாய்மார்

நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட தாய்மார்

உயர் குருதியமுக்கத்தால் பாதிக் கப்பட்ட தாய்மார் (pregnancy induced hypertension)

போசாக்கு இன்மையால் பாதிக்க ப்பட்ட தாய்மார். மது மற்றும் புகைப் பிடிக்கும் தாய்மார் .

இப்படி பல காரணங்கள் இருந்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லாத தாய்மாரின் குழந்தைகளும் சடுதியாக இறந்து விடலாம

இதைத் தடுப்பதற்கான வழிகள்?

முற்று முழுதாக இதைத் தடுக்க முடியாவிட்டாலும் மேலே நான் சொன்ன பிரச்சினைகள் உள்ள தாய்மார்கள் தொட ர்ச்சியாக வை த்தியரைச் சந்தித்து தங்கள் குழ ந்தையின் வளர்ச்சி மற்றும் மற் றைய விடயங்கள் சரியாக இருக் கிறதா என்பதை அவதானிக்க வே ண்டும்.

மேலும் நீரழிவு நோயினால் மற் றும் உயர் குருதியமுக்கத்தால் பாதிக்கப்பட்ட தாய்மாரின் குழந் தைகள் கொடுக்கப்பட்ட திகதிக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னே பிறக்க வைப்பது (மருத்துவ முறைமூலம்) உகந்தது. ஏனென்றால் இந்தக் காலத்திற்குப் பிறகு இந்தத் தாய்மார்களில் குழந்தைகள் சடுதியாக இறப் பதற்கான சந்தர்ப்பம் அதிகம்.

கருப்பையினுள்ளே போதிய வளர்ச்சியைப் அடையாத குழந் தை களை கூட குறிப்பிட்ட காலத்திற்கு முன்னமே பிறக்க செய்ய வேண்டி ஏற்படலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply