Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய் எதிர்ப்புச் சக்தியும், தாம்பத்ய உறவும்!

நமக்குள் இருக்கும் ‘இந்த நோய் எதிர்ப்புச் சக்தி’யின் அள வை அதிகரிக்கும் திறன் தாம்பத்ய உறவுக்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள் மருத் துவர்கள். சமீபத்தில் இது விஞ்ஞா னபூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள் ளது.

இது குறித்து தமிழகத்தின் பிரபல செக்ஸாலஜிஸ்டான டாக்டர் நாரா யணரெட்டி என்ன சொல்கிறார் பாருங்கள்…

“ஆமாம்…! கணவனும் மனைவி யும் மகிழ்வாக இருக்கும் தாம்பத் யத்தில்… குறிப்பாக அவர்களுக்கு ள் ரெகுலராக தாம்பத்ய உறவு (வாரம் ஓரிரு முறை) இருந்து கொண்டிருந்தால், அவர்கள் உடம் பின் நோயெதிர்ப்பு சக்தி கிட்டத்தட்ட 30% அதிகரிக்கிறது என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆறு வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் கிட்டத்தட்ட இருநூறு ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து அவர்கள் உடலின்நோயெதிர்ப்பு சக்தியை கண்டறிந்த போது கிடைத்த ரிசல்ட் இது!…

நோயெதிர்ப்பு சக்தி அதிகமாவதால், நம் உடம்பில் ஏற்படும் காயங்களும் கூட சீக்கி ரமே குணமாகின்றன. இப்படி சீக்கிரமே கா யம் ஆற மூல காரண மாக இருக்கும் ஹார் மோன் ஆக்ஸிடோ ஸின். இந்த ஹார்மோ ன் தாம்பத்ய உற வின் மகிழ்ச்சியான தருண ங்களில் அதிகம் சுரக் கிறது. (கவனியு ங்கள்… தம்பதியர், ஒருவருக்கொருவர் அந் நியோன்யம் இல்லாமல் கடனே என்று தாம்பத்ய உறவு கொள்ளும்போது இந்த ஆக்ஸிடோஸின் சுரப்பது கம்மியாகி விடும்.)

இதற்கான ஆய்வுக்காக சில தம்பதிகளிடம் ஸ்பெஷல் பர் மிஷன் வாங்கிக் கொண்டு அவர் கள் தொடையில் சூடு வை த்து காயம் ஏற்படுத்தினார்கள் மருத்து வர்கள். இந்தத் தம்பதியரில் நிஜ மாகவே பரஸ்பரம் அதிக பிரிய மும் அந்நியோ ன்யமும் கொண்டு தாம்பத்ய உறவில் ஈடுபட்டவர்க ளுக்கு அந்த தொடைப் புண் சீக்கி ரமே குணமாகிவிட்டது. மற்றவர்க ளுக்கு சீக்கிரம் குணமாகவில்லை. அமெரிக்கா வின் ஒஹை யோ மாநிலத்தில் நடந்த விஷயம் இது. 

சரி… நோயெதிர்ப்பு சக்தி அதிகமா னால் என்ன வரும்?

அதிகம் நோயில் விழாமல் இருப்பார்கள். அதனால் அவர்கள் வாழ்நாளும் அதிகமாகும்!…

திருமணம் ஆனவர்கள், திருமணமாகாதவர்களைவிட அதி க வருடங்கள், அதிலு ம் நோய் நொடி அதி கம் தாக்காமல் உயிர் வாழ்வதை நம்மில் பலர் நம் அருகிலேயே நிறைய பார்த்திருப் போம்!… ஸ்காட்லா ந்தில் முப்பந்தைந்தா யிரம் ஜோடிகளை வைத்து ஆய்வு செய்து இந்த உண்மையை கண்டு பிடித்திருக்கிறார்கள்!…

தாம்பத்ய உறவு விஷயத்தில் ஆக்டிவாக இருக்கும் ஆணு க்கும் பெண்ணுக்கும் ஹார்ட் ப்ராப்ளம்கூட குறைவாக வரு வதாக ஆய்வுகள் சொல்கின்றன.

தாம்பத்திய உறவு என்பது கிட்டதட்ட ஒரு ஏரோபிக் எக்ஸர் சைஸ் மாதிரிதான்! இந்த உறவின் போது எரிக்கப்படும் கலோ ரியின் அளவு, கிட்டத் தட்ட டிரெட்மில்லில் அரைமணி நேரம் நடப்பதற்கு சமமான விஷயம்!… கிட்டத்தட்ட இரு நூறு கலோரிகள் இந்த செயல் மூலம் எரிக்கப்படுகிறது.! எனவே இதை பிரியத்தை வளர் க்கும் எக்ஸர்சைஸாக இரு வரும் பயன்படுத்திக் கொள்ள முடியும்!’’. என்று டாக்டர் நாராயண ரெட்டி நிறைய பிளஸ் பாயிண்ட்களை சொல் லிக் கொண்டே போகி றார்.

அலுவலகத்தில் பிரச் னை, பணக் கஷ்டம், நண்பர்களின் துரோக ம் போன்ற விஷயங்க ளால் மனச் சோர்வுட ன் வீட்டுக்கு வரும் கண வருக்கோ, மனைவிக்கோ தாம்பத்ய உறவு என்பது ஒரு சிறந்த உடனடி மருந்து போல் செயல்படுகிறது. மறுநாள் அந் தக் கணவனோ, மனைவியோ தன் பிரச்னையை சமாளி க்கும் தெளிவுடனும், தன்னம்பிக் கையுடனும் இருப்பதை நாம் பார் க்க முடியும்!

பொதுவாக ‘டிப்ரஷன்’ எனப்படும் மனச்சோர்வுக்கு செக் ஸைத் தான் ஒரு நல்ல மருந்தாக டாக் டர்கள் சிபாரிசு செய் கிறார்கள்.

‘‘மிகவும் சரி… டிப்ரஷனில் பாதி க்கப்பட்டு வருபவர்களைக் கூர் ந்து கவனியுங்கள். அவர்கள், ரெகுலரான தாம்பத்ய உறவு இல் லாமல் இருக்கிறார்கள் என்பது புரியும்!…’ என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டியும் தன் மருத்துவ அனுபவம் மூலம்.

‘‘குறிப்பாக மிக அதிக டிப்ரஷனால் ஒரு சில பெண்களுக்கு ஏற்படும் ஹிஸ்டீரியா பிரச் னைகளுக்கு முற்காலத்தில் சில வெளிநாடுகளில் வைப் ரேட்டர் மூலம் ஏற்படுத்தும் செயற் கை செக்ஸை, டாக் டர்கள் ட்ரீட்மெண்டாகவே தந்திருக்கி றார்கள்!…’’ என்கி றார் டாக்டர்.

தாம்பத்ய உறவால் மேலும் என்ன ஹெல்த் ரீதியிலான உபயோகங்கள்?

* இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கிறதாம். தாம் பத்ய உறவின் போது சுரக்கும் அட்ரினலின் மற்றும் கார்டி சோல் ஹார்மோன்கள் தான் இப்படி மூளையின் செயல் திறனைத் தூண்டுகிறதாம். ஒரு ஜெர்மன் ஆய்வின் முடிவு இது.

* பெண்களுக்கு குறிப்பாக அந்த நேரத்தில் அதிக அளவில் ஈஸ்ட் ரோஜன் சுரப்பதால், அப்படி ரெகு லர் செக்ஸில் ஈடுபடும் பெண் களின் முகமும், தலைமுடியும் இன்னும் அதிக பளபளப்பாகிற தாம்.

* தன்னம்பிக்கையும் அதிகரிக்கி றது… தாம்பத்ய உறவின் உச்ச பட்ச இன்பத்தின் போது சுரக்கும் எண்டார்பின், செரடோனின் இர ண்டும், மக்களின் மன நிலையில் ஏற்படுத்தும் மாறுதலால், “வாழ்க்கையில் எல்லாம் முடியும்!…’’ என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம்.

* பெண்களுக்கு இது கேன்சர் ஏற்படாமல் தடுக்கவும் செய் கிறதாம். உறவில் ஈடுபடு ம் போது சுரக்கும் Dhea என்ற ஹார்மோன், கேன் சருக்கு முந்தைய ஸ்டே ஜில் இருப்ப வர்கள் எனி ல், அவர்களை அடுத்த ஸ்டேஜிக்குப் போக விடாமல் தடுக்கிற தாம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply