Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மைசூரைத் தாக்கிய காட்டு யானைகள் – வீடியோ

மைசூரைத் தாக்கிய காட்டு யானைகள்: ஒருவர் பலி, சொத்துக்கள் நாசம் 

காட்டில் இருந்து வழி தவறி மைசூர் நகருக்குள் நேற்று புகு ந்த 2 யானைகள் அட்டகாசம் செய்தன. அதில் குட்டி யானை துதிக்கையால், ஒரு ஏ.டி.எம். காவலாளியை தூக்கியடித்து கொன்றது. பசு மாடும் துவம்சம் செய்யப்பட்டது.

தமிழக வனப்பகுதியில் இருந்து பன்னூர் வழியாக வழிதவறி வந்த தாய் யானையும், அதன் குட்டியும் நேற்று அதிகாலை மைசூர் நகருக்குள் புகுந்தன. மூங்கில் பஜார் தெருவில் நுழைந்த யானைகள் திசைக்கு ஒன்றாக பிரிந்து சென் றன.

பொது மக்கள் அவற்றை விரட்ட முயன்றனர். இதனால் மிர ண்ட குட்டியானையிடம் ரேணுகா பிரசாத் (55) என்பவர் சிக் கினார். அவரை தும்பிக்கையால் சுழற்றி அடித்தும், தந்தத் தால் குத்தியும் கொன்றது.

பின்னர், வழியில் குறுக்கிட்ட பசுவையும் முட்டி மோதி கொன்றது. ரேணுகா பிரசாத் தனியார் வங்கியில் ஏ.டி.எம். காவலராக பணியாற்றி வந்தவர்.

நகரின் பல இடங்களை சுற்றி வந்த யானையை பிடிக்க, சாம் ராஜ் நகர் மாவட்டத்தில் இருந்து கும்கி யானைகள் வர வழைக்கப்பட்டன. அவற்றின் உதவியுடன் குட்டி யானை யை பிடிக்க முயற்சிக்கப்பட்டது.

வனத்துறை அதிகாரிகள் விரைந்து வந்து, அட்டகாசம் செ ய்து கொண்டிருந்த குட்டி யானையின் மீது மயக்க ஊசி யை சுட்டனர். ஆனால், 2 மயக்க ஊசியை சுட்டு செலுத்தியும் அது மயக்கம் அடையவில்லை. கண்ணில் பட்ட வாகனங் களை எல்லாம் முட்டித் தள்ளியது.

4 மணி நேரத்துக்குப் பிறகே அதற்கு மயக்கம் ஏற்பட்டு விழு ந்தது. பின்னர், அதை தனியார் ரிசார்ட் ஒன்றுக்கு கொண்டு சென்றனர். அங்கு அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தாய் யானை மைசூர் ஓவல் மைதானம் பகுதிக்கு சென்று விட்டது. அதன்பின், வனத் துறையினர் தொடர்ந்து முயற் சித்து, மைசூர் புறநகரில் நாயுடு பார்ம் என்ற பண்ணை அருகே யானையை மடக்கிப் பிடித்தனர்.

யானைகள் ஊருக்குள் நுழைந்ததால் மக்கள் பீதி அடைந்த னர். நகரம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்க ளை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

எனவே, சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். வீட் டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று போலீசார் மைக் கில் அறிவித்தப்படி சென்றனர். மாணவர்களின் பாதுகாப்பு கருதி மைசூர் நகர பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறி விக்கப்பட்டது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: