Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (12/06)

அன்புள்ள சகோதரிக்கு —
இரண்டு, மூன்று வருடமாய், யாரிடமும் சொல்லக் கூடாத என் குடும்ப ரகசி யங்களை, உங் களிடம் மட்டும் பகிர்ந்து கொள் கிறேன். எனக்கு, தகுந்த ஆலோச னை வழங்குவீர் கள் என்று நம்பு கிறேன்.

என் வயது 47. என் மனைவி, என்னை விட, ஐந்து மாதம் பெ ரியவள். எங்களுக்கு, 17 வயதில் ஒரு மகனும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். திருமணமான வேகத்தில் பிறந்த வர்கள். உறவில் நாட்டமில்லாமல், என் கட்டாயத்தின் பே ரில், எப்போதாவது ஒருமுறை, மாதத்தில் இரண்டு தட வை மட்டும் சம்மதிப்பாள்; அதுவும் விருப்பம் இல்லாமல். எப் போதுமே பிள்ளைகள் கூடவே படுத்துக் கொள்வாள். இர வில் நான் எழுப்பினாலும் கூட, அவளுக்கு விருப்பம் இல் லாத காரணத்தால், இரவென்றும் கூட பார்க்காமல், சப்த மாக பேசுவாள். அவள் போடும் சப்தத்தில் பிள்ளைகள் விழி த்துக் கொள்வர்; அவ்வளவு தான். இப்படியே, 14 வருடங்கள் பட்டும், படாமலும் வாழ்க்கை கழிந்து விட்டது.

மே 2008ல், அவளுக்கு மார்பில் ஒரு கட்டி வந்து விட்டது. பரி சோதித்த போது, அது, மார்பக புற்றுநோய் என்று சொல்லி விட்டனர். சிகிச்சையில் அவளது ஒருபுற மார்பகம் வெட்டி எடுக்கப்பட்டு விட்டது. உயிர் பிழைத்தால் போதும், பிள்ளை களுக்கு தாய் என்று ஒருத்தியாய் வாழ்ந்தால் போதும் என்று, நான் எவ்வளவோ பணம் செலவழித்து, காப்பாற்றி வைத் திருக்கிறேன்.

அவளும் மாத்திரை, மருந்து என சாப்பிட்டு, எப்போதும் போல வேலைக்கு செல்வதும், பிள்ளைகளை கவனிப்பது மாக இருக்கிறாளே தவிர, கணவனின் கஷ்டம் பற்றி இது வரை கவலைப்படவில்லை. அவளைத் தொட்டே, பல வருட ங்கள் ஆகிறது.

பகலெல்லாம் பள்ளிக்கூடம், பிள்ளைகள், மாலை நேர டியூசன் இப்படியே கழிந்தாலும், இரவில் நானுறங்கி நாளா கிறது மேடம். எத்தனையோ பேருக்கு கவுன்சிலிங் செய்யும் நான் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை.

என் மனைவிக்கு கேன்சர் என்பது என்னைப் பெற்ற தாய்க் கோ, என் உடன்பிறப்புகளுக்கோ நான் இதுவரை சொல்லவி ல் லை; சொல்லியிருந்தால், அவர்களாவது எனக்கு ஆறுதல் கூறியிருப்பர். என் மனைவி வழி உறவினர்களுக்குத் தெரியு ம். ஆனால், நன்கு படித்து டாக்டர், இன்ஜி னியர்களாக இரு க்கும் அவர்கள், இதுவரை ஒரு பேச்சுக்குக் கூட எனக்கு ஆறு தலோ, தேறுதலோ சொன்னதில்லை.

ஐந்து வருடமாய் நான் தனிமையில்தான் படுத்துக் கொள்கி றேன். நடை பிணமாய் இருந்து வருகிறேன். பள்ளிக் கூடத் திலும் கூட, மாணவர்களைத் தவிர யாரிடமும் சரியாக பேச மாட்டேன்; சுபாவம் அப்படி. என்னைப் பிடிக்காத தலைமை யாசிரியர், என்னை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்து விட் டார்; அதனால், மன உளைச்சல் வேறு. இதுவரை நான் நடத் திய பாடத்தில் ஒருவரும் தோல்வி அடைந்ததில்லை. அப்ப டியிருக்க, எனக்கேன் இந்த தண்டனை?

கிராமத்தில், ஐந்து உடன் பிறப்புகளுடன் பிறந்து வளர்ந் தவன் நான். கல்லூரிப் படிப்பு, ஆசிரியர் பயிற்சி எல்லாம் சென்னையில் தான். என் துரதிருஷ்டம் வேறு ஒரு மாநில த்தில் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம். நான் படித்த படிப்புக்கு என்னைத் தேடி வந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு, இந்த வேலையில் வந்து சிக்கலில் மாட்டிக் கொண்டேனோ என நினைக்கத் தோன்றுகிறது.

இப்பெண்ணை மட்டும் மணக்காமல், வேறொரு பெண்ணை பெற்றோர் விருப்பப்படி மணந்திருந்தால், என் வாழ்க்கை நான் எதிர்பார்த்தது போல அமைந்திருக்குமோ என எண்ணு கிறேன். காரணம், என் வழி உறவினர்கள் யாரும் அவ்வள வாய் படிக்காதவர்கள். அதனால், அவர்கள் என் வீட்டுக்கு வந்தால், என் மனைவி அவர்களை சரியாக கவனிப்பதோ அல்லது பேசுவதோ கூட கிடையாது. அதனால், அவர்களும் வந்த சுவடு தெரியாமல் கிளம்பி விடுவர்; பிள்ளைகளும் அவர்களிடம் பேச மாட்டார்கள்.

என் மகள் என்னிடம் மிகவும் பாசமாக இருப்பாள். அவளே என்னிடம் பேசி, இரண்டு வருடமாகிறது. பிளஸ் டூ படிக்கும் என் மகனும், என் பேச்சைக் கேட்பதில்லை. என்ன செய்வது? மாற்று வழி தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்; நான் கொள்கைவாதி. எந்த கெட்டப் பழக்கங்களுக்கும் அடி மையாகாதவன். எனக்கென்று ஒரு நற்பெயர் உள்ளது; அதை சிதைக்க விரும்பவில்லை. இருந்தும், உலக ஆசைகள் அத்த னையையும் துய்க்க வேண்டும் என என் மனமும், உடலும் விரும்புகிறது. வாழ்க்கை என்பது ஒருமுறை தானே?

எப்போதெல்லாம் ஓய்வு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் ஏதாவதொன்றை படிப்பது, பிள்ளைகளின் பாடப் புத்தகங்க ளை திருத்துவது, என, என்னை ஈடுபடுத்தியும், என்னால், என் வீட்டைப் பற்றி நினைக்காமல் இருக்க முடியவில்லை. யோசித்து, யோசித்து தூக்கமில்லாது போனதாலோ என்ன வோ, எனக்கு வயதான தோற்றம் வந்துவிட்டதாக என் நண் பர்கள் சொல்கின்றனர்.

என் வயது, 47 தான் என்றால், யாரும் நம்புவதில்லை; அது, தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகிறது. தற்கொலை முடி வுக்கு வரும் போதெல்லாம், என் வயதான அம்மாவும், என் இரண்டு பிள்ளைகளும்தான் நினைவுக்கு வருகின்றனர். என்ன செய்வது?

மாடி வீட்டு ஏழையாய் வாழ்ந்து வருகிறேன். கடவுள் மீதும் கோ பம். அதனால், கோவிலுக்கு செல்வதும், வேதப் புத்தகம் வாசிப்பதும் நின்று, மூன்று வருடமாகின்றன. “என்னைப் போல உத்தமமாய் வாழ்ந்தவன் அல்லது வாழ்கிறவன் யார்? எனக்கேன் இந்த சோதனை?’ என, கடவுளையே கேள்வி கேட்கிறேன். கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால், என் னை இப்படி ஏங்க வைப்பாரா? என் கடன் பணி செய்து கிடப் பதே என்ற லட்சியவாதியை, வேறொரு இடத்துக்கு மாற்றம் செய்த தலைமை ஆசிரியரை தண்டிக்காமல் இருப்பாரா?

இன்னும் சொல்ல மறந்த கதை ஏராளம் மேடம்… எனக்கு எத்தகைய கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது என உங்களு க்கு தோன்றுகிறதோ அதை தயவுடன் தாருங்கள்.
— இப்படிக்கு,
பெயர் சொல்ல விரும்பாத உங்கள் சகோதரன்.

அன்புள்ள சகோதரருக்கு —
உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் சம வயது. உங்களிரு வருக்கும், 17 வயதில் மகனும், 15 வயதில் மகளும் இருக்கி ன்றனர். நீங்கள், பிளஸ் 2 ஆசிரியர். உங்களது மனைவியின் பணி பற்றி, கடிதத்தில் தகவல் இல்லை; இருந்தாலும், அவ ரும் ஒரு ஆசிரியை என யூகிக்கிறேன். உங்களின் மனைவி, “செக்ஸ்’க்கு ஒத்துழைக்க மறுக்கிறார். மகள் உங்களுடன் பே சி, இரண்டு வருடங்கள் ஆகின்றன. மகனோ உங்கள் பேச் சை கேட்பதில்லை. நேர்மையான, ஒழுக்கமான, பிளஸ் 2 ஆசிரியருக்கு, “செக்ஸ்’ கிடைக்க வில்லையெனில், இந்த ஜெகத்தை அழித்து விடுவோம் என ஆர்ப்பரிக்கிறீர்கள்.

தனக்கு விருப்பமில்லா விட்டாலும், மாதத்திற்கு இரு தட வை, செக்ஸ் வைத்துக் கொள்ள உங்கள் மனைவி அனுமதி ப்பது நார்மலான விஷயம். திருமணமாகி, 18 வருடங்களான தம்பதியர்,

இந்த கோட்டாவில் தான் தாம்பத்யம் மேற்கொள்கின்றனர்.
குழந்தைகள் வளர்ப்பில் முழு ஈடுபாடு உள்ள தாய்மார்கள், உங்கள் மனைவி மாதிரிதான் இருப்பர். சில கணவர்களின் தாம்பத்யம், உணர்வுகளை தூண்டிவிட்டு, முன்னதாகவே அடங்கி விடும். அது எட்டு இட்லி சாப்பிடுவோருக்கு, ஒரு விள்ளல் இட்லி மட்டும் ஊட்டி விடுவது போன்றது. விள்ளல் இட்லி சாப்பிட்டுவிட்டு, அசுர பசியுடன் அல்லல் படுவதற்கு பதில், முழு உண்ணாவிரதமே இருந்து விடலாம் என்று இருந்து விடுகின்றனர் சில பெண்கள்.

மார்பக புற்றுநோயால் ஒற்றை மார்பகத்தை இழந்து, உயிர் தப்பி வந்திருக்கிறார் உங்கள் மனைவி. அவருக்கு செலவு செய்ததை, “பணம் செலவழித்து காப்பாற்றி வைத்திருக் கிறேன்…’ என்கிறீர்கள். புற்றுநோயிலிருந்து மீண்டு வந்த பெ ண், தன்னுடைய நோயை பற்றி வருந்தாமல், உங்களின், “செக்ஸ்’ கஷ்டம் பற்றி கவலைப்பட வேண்டும் என்றிருக் கிறீர்கள்.

மனைவிக்கு புற்றுநோய் என்பதை, உங்கள் வீட்டாருக்கு தெரியப்படுத்தவில்லை. தெரியப்படுத்தி இருந்தால், உங்க ளுக்கு வந்து ஆறுதல் சொல்லியிருப்பர் என்று கூறுகிறீர்கள். ஆறுதல், உயிர்கொல்லி நோயிலிருந்து மீண்ட உங்கள் மனைவிக்கா, அகால நேரத்திலும் காமப் பித்து பிடித்து அலையும் உங்களுக்கா? மனதை தொட்டு சொல்லுங்கள், யாருக்கு தேவை?

மனைவியின் புற்றுநோய், மனைவி வீட்டாருக்கு தெரியும். அவர்களும் உங்களுக்கு ஆறுதல் கூறவில்லை என்றிருக்கி றீர்கள். இந்த நினைப்பு, சுயநலத்தின் உச்சக்கட்டம்.

உங்கள் மனைவியை மட்டும் மணக்காமல், வேறொரு படிப்பறிவு குறைந்த பெண்ணை மணந்திருந்தால், வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்கிறீர்கள். யார் யாருக்கு, யார் யாரை ஜோடி சேர்க்க வேண்டும் என்பதை கணித்துதான் இறைவன் திருமண முடிச்சுகளை போடுகிறான். நமக்கு வாய்த்திருக்கும் மனைவி, நமக்கு மிக, மிக பொருத்த மானவள் என்ற மனதிருப்தி தேவை.

நீங்கள் சிறந்த ஆசிரியர், கொள்கைவாதி, கெட்ட பழக்க, வழ க்கங்கள் இல்லாதவர், உத்தமர்; ஒத்துக் கொள்கிறேன். இந்த மாதிரியான குணாதிசயங்கள் கொண்டவர்கள், ஒரு நாளை க்கு நான்கு தடவை, “செக்ஸ்’ வழக்கப்பட வேண்டும் என்ற விதியா உள்ளது?

உங்கள் முசுடுத் தன்மை தான், உங்களிடமிருந்து மகன், மகளையும், பள்ளி மக்களையும் பிரிக்கிறது. கெட்ட பழக்க, வழக்கங்கள் இல்லாதவர் நல்லவர்; கெட்ட பழக்க, வழக்கம் உள்ளவர் கெட்டவர் என்பது அறிவீனம்.

மொத்தத்தில் நான் உங்களுக்கு சொல்ல விரும்புவது என்ன தெரியுமா சகோதரரே…

சுயநலத்தை விட்டு, மனைவியுடன் மனம் விட்டு பேசுங் கள். தொடுதல், சீண்டுதல், முத்தமிடுதல் பழைய நிகழ்வு களை அசை போடுதல் கூட, “செக்ஸ்’தான். இருவரும் ஹோ மியோபதி மருத்துவரை அணுகி, மருந்துவ ஆலோசனை பெறுங்கள்.

சதா புலம்பிக் கொண்டிருந்தால், 47 வயது முகம், 67 வயது முகமாகி விடும். எது வந்தாலும், எது போனாலும் சந்தோஷ மாய் இருந்து, 27 வயது முகம் பெறுங்கள். கடவுள் ஒன்றை கொடுப்பதும், ஒன்றை தட்டி பறிப்பதும், மனித ஈசனுக்கு புரியாத திருவிளையாடல்கள்.

மகன், மகளுடன் செய்தி தொடர்பை, தந்தைக்குரிய பொறுப் புடன் வடிவமையுங்கள். செக்ஸ் தொந்தரவு செய்யாது, மனைவி, மக்களுடன் சேர்ந்து படுங்கள்.

ஆசிரியர் பணி இறுக்கங்களை, வீட்டுக்கு கொண்டு வந்து கொட்டாதீர்கள் சகோதரரே…

என் ஆலோசனை உங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னியுங்கள். என் ஆலோசனையின் நோக்கம், அடுத்த தலை முறைக்கு நிவாரணம் தேடுவதே!

—என்றென்றும்

 தாய்மையுடன், சகுந்தலா கோபிநாத்.

 (தினமலர் வாரமலர் நாளிதழுக்கு நன்றி)

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: