Wednesday, February 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

செவிப் பாதுகாப்பு

‘காதுக் குடுமியை அகற்றுவது எப்படி?’ இப்படிக் கேட்பவர்கள் பலர். குப்பை வாளிக் குள் (Dustbin) இருக்கு ம் குப்பைகளை அகற் றுவதுபோல காதுக் குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர் கள் நினைக்கிறார் கள். 

உண்மையில் காதுக்கு டுமி என்பது காதையும் செவிப்பறை யையும் பாதுகாப்பதற் காக ந‌மது உடல் தானகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் போன்றது. 

பொதுவாக இது ஒரு மென்படலம் போல காதுக் குழாயின் சுவரின் தோலில் படிந்திரு க்கும். இதனால் கிருமி கள், சிறு காயங்கள், நீர் போன்றவவை காதைத் தாக்காது பாதுகாக்கிற து. அத்துடன் காதை ஈர லிப்பாகவும் வைத்திருக் கவும் உதவுகிறது. அதி லுள்ள கிருமியெதிர்ப்பு (antibacterial pro- perties) பண்பானது வெளிக் கிரு மிகள் தொற்றி, காதின் உட் புறத்தில் நோயை ஏற்படுத்து வதையும் தடுக்கிறது. 

காதுக்குடுமி (Cerumen) என்பது இயல்பாக எண் ணெய்த் தன்மை உள்ள ஒரு திரவமாகும். சருமத் தில் உள்ள சில சுரப்பிக ளால் (Sebaceous and Cer- uminous glands) சுரக்கப்ப டுகிறது. ஒவ்வொருவரது உடல் நிலைக்கும் ஏற்ப இது நீர்த்தன்மை யாக வோ, பாணிபோலவோ, திட மான கட்டியாகவோ இருக்கக் கூடும்.

காதின் சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், முடித் துண் டுகள், ஆகியவற்றுடன் கலந்து திடப்பொருளாக மாற்ற முறும். தலை முடியின் உதிர்ந்த கலங்கள் அதிகமாக இருப்ப தும், எவ்வளவு நீண்ட காலம் வெளி யேறாது காதினுள்ளே இருந்தது என்பதும் எந்தளவு இறுக்கமாகிறது என்பதற்கு முக்கிய காரணங்க ளாகச் சொல்லலாம். 

காதுக்குடுமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது என்பதால் வழ மையாக எவரும் அதனை அகற்ற வேண்டிய தில்லை. தினமும் புதிது புதிதாக உற்பத்தியாகி வர பழை யது எம்மையறியாது தானாகவே சிறிது சிறிதாக வெளி யேறிவி டும். 

மென்மையான குடுமியானது முகம் கழுவும் அல்லது குளி க்கும் நீருடன் கலந்து வெளியேறிவிடும். அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். சிலரு க்கு, பல்வேறு காரணங்க ளால் வெளி யேறாது உள் ளேயே தங்கி இறுகி விடு வதுண்டு. காதுக் குழாய் ஒடுங்கலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்ப தும் காரணமாகலாம். 

சிலருக்கு அது இறுகி, கட் டியாகி வெளியேற மறுப்ப துண்டு. அது அதிகமாகி செவிக்குழாயின் விட்டத்தின் 80 சத விகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமா கும். ஒரு சிலருக்கு வலி ஏற்படலாம். வேறு சிலருக்கு கிரு மித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ள து. 

காதுக் குடுமிப் பிரச்சனை என மருத்துவர்க ளி டம் வருப வர்க ள் அனேகர். வரு டாந்தம் கிட்டத்தட்ட 12 மில்லியன் அமெ ரிக்க மக்கள் இப்பிரச்சனைக்காக மருத்துவ உதவியை நாடுவதாக தகவ ல்கள் தெரிவிக்கின்றன. இதில் 2/3 ருக்கு அதாவது 8 மில்லி யன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.

இதை அகற்றவது எப்படி?

பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ் நல்லதா, சட்டைப் பின் நல் லதா, நெருப்புக் குச்சி நல்லதா? 

இவற்றைக் காதுக்குள் விடுவதை ப் போன்ற ஆபத்தான செய ல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மை யான சரும த்தை உராசி புண்படுத்தக் கூடும். அல்லது அவை உராசிய இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும். அல்லது அவை காதுக் குடுமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவி ப்பறையைக காயப்படுத்தலாம். இதனால் நிரந்த ரமாக காது கேட்காமல் செய்துவிடவும் கூடும். எனவே இவ ற்றை உபயோகிப்பது அறவே கூடாது. 

காதுக் குடுமியை கரைத்து இளக வைத்தால் தானாகவே வெளி யேறிவிடும். மிகவும் சுலபமானது குடுமி இளக்கி நீர் தான். உப்புத் தண்ணீர், சோடியம் பைகார்பனேட் கரைசல், ஒலிவ் ஓயில் போன் றவையும் உதவக் கூடும். அதற் கெனத் தயாரிக்கப்பட்ட விசேட (Waxol, Cerumol)காதுத்துளி மருந்து களும் உள்ளன. ஐந்து நாட்கள் காலை, மாலை அவ்வாறு விட்டபின் சுத்தமான வெள்ளைத் துணியை திரி போல உருட்டி அதனால் காதைச் சுத்தப்படுத்துங்கள். பட்ஸ், குச்சி போன்றவற்றைப் பாவிக்க வேண்டாம். அல்லது சுத்தமான நீரை காதினுள் விட்டும் சுத்த ப்படுத்தலாம்.

இவ்வாறு வெளியேறாது விட் டால் மருத்துவர் சிறிய ஆயு தம் மூலம் அகற்றக் கூடும். 

அல்லதுஅதனை கழுவி வெளி யேற்றுவார். இதற்கென விசே டமாகத் தயாரிக்கப்பட்ட ஊசி போன்ற குழாய்கள் மூலம் நீரைப் பாச்சி கழுவுவார்கள். இதன்போது எந்தவித வலி யும் இருக்காது. சில விசேட சிறு ஆயுதங்கள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம் சுலப மாக அகற்றவும் முடியும்.தற்போதுள்ள குடுமி அகற்றப்பட்ட போதும் சிலருக்கு இது மீண்டும் மீண்டும் சேரக் கூடிய சாத் தியம் உண்டு.

மீண்டும் ஏற்படாமல் தடுக்க முடியுமா?

அதற்கென மருந்துகள் எதுவும் கிடையாது. வாரம் ஒரு மு றை குளிக்கும் போது கையா ல் ஒரு சிரங்கை நீரை காதுக் குள் விட்டுக் கழுவுவது அத னை இறுகாமல் தடுக்கக் கூடும். ஆயினும் காதில் கிரு மித் தொற்றுள்ளவர்களும், செவிப் பறை துவாரமடைந்த வர்களும் அவ்வாறு சுத்தம் செய்வது கூடாது. 

அடிக்கடி குடுமித் தொல்லை ஏற்படுபவர்கள் 6 முதல் 12 மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறவோ குடுமியை அகற்றவோ நேரலாம். ஆயினும் காது க் குடுமியை நாமாக அகற்றுவதை விட, தன்னைத்தானே சுத்தம் செய்யும் படி காதின் பாதுகாப்பை அதனிடமே விட்டு விடுவதுதான் உசித மானது. 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன். குடும்ப வைத்தியர், ஜீவநதி

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: