Thursday, October 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்வி கட்டணம்: நீதிபதி ரவிராஜபாண்டியன் குழு இன்று வெளியிட்டது

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பெற் றோர்களிடமிருந்து புகா ர்கள் வந்தன. இதையடுத்து கல்வி கட்டணத்தை முறை ப்படுத்த ஓய்வு பெற்ற நீதி பதி கோவிந்தராஜன் தலை மையில் அரசு ஒரு குழு அமைத்தது. அந்த குழு தமிழ் நாட்டில் உள்ள 10,954 தனியார் பள்ளிக்களுக்கா ன கட்டணத்தை கடந்த ஆண்டு மே மாதம் நிர்ண யித்தது.
இந்த கமிட்டி நிர்ணயித்த கட்டணம் போதாது என்றும், இதை வைத்து பள்ளிகளை நடத்த இயலாது என்றும் 6,400 தனியார் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டும் ஒரு உத்தரவு பிறப்பித் தது. மேல் முறையீடு செய்த தனியார் பள்ளிகளுக்கு நேரடி விசாரணை நடத்தி இறுதி உத்தரவு அளிக்குமாறு கோர் ட்டு தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் நீதிபதி கோவிந்தராஜன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண குழு தலைவராக நீதிபதி கே. ரவி ராஜ பாண்டியன் நியமிக்கப்பட்டார். அவர் மாவட்ட வாரியாக பள்ளி நிர்வாகிகளிடம் விசா ரணை நடத்தினார்.
மழலையர், தொடக்க, நடு நிலைப்பள்ளிகளுக்கு முத ல் கட்ட மாக விசாரணை மேற்கொண்டார். இதைய டுத்து உயர் நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளுக் கும் ஆய்வு நடந்தது. கடந்த மாதம் 4-ந் தேதி ஆய்வு முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு திருத்தி அமைக்கப் பட்ட புதிய கல்வி கட்டண குறித்த அறிவிப்பு இன்று வெளி யிடப்பட்டது. சென்னை கல்லூரி சாலையில் உள்ள அலு வலகத்தில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கமிட்டியின் தனி அலுவலர் திருஞானசம்பந்தம் புதிய கல்வி கட்டண குறித்த அறி விப்பை வெளியிட்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நீதிபதி ரவி ராஜ பாண் டியன் தலைமையிலா ன குழு, 6,355 தனியார் பள்ளிகளுக்கு புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. பள்ளி அமைவிடம், மா ணவர்கள் எண்ணிக் கை, உள் கட்டமைப்பு வசதி, ஆசிரியர், பணி யாளர் ஊதியம், நிர்வாக பராமரிப்பு செலவுகள் அனைத்தும் மறு கட்டண நிர்ணயத்துக்கு உரிய காரணங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது.
2010-11, 2011-12, 2012-13 ஆகிய 3 ஆண்டுகளுக்கு பொருந்தும் வகையில் மறு கட்டண நிர்ணய ஆணை அமைந்துள்ளது. இ ந்த கட்டண நிர்ணய சட்டத்தின்படி அங்கீகாரம் உள்ள பள் ளிகளுக்கு மட்டுமே பொருந்தும். தொடர் அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்த பள்ளிகளுக்கு மறு கட்டண நிர்ணயம் செய்ய பெற்று இருந்தாலும் அங்கீகாரம் பெற்ற பின்னரே அது பொருந்தும். அங்கீகாரகாலம் நிறைவடைந்து 3 ஆண்டு கால ம் கடந்தும் தொடர் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்காத பள்ளி களுக்கும், அங்கீகாரம் மறுக்கப்பட்ட பள்ளிகளுக்கும் மறு நிர்ணயம் செய்யப்படவில்லை.
 
மேலும் இத்தகைய பள்ளிகளுக்கு 7-5- 2010ல் குழு அளித்த நிர்ணய ஆணையும் தற்போது நீக்கம் செய்யப்படுகிறது. மத்திய- மாநில அரசு பள்ளிகள், அர சு நிதி உதவி பெறும் பள்ளிகள், ஊராட்சி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளுக்கு பொருந்தாது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ. பள்ளி கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், மெட்ரிக்குலேசன், ஒரு பகுதி அரசு நிதி உதவி பெற்று ஒரு பகுதி சுயநிதி பிரிவின் கீழ் செயல்படும் பள்ளிகள் ஆகிய அனைத்தும் தனியார் பள் ளிகள் கீழ் வருகிறது. அவற்றுக்கு இந்த புதிய கல்விக் கட்ட ணம் பொருந்தும். தனியார் பள்ளிகளு க்கான புதிய கல்விக் கட்டணம் குறித்த அறிவிப்பு அந்தந்த மா வட்ட முதன்மை கல்வி அதிகா ரிகள் மூலம் வெளியிடப்ப டுகிறது.
தனியார் பள்ளிகள், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத் தில் கட்டண விவரம் குறித்த தகவலை பெற்றுக் கொள்ள லாம். ஒவ்வொரு பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டண விவரம் விரைவில் பள்ளி கல்வி இணைய தளத் தில் வெளி யிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாவட்டத்தில் 430 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் 230 பள்ளிகள் மேல் முறையீடு செய்தன. அவற்றுக்கு புதிய கல்வி கட் டணம் பொருந்து ம். புதிய கல்வி கட் டணம் 15 சதவீத் தில் இருந்து 25 சத வீதம் வரை உயர்த் தப்பட்டு இருக்கலா ம் என்றும் கூறப் படுகிறது.
NEWS IN MALARMALAR

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: