Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதல் குழந்தையிடம் இரண்டாவது குழந்தையைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.

முதல் குழந்தை பிறந்ததும், தாய், தந்தை இருவருக்குமே முதன் முதலில் பெற்றோரான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அத னால், இருவருமே அன்பு முழுவதையும் பொழிந்து முதல் குழந்தையை வளர்க்கின்றனர். இரண்டாவது குழந்தை பிறந்ததும், முதல் குழந் தையின் அன்பு பகிர்ந்தளிக்கப்படு கிறது. பெற்றோரின் அன்பை முழுமையாக அனுபவித்த முதல் குழந்தைக்கு, இதனால் ஏமாற்றம் ஏற்பட்டு அது ஏக்கமாக மாறுகி றது. பெற்றோரைப் போன்றே உற வினர்களின் அன்பும் பகிர்ந்தளிக் கப்படுகிறது. எனவே, குழந்தையி டம் பார பட்சம் காட்டாமல் வளர்க்க வேண்டும். அதற்கான வழி முறைகள் இதோ…

குழந்தையிடம் பாரபட்சம் காட்டாதிருக்க, பெற்றோருக்குத் தேவையான சில வழிமுறைகள்:

முதல் குழந்தைக்கு அன்பு முழுவதையும் பொழிந்துவி ட்டு இரண்டாவது குழந்தை வந்ததும் அதனை அதிகமாகப் பரா மரிக்க ஆரம்பிக்கின்றனர். சிறு குழந்தை என்பதால், இர ண்டாவது குழந்தையைக் கொ ஞ்சுகின்றனர். இதில், ஆண், பெண் வித்தியாசமில்லை. பெரிய குழந்தையின் ஏக்கம் இரண்டாவது குழந்தையின் மேல் கோபமாக மாறுகிறது. இதை தவிர்ப்பதற்கு இரண்டா வது குழந்தை வயிற்றில் இருக்கும் போதே, “நீ தனியா விளையாடுகிறாய்; பாப்பா வந்ததும் உன்னுடன் சேர்ந்து வி ளையாடும். நீ தான் பாப்பா வுக்கு எல்லாம் சொல்லித் தர வேண்டும்” என்று சொல்லி சொல்லி, முதல் குழந்தையி டம் இரண்டாவது குழந்தை யைப் பற்றிய ஆசையை வளர்க்க வேண்டும்.

உறவினர்கள் ஒரு குழந்தை யிடம் அன்பை காட்டிச் சென் ற பின், தாயோ அல்லது தந் தையோ மற்றொரு குழந்தை யிடம் அரவணைப்பைக் கா ட்டி “உன் சகோதரன் (சகோதரி) தானே, நீ விட்டுக் கொடுக்க வேண்டும்” என்பதை, நம் அன்பில் சிறி தும் குறையாமல் புரிய வைக்க வேண்டும்.

கொஞ்சம் வளர்ந்த பின், சிறுவர் சிறுமியாயிருக்கும் போது பள்ளி க்கோ அல்லது பக்கத்திலிருக்கும் உறவினர் வீட்டுக் கோ அனுப்பும் போது, சிறு குழந்தையைப் பாது காக்கும் பொறுப்பை பெரிய குழந் தையிடம் ஒப்படைக்க வேண்டும். அப்போதுதான், பெரிய குழந்தைக்கு சிறு குழந்தையின் மீது, பொறுப்புடன் கூடிய அன்பு வளரும். மேலு ம், அன்பு, உணவு என அனைத்தையு மே இரு குழந்தைகளுக்கும் சம மாகக் கொடுக்க வே ண்டும்.

ஒரு குழந்தை படிப்பி லோ, விளையாட்டி லோ திறமையாக இரு க்கலாம். குணத்திலோ மற்றவருடன் பழகும் விதத்தி லோ சிறப்பாக இருக்கலாம். ஆதலால், எக்காரணத்தைக் கொண் டும், ஒரு குழந்தையை மற்ற குழந்தையோடு ஒப்பிட்டுப் பேசக் கூடாது. தாழ்வு மனப்பான்மை உண்டாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்த விதத்திலும் தன் ஆதிக் கத்தை மற்றொன்றின் மேல் செலுத்தாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அமைந்தால், சகோ தர, சகோதரி பாசம் என்பது ஆயுள் வரை அன்புடம் நீடிக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: