Monday, September 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்துக்களை பாதுகாக்கும் வழிகளும் அதன் மருத்துவ குணங்களும்

முத்துக்களை பாதுகாக்கும் முத்தான வழிகள்…

* முத்துக்கள் ஒன்றுடன் ஒன் று உரசாமல் வைக்க வேண் டும்.

* தங்க நகை அல்லது மற்ற ஆபரணங்களோடு முத்து நகைகளை வைப்பதை தவிர் க்க வேண்டும். அப்படி வைத் தால் முத்துக்களில் கீறல் விழும்.

* காற்றுப் புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வை க்க வேண்டாம்.

* சென்ட், ஸ்பிரே மற்றும் வாசனைத் திரவியம், பொருட்க ளுடன் முத்து மாலைகளை வைக்கக்கூடாது. ஏனெனில் ரசா யனங்கள் முத்துக்களின் தன்மையில் மாற்றத்தை ஏற் படுத்தும்.

* முத்துமாலையை அ ணிவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத் தம் செய்ய வேண்டும்.

* காகிதம் மற்றும் சா யம் போகும் துணியி ல் முத்து நகைகளை பொதிந்து வைக்கக் கூடாது. இவற்றைப் பயன்படுத்தி முத்து நகைகளை துடை க்கவும் கூடாது.

* அமிலங்கள், ரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக் களை வைக்க வேண்டாம்.

* நகைகளை கைகளால் எடுப்பதற்குப் பதில் ஹேர்பின், குச்சி களைக் கொ ண்டு இழுக்கவோ, தரையில் உரசிய படி இழுப்பதையோ தவிர்க்க வேண் டும்.

* நகைப் பெட்டியில் துணிமெத்தையில் முத்துநகைகளை வைத்துப் பயன்படுத்துவதே சரியான முறை.

முத்தின் மருத்துவ குணங்கள்:

* முத்துக்களை ஆண்கள்- பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் உடலில் உரசி கரையும். அப்போது உடல் சூடு தணியும் என்று மருத்துவ நூல்கள் கூறுகின்றன.

* முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து உள் ளது. பல்வேறு நோய்களைத் தீர்க்கும் மருந்துகளில் முத்து பயன்படுத்தப் படுகிறது. முத்துக்களை பல்வேறு மூலிகைச் சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகள் தயாரிக்கப் படுகிறது.

* அழகு சாதனங்கள், பற்பசை கள் தயாரிக்க முத்து பயன்படு கிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலை வலி போன்ற நோய்களை கட்டு ப்படுத்துவதில் முத்து முக் கிய இடம் வகிக்கிறது.

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து உருண்டு முத் து ஆக மாறுகிறது. குவாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனோ போ ன்ற கடல்வாழ் மெல்லு டலி உயிரினங்களே முத்துக்களை உருவா க்கும் சிப்பி களாகும்.

* பத்து நிறங்களில் முத் துக்கள் கிடைக்கிறது. பொதுவாக இளம்சிவப்பு அல்லது காபி நிறங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. அந்தமான் தீவுக ளில் கருப்பு நிற முத்துக்கள் கிடை க்கின்றன.

* ஜப்பானில் செயற்கை முத் துக்கள் விளைவிக்கப்படுகிறது . மிமிமாட்டோ என்ற ஜப்பானி யர் செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுகிறார். இவர் 1893-ம் ஆண்டு முதல்முறை யாக செயற்கை முத்தை வளர்த்து சாதனை படை த்தார்.

* இந்தியாவில் மும்பை நகரில் அதிக முத்துநகைகள் விற் பனையாகிறது. ராஜஸ்தான் மக்கள் முத்து நகைகளை அதிக மாக பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் முத்துக்கு சிறப்பு பெற்ற நகரம் தூத்துக்குடியாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply