Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

IAS (2011) வெற்றியாளர் திவ்ய தர்ஷினி – சிறப்பு பேட்டி

10 வருடங்களுக்கு முன்னால் தமிழகத்திலிலிருந்து சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களி ன் எண்ணிக்கை மிக மிக குறைவு. ஆனால் அண்மை காலங்களில் இத்தேர்வில் வெற் றியாளர்கள் கூடிக் கொண்டே வருகின்ற னர். இதற்கு முக்கிய காரணங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ள உயர் கல்வி வளர் ச்சி, மிக குறைவான கட்டணத்தில் தரமான பயிற்சிகளை வழங்கும் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையங்கள், இளைஞர்களிடை யே அதிகரித்து வரும் விழிப்புணர்வு, பெற்றோர்களின் ஊக்குவிப்பு ஆகியவைகள்தான். 

அதனால்தான் தமிழகம் வெற்றி சிகரத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. அதில் மிகப்பெரிய சாதனையாக, இந்தா ண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் முதலிடத் தை பெற்று தமிழக வரலாற்றில் மிகப்பெரிய சாதனை புரிந்துள்ளார் திவ்ய தர்ஷினி. அவரது வெற்றி இத்தேர்வுக்கு தயார் செய்துவரும் ‘நன்றி – பொது அறிவு உலகம்’ வாசகர் களுக்கு  அளித்த (ஓர் இணையத்தில் கண்டெடுத்த) சிறப்புப் பேட்டியை உங்களுக்காக இங்கு வெளியிடுகிறோம்.

வாழ்த்துகள். உங்களின் வெற்றி தமிழகத்திற்கு கிடைத்த கௌர வம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற் றியை எப்படி உணர்கிறீர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்கு மகிழ்ச்சி யடைகிறேன். இந்தியாவில் முதல் ரேங்க் வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தை முதன்மை யாக்க நான் ஒரு காரணமாக இருக்கும் போது, அது மிகவும் சந்தோஷத்தை தருகிறது. தமிழ்நாட்டிற்கு என்னால் பெரு மை சேரும் என நினைக்கிறேன்.

உங்கள் படிப்பை பற்றி கூறுங்கள்…..
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். நான் சென்னையில் உள்ள அசன் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் படித்தேன். பின்பு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தி ல் உள்ள ஸ்கூல் ஆப் எக்ஸ்லன்ஸ்லாவில் சட் டம் படித்தேன். படிப்பை முடித்த பின்னர் வங்கி போட்டித் தேர்வில் வெற் றிப் பெற்று ஸ்டேட் பேங்க் ஆப் இந் தியா வங்கியில் பணிக்கு சேர்ந்தேன். இப் போது வரை வங்கியி ல் பணிப்புரிந்து வருகிறேன்.

சட்டம் படித்த நீங்கள் ஏன் சிவில் சர்வீசஸ் பணியை தேர்ந்தெடுத்தீர்கள்?
சமுதாயத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென விரும்பினேன். அதற்கு சிவில் சர்வீசஸ் தேர்வு நல்ல ஏணிப் படியாக இருக்கும் என நினைத்தேன். அதனால் சிவில் சர்வீ சஸ் தேர்வை தேர்ந்தெடுத்தேன். இதன் மூலமாக ஏதா வது நல்லது செய்ய முடியும் என நம்புகிறேன். கண்டிப்பாக செய் வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்ற உங்களின் படிப்பு இரகசியம் என்ன?
தன்னம்பிக்கை, கடின உழைப்பு, எனது பெற்றோர்கள் கொடு த்த ஊக்கம், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தந்த நம்பிக் கை, இதோடு எனது வெற்றியில் முக்கிய பங்கா ற்றிய பிரபா ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் பிரபாகரன் சார். அவர் இல்லாமல் என்னால் இந்த அளவி ற்கு வெற்றிப் பெற்றிருக்க முடியாது. எல்லோருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கி றேன்.

உங்களின் வெற்றியில் எந்த அளவிற்கு பெற்றோர்களும் நண்பர்களும் பங்காற்றினர்?
அவர்கள் இந்த வெற்றியை அடைவதற்கு பல விதங்களில் உதவியாக இருந்தனர். இந்த வெற்றியை அடைவதற்கு நம்பிக்கை, தைரியம், ஊக்கம் மற்றும் சுதந்திரம் கொடுத் தனர்.

இந்த தேர்வுக்கு எவ்வளவு நேரம் தீவிரமாக படித்தீர்கள் ?
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு படிப்பது நபருக்கு நபர் வித்தியா சப்படும். நான் இந்த தேர்விற்கு ஆண்டு முழுவதும் கடின உழைப்பை செலுத்தினேன். தினமும் நான்கு மணி நேரம் படிப்பேன். வாரத்தில் ஐந்து நாட்கள் படிப்பேன் அவ்வள வுதான்.

பொது அறிவு தாளுக்கு எந்தெந்த பத்திரிகைகள் மற்றும் இதழ்களை படித்தீர்கள்?
தினமும் இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் களை படித்துவிடுவேன். அதற்கடுத்து பப்ளிகேஷன் டிவி ஷன் வெளியிடும் யோஜனா, குருஷேத்திரா, சி.எஸ்.ஆர் இயர்புக் ஆகியவற்றை படித்தேன்.

இந்த தேர்வில் உங்களின் விருப்பப் பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?

பிரிலிலிமனரி தேர்வில் பொது நிர்வாகம் விருப்பப்பாடத் தையும், மெயின் தேர்வில் பொது நிர்வாகம், சட்டம் ஆகிய இரண்டையும் விருப்பப்பாடங்களாக தேர்ந்தெடுத்தேன்.

இந்த விருப்பப்பாடங்களை தேர்ந் தெடுத்ததற்கு ஏதேனும் காரணங்கள் உண்டா?
பொது நிர்வாகம் எனக்கு மிகவும் பிடித்த விருப்பப்பாடம். இதற்கு அனைத்து நூல்களும் எளிதாக கிடைக்கிறது. இரண் டாவது விருப்பப்பாடமான சட்டம் எனது கல்லூரி பாடம். இத னால் தேர்வுக்கு தயார்செய்ய எளிதாகவும் இருந்தன.

இந்த தேர்வை எத்தனை முறை எழுதினீர்கள்?
சிவில் சர்வீசஸ் தேர்வை முதல் முறையாக எழுதியபோது பிரிலிலிமனரி தேர்விலேயே வெற்றி பெறமுடியவில்லை. எனது இரண்டாவது முயற்சியில்தான் இந்த வெற்றியை பெற்றிருக்கிறேன்.

பொது அறிவு தாள்களுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
பொது அறிவுக்கான பல நூல்களையும், இண்டர்நெட்டிலிலி ருந்து தேவையான குறிப்புகளையும் தயார் செய்து படித்தே ன். மொழித் தாள்கள் மற்றும் கட்டுரை தாளுக்கு விசேஷ மான தயாரிப்பு எதையும் செய்யவில்லை.

நேர்முகத் தேர்வு எப்படியிருந்தது?
இண்டர்வியூ போர்டு மிகவும் இயல்பாக இருந்தது. தன்னம் பிக்கையுடன் இருந்தேன். பல கேள்விகள் இயல்பாகவும் நுட்பமாகவும் கேட்டதனால் எளிதாக பதில் தந்தேன். மிக வும் திருப்திகரமாக இருந்தது.

சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனை…
புதிதாக வந்துள்ள சிவில் சர்வீசஸ் ஆப்டிடியூட் டெஸ்ட் அப்படி ஒன்றும் கடினமானதல்ல. பாசிட்டிவ்வாக எடுத்துக் கொண்டு படித்தால் வெற்றிப்பெற முடியும். அதனால் இந்த தேர்வுக்கு படிப்பவர்கள் தன்னம்பிக்கை மற்றும் கடின உழை ப்பு வேண்டும். இவை நிச்சயம் வெற்றிப்பெற உதவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: