Sunday, April 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஈ.சி.ஜி. யா!?!?!

இணையம் ஒன்றில் கண்டெடுத்த செய்தி

நெஞ்சு வலிக்குது. படி ஏற முடியுதில்லை. ஒரு மாடி ஏறி னாலே இளைச்சு மூச்சு முட்டுது. இடையில் நின்று சற்று ஆறியபி ன்தான் தொடர்ந்து ஏற முடிகிற து. பாரம் தூக்கிக்கொண்டு நடக்க வே முடியுதில்லை’ என்றாள் அவள்.

அவரைப் பரிசோதித்துப் பார்த்த பின் `உங்களது இருதயத்திற்கா ன இரத்த ஓட்டம் குறைவு போலத் தெரிகிறது. கொலஸ் ரோல், ஈ.சி.ஜி போன்ற பரிசோதனைகள் செய்து பார்க்க வேண்டும்’ என்றேன்.

‘ஈ.சி.ஜி யா வேண்டவே வேண்டாம்’ என்றாள் கோபமாக. `ஏன்?’ என்று கேட்டேன்.

`ஈ.சி.ஜி செய்வதில் பிரயோசன மில்லை’ என்றவளது குரல் திடீ ரென மிகுந்த விரக்தியில் ஆழ்ந் தது. `சொந்தக் காரர் ஒருத்தர் சு ம்மா `செக்அப்’ எண்டு ஈ.சி.ஜி செய்து பார் த்தவர். ஒண்டும் இல் லை எண்டிட்டாங்கள். மற்ற நாள் திடீ ரெ ஹாட் அட்டாக்கிலை போட்டார். உந்த ஈ.சி.ஜி பிரயோ சனம் இல்லாத வேலை’ என்றாள்.

இன்னொரு வயதான மாது. `சரியான களயாகக் கிடக்கு, தலையையும் சுத்துது’ என்றாள். பரிசோதித்துப் பார்த்த போது உடல் வியர்த்து, பிரஸர் தளர்ந்திருந் தது. மாரடைப்பு என்ப தாக உணர்ந்தேன்.

‘ஈ.சி.ஜி எடுத்துப்பார்க்க வேண்டும்’ என்றேன்.

`நெஞ்சு வலி இல்லை த்தானே, ஏன் வீணாக ஈ.சி.ஜி’ என்றாள். கூட வந்தவரும் அதையே வலியுறுத்தினார்.

இவர்களுக்கு மாறாக இருதய நோய்களோடு எந்தவித தொடர்புமற்ற சிலர் ஈ.சி.ஜி எடுத்தே தீர வேண்டும் என அடம் பிடிப்பார்கள்.

இவர்கள் அனைவரும் ஈ.சி.ஜி.யின் பயன்பாடு பற்றிய தெளி வு இல்லாமையால் தான் தவறான முடிவுகளுக்கு வந்தா ர்கள். முதலா மவர் முதல் நாள் ஈ.சி.ஜி எடுத்தபோதும் அடுத் தநாள் இறந்தது ஈ.சி.ஜி. யின் தவறு அல்ல. வரப் போகிற மாரடைப்பை முதலிலேயே கண்டுபி டிப்பதற்காகச் செய்யப் படுவதல்ல வழமையான ஈ.சி.ஜி.ஏற்கனவே மாரடைப்பு ஏற் பட்டிருந்தால், ஏற்கனவே இருதயத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவற்றைக் காட் டும்.

பயிற்சி ஈ.சி.ஜி. (Excercise ECG), அன்ஜியோகிராம் ( Angiogram) போன்ற பரிசோதனைகள் மட்டும் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு உள்ளதா என்பதை முன் கூட் டியே தெளிவுபடுத்தும். என வே எடுத்த ஈ.சி.ஜி.யில் எ ந்த மாற்றமும் இல்லை, சாதார ணமானது என்ற போதும் அஞ்சைனா, மாரடைப்பு ஆகி யவற்றிற்கு இட்டுச் செல்லக் கூடிய இருதயநாடி நோய்கள் ( Coronary Artery Disease) இல் லையென முடிவுகட்ட முடி யாது. ஆனால் ஈ.சி.ஜி.யில் மாற்ற மிருப்பது நோயிருப்பதை உறுதி செய்யும்.

இரண்டாமவர் நெஞ்சுவலி இல்லையென்பதால் ஈ.சி.ஜி வே ண்டாம் என்றார். ஆனால் நெஞ்சுவலி இல்லாமல் கூட மார டைப்பு வருவதுண்டு. வேண்டாம் என்ற அவருக்கு மாரடை ப்பு வந்திருந்ததை ஈ.சி.ஜி. தெளிவுபடுத்தியது.

எனவே ஈ.சி.ஜி. தேவை யா இல்லையா என்பதை ஒருவருக்கு உள்ள அறிகு றிகளைக் கொண்டு வை த்தியரே தீர்மானிக்க வே ண்டும். இருந்தபோதும் ஈ. சி.ஜி. மட்டுமே மாரடைப் பைக் கண்டுபிடிப்பதற் கான பரிசோதனை அல்ல. Troponins T போன்ற சில இரத்த பரிசோதனைகள் ஈ.சி. ஜி.யை விட விரைவாகவே மாரடைப்பை கண்டுபிடிக்க உத வுகிறது.

ஆனால் ஈ.சி.ஜி. என்பது வெறு மனே மாரடைப்பைக் கண்டு பிடிப் பதற்கான பரிசோதனை அல்ல. இருதயத்தோடு சம்பந்த ப்பட்ட பல நோய்களை வைத்தியர்களு க்குச் சுட்டிக்காட்ட அது உதவுகி றது. இருதயத் துடிப்பின் வேகம், அதன் ஒழுங்கு, இருதய துடிப்பின் சீரின்மை, அதன் தசைகளின் வீக் கம், இருதய வால்வுகளின் நோய் கள் போன்ற பலவற்றை இனங் காண உதவுகிறது. டிஜொக்சின் போன்ற சில மருந்துகளின் பக்க விளைவுகளைக்கூட ஈ.சி .ஜி மூலம் அறியலாம்.

இரத்தப் பரிசோதனைகள் போல வழமையாகச் செய்யப்படும் ஒரு சாதாரண உடல் நலப்பரிசோதனையே இதுவாகும். ஈ.சி .ஜி என்பது எந்தவித பாதிப்பும் அற்ற இலகு வான பரி சோதனையாகும். இதன் போது மின்சாரம் உடலுக்குள் பாய்ச்சப்படுவதில்லை. மாறாக இருதயத்திலி ருந்து இயல் பாக எழும் மின் தூண்டு தலையே அது அள விடுகிறது.

ஐந்தோவன் Einthoven என்பவரால் இது 1893 இல் கண்டுபி டிக்கப்பட்டது. அதற்காக அவர் 1924 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: