Thursday, April 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தனது மூத்த மகள் ஜான்வியை கதாநாயகியாக களமிறக்கும் ஸ்ரீதேவி

சமீபகாலமாக தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் கூடிக் கொண்டே போகிறது. அந்த வகையில் ஒரு காலத்தில் தமிழ் மட்டுமல்லாது, இந்தியையும் ஒரு கலக்கு கலக்கிய ஸ்ரீதேவி, தனது மூத்த மகள் ஜான்வியை கதா நாயகியாக களமிறக்க முயற்சி கள் மேற்கொண்டு வருகிறார். 1970 – 80களில் தமிழ் மற்றும் இந் தி திரையுலகில் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி, பாலி வுட்டுக்கு போன பின்னர், தயாரிப் பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட் டிலானார். ஸ்ரீதேவி-போனிகபூருக்கு ஜான்வி, குஷி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்தவர் ஜான்வியை சினிமாவில் கதாநாயகியாக்க இருக்கும் முயற் சியில் தீவிரமாக இறங்கி இருக்கிறார். முதற் கட்ட மாக தமிழ் அல்லது தெலு ங்கு மொழில் நடிக்க வை க்க இருக்கிறார். இதற்காக தீவிரமாக கதை கேட்டு வருகிறார் ஸ்ரீதேவி.

ஏற்கனவே நடிகை ராதா, தனது மகள் கார்த்திகாவை தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்க வைத்தார். அதி லும் குறிப்பாக தமிழில் வந்த “கோ” மாபெரும் வெற்றி பெற் றதோடு, கார்த்திகாவுக்கு நல்ல பெயரையும் பெற் று தந்தது. இதனால் தனது மகள் ஜான்வியையும் தென்னிந்திய படங் களில் நடிக்க வைக்க விரும் புகிறார். முதற்கட்டமாக தெலுங்கு நடிகர் நாகார் ஜூனாவிடம் அணுகி, அவரது இளைய மகன் அகிலுக்கு, ஜான்வியை ஜோடியாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டுள் ளார்.

அம்மா ஸ்ரீதேவி போல, மகள் ஜான்வி சினிமாவில் ஜொலி ப்பாரா…? பொறுத்திருந்து பார்ப்போம்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: