Saturday, January 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மூட்டு வலிகளுக்கு பூச்சு (ஜெல்) மருந்துகளின் நன்மைகளும் பிரச்சனைகளும்

வயதான பலர் மூட்டு வலிக்கிறது எனப் பூச்சு மருந்துகளை முழங்கால், கணுக்கால் என அடிக்கடி பூசிக்கொண்டிருப் பார்கள். “பொழுது போகாதற்கு அதை இதைப் தேச்சுக் கொ ண்டிருக்கிறதுதான் வேலை” என இளவட்டங்கள் அலட்சிய மாகப் பேசும். அல்லது “கண்டதையும் பூசி உடுப்புகளையும் பாழாக்கிறதுதான் மிச்சம்” என நக்கல் அடிக்கும்.

நோ எண்ணெய், இலுப்பெண்ணெய், வேப் பெண்ணய் பூசுவ தால் பலன் ஏதும் கிடைக்கிறதா இல்லையா என கருத்துச் சொல்ல எனக்கு அருகதை யில்லை. அவை எனது படிப்பு, அனு பவம் ஆகியவற்றிற்கு அப்பாலானவை.

பலன்

ஆனால் வலி நிவாரணி ஜெல் மருந்துகளைப் பூசுவதால் பலன் கிடைக்கும் என் பது உண்மை. ஆனால் பலருக்கும் இவ் வாறு பூசுவதால் பலன் கிடை க்குமா என்பதில் சந்தே கம் இருக்கிறது. பல மருத்துவர்களுக்கே அவ் வாறு பூசுவதன் பயன் பற்றி நம்பிக்கை கிடை யாது. எனவே இது பற்றி சில ஆய்வுகள் செய்யப்ப ட்டன.

நாட்பட்ட முழங்கால் வலி, மற்றும் வயதானவர்களில் ஏற் படும் ஒஸ்ரியோ ஆர்திரைடிஸ் (osteoarthritis) நோயாளார் களில் டைகுளோபெனிக் சோடியம் (Diclofenac sodium) மரு ந்தை மாத்திரைகளாக கொடு க்கும்போது ஏற்படும் வ லி நிவாரணத்திற்கு ஒத் ததாக ஜெல் மருந்தாகப் பூசுவதாலும் நன்மை கிடைத்தது. உட்கொ ள்ளும் மாத்திரைகளைப் போலவே வலியுள்ள இடத்தில் பூசப்படும் மருந்தும் வலியைத் தணிப்பதில் உத வுகிறது என்பது இதனால் தெளிவாகிறது.

பக்கவிளைவுகள்

வலிநிவாரணிகளை மாத்தி ரைகளைப் பாவிக்கும்போது ஏற்படும் முக்கிய பக்க வி ளைவு குடல் சம்பந்தமானா தாகும். பல நோயாளர்களும் வயிற்று எரிவு, புகைச்சல், இரைப்பைப் புண் ஆகியன ஏற்படுவதாகக் கூறுகிறார் கள். அது உண்மையே. அத் துடன் இவை இரத்த அழுத்த த்தை அதிகரிக்கவும் செய் கின்றன. இருதய நோய்களை க் கொண்டு வருவதும் அதிகம் என்பதும் அனுப வத்திலும், ஆய்வுகளிலும் தெரிய வந்திருக்கிறது.

ஆனால் அவற்றை பூச்சு மருந்தாகப் பாவிக்கும்போது அத் தகைய பக்கவிளைவுகள் மிக க் குறைவாகவே ஏற்பட்டன. இதற்குக் காரணம் பூச்சு மரு ந்தாக பாவிக்கும்போத ஒரு சதவிகிதம் மட்டுமே உறிஞ் சப்பட்டு குருதி வழியாக உடலெங்கும் பரவுகிறது. இரு ந்தபோதும் வலி யுள்ள இட த்தில் உறிஞ்சப் படும் மருந் தினால் நோய் தணிகிறது

பக்கவிளைவுகள்

அப்படியானால் பூச்சு மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏதும் கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

நீண்ட காலத்திற்கு அதாவது 6 மாதம் ஒரு வருடம் எனத் தொ டர்ந்து பூசி வரும்போது தோல் வரட்சி ஏற்படலாம். 

அத்துடன் தோலில் அரிப்பு, எரி வு, சிவத்தல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். 

சிலரில் கொப்பளங்கள் போடு வதும், எக்ஸ்சிமா போன்ற வை வருவதும் உண்டு.

இத்தகைய பக்கவிளைவுகள் பெரும்பாலும் தொடர்ந்து பூசும் இடத்தில் மட்டுமே வரும். தோல் வரட்சியடைந்தால் சாதார ணமான இதப்படுத்தும் கிறீம் வகைகளை (அழளை வர சளைiபெ ஊசநயஅ) உப யோகிப்பதன் மூலம் தடுத்து விடலாம்.

 எத்தகைய பூச்சு மருந்துகள் உதவும்?

எல்லா வெளிப் பூச்சு மருந்துகளும் உதவு மா?

மருந்தகங்களில் வலி க்காகப் பலவகையான வெளிப் பூச்சு மருந்து கள் விற்பனையாகின் றன. இவையாவு மே பயனுள்ளவையா என க் கேட்டால் இல்லையென்றே கூற வேண்டும். Diclofenac, Ibuprofen, Ketoprofen, Piroxicam போன்ற பல வலிநிவாரணி மருந்துகள் ஜெல் மருந்துகளாக பூசுவதற்கு ஏற்ப வருகின் றன. இவை பயனளிக்கும்.

 அதே நேரம் Methyl salicylate போன்ற சாதாரண வலி நிவா ரணி மருந்துகள் Menthol, Camphor, Eucalyptus Oil போன்ற வற் றுடன் கலந்து கிடைக்கின்றன. இவை வாச னை யையும், பூசுமிடத்தில் சற்று எரிவை யும் ஏற்படுத்துவதுடன் நோயா ளிக்கு மனது க்கு இதமான உணர்வையும் கொடுக் கும். 

ஆயினும் அவை வலிநிவாரணிகளாகப் பயன்படுமா என்பது பற்றி நிச்சமாகக் கூறமுடியாது.

காசைக் கரியாக்காதீர்கள்.

னவே வலிநிவாரணி மரு ந்துகளாகக் கிடைத்தால் அவற்றை நீங்கள் பயன்படுத் தலாம். அதில் எது உங்களு க்கு ஏற்றது என்பதை உங் கள் மருத்துவருடன் கேட்டுப் பயன்படுத் துங்கள்.

கடையில் கிடைப்பதை யெ ல்லாம் பூசி காசை வீணா க்காதீர் கள்.

மூட்டு வலிகள் சம்பந்தமான எனது ஏனைய பதிவுகள்

மூட்டு வலிகளா? பயிற்சிகள் உதவும்

மூட்டுத் தேய்வு நோயை இனங் காட்டும் ஹெர் படன்ஸ் நோட் (Heberden’s Node)

முதுகு வலிக்கு எக்ஸ் ரே- உங்கள் எதிர் பார்ப்பு என்ன?

நாரிப்பிடிப்பு (முதுகு வ லி) வராது தடுத்தல்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply