Sunday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆங்கில இலக்கணம் கற்க!

Grammar Book என்ற பெயரில் இணைய தளம் ஒன்று http://www.grammarbook.com/english_rules.asp என்ற முக வரியில் இயங்குகிறது. முறையாக ஆங்கில இலக்கணம் கற்க பல வழிகள் இந்த தளத்தில் தரப்பட்டு ள்ளன. இந்த தளத்தில் Grammar Rules, Punctuation Rules, Capitalization Rules, Commonly Confused Words, மற்றும் Rules for Writing Numbers எனப் பல பிரிவுகள் தரப்படுகின்றன. ஒவ்வொரு தலைப்பின் கீழும் பல எடுத்துக்காட்டுகள் தரப்பட்டு விளக்கப்படுகின்றன. ஓரமாகத் தரப்பட்டுள்ள மெனுவில் English Usage Videos, Free Online Quizzes, மற்றும் the Grammar Blog என்ற பிரிவுகள் காணப்படுகின்றன. இதில் உள்ள Grammar Blogல் பல வகை யான இலக்கண விளக்கங் கள் தரப்பட்டுள்ளன.

வீடியோ பிரிவில், சிறு சிறு பாடங்கள் தரப்பட்டுள்ளன. டெக் ஸ்ட் எடுத்துக்காட்டுக்களைக் காட்டிலும் இவற்றில் தரப்ப ட்டுள்ள விளக்கங்கள் நாம் கற்றுக் கொள்வதனை எளிதாக் குகின்றன. மொத்தம் 68 வீடியோ கிளிப்கள் உள் ளன. ஆங்கில மொழி ஆக்கத்திற்கான விதிமுறைகளை இவை விள க்குவது எளிதாக உள்ளது.

ஆங்கில மொழியை நன்கு கற்றுப் பயன்படுத்த திட்டமிடு வோருக்கும், கற்றவர்கள் தங்களின் சந்தேகங்களைப் போக் குவதற்கும் இது ஓர் அருமையான தளம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply