Tuesday, March 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வேர்ட் சில ருசிகர தகவல்கள்

மைக்ரோசாப்ட் தரும் எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பு எப்போதும் நமக்கு உதவி டும் வகையில் பல வசதி களைத் தருகிறது. குறிப்பாக வேர்ட் தொகுப்பு நாம் எதி ர்பார்க்கும் அனைத்து வசதி களும் ஏதாவது ஒரு வகை யில் நமக்குக் கிடைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சில வேளைகளில் நாம் வி ரும்பாத சில பார்மட் வே லைகள், எதிர்பாராத நேரங்களில் நடைபெறும். இவற்றை இங்கு காணலாம்.

தானியங்கி பார்மட் நீக்க: வேர்ட் நாம் உருவாக்கும் டாகு மெண்ட்டில் பல வேளைகளில் நாம் விரும்பாமலே அல்லது நா மாக மேற்கொள்ளாமலே, சில மாற்றங்களை ஏற்படுத்தும். எடுத்துக்காட்டாக, இணைய தள முகவரி ஒன்றை அமைத் தால், அதனை இணையத்திற் கான ஹைப்பர் லிங்க்காக மா ற்றும். அபாஸ்ட்ரபி மற்றும் மேற்கோள் குறிகளை, வளை வுகள் உள்ளதாக மாற்றும். இரண்டு ஹைபன் குறிகளை அடுத்தடுத்து அமைத்தால், அவற்றை எம் டேஷ் எனப் படும் அடையாளமாக மாற்றும். இவை நாம் விரும்பாமலே ஏற்படுத்தப்படும் சில குறிகளின் பார்மட் மாற்றங்களாகும். இவை ஏற்படாமல் இருக்க வே ண்டும் என்றால், டூல்ஸ், ஆப்ஷன்ஸ் செ ன்று அதற்கான டேப் களைத் தேர்ந்தெடுத் து கிடைக்கும் விண்டோவில் செட் செய்திட வேண்டும். அவ்வாறு இன்றி அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுத்தப்படுகையில் நாமா கவே அவற்றை நீக்க வேண்டும் என எண் ணினால் என்ன செய்யலாம்?

இதற்காகவே இருக்கிறது Undo/[Ctrl]Z கட்டளை. மாற்றம் ஏற்பட்டவுடன், இந்த கட்டளையை, மேலே தரப்பட்டுள்ள கீக ளை அழுத்தி ஏற்படுத்தினால் போதும். பலர் இந்த கட்டளை நாம் மேற்கொண்ட செய ல் களை மட்டுமே திருப் பித் தரும் என எண்ணு கின்றனர். அது தவறு. கம்ப்யூட்டர் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் எந்த செயல்பாட்டினையும் இந்தக் கட்டளை திருப் பித் தரும். எனவே கம்ப் யூட்டர் நாம் தரும் இணைய தள முகவரி யை, ஹைப்பர் லிங்க் ஆக மாற்றியவுடன் [Ctrl]Z கொடு த்தால், அது மீண்டும் நாம் டைப் செய்தபடி அப்படியே கிடை க்கும்.

இதே போல நாம் தொடர்ந்து மூன்று ஹைபன் கோடு போட் டால், வேர்ட் அதனை படுக்கை கோடாக மாற்றும். இந்த மாற்றத்தையும் [Ctrl]Z கொடுத்து நீக்கிவிடலாம். இந்த கோட்டினை நாமாக நீக்க முடியாது. ஏனென்றால், வேர்ட் இதனை கீழாக வடிவமைக்கும் வழியில் (Bottom Format) இதனை உருவாக்கு கிறது. இந்த பார்மட்டை நாமாக நீக்க வேண்டும் எனில், Format மெனு சென்று, அதில் Borders and Shading விண்டோவில் None என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்து வெளியேற வேண்டும்.

ஆனால் நீங்கள் வேர்ட் ஹைபன்களை, பார்டர் கோடுகளாக அமைப்பதை நீங்கள் விரும்பினால், உங்களுக்கு நான் இன்னும் சில ருசியான விருப்பங்களைத் தருகி றேன்.

மூன்று டில்டே (~) கேர க்டர் டைப் செய்தால், அ லை அலை யான கோடு கிடைக்கும். மூன்று அடி க்கோடு (_) கேரக்டர் அமைத்தால், 1.5 பாய் ண்ட்டில் கோடு அமைக்க ப்படும். மூன்று ஆஸ்டெரிஸ்க் (*) அமைத்தால் புள்ளி புள்ளியாகக் கோடு கிடைக்கும். மூன்று சம அடையாளம் (=) அமைத்தால் இரட்டைக்கோடு கிடைக்கும். மூன்று ஹேஷ் (#) அடையாளம் அமைத்தால் மெல்லிய மற்றும் தடிமன் என மாறிமாறி அமைந்த கோடு (“thin thick thin”) ஒன்று நீளமாகக் கிடைக்கும்.

டேபிளில் வரிசை நகர்த்த: இந்த டிப்ஸ் நீங்கள் வேர்ட் டேபிளில் அதிகம் பணியாற்றுவதாக இருந்தால் பயன்படும். டேபிளுக்கு வெளியே, டெக்ஸ்ட் நகர்த்து வதற்கும் இது பயன்படும். நீங்கள் உருவாக்கிய அட்டவணை ஒன்றில், மூன்றா வதாக இருக்கும் படுக்கை வரிசையினை மேலே முதலாவதாகக் கொண்டு வர எண்ணுகிறீர்கள். அந்த வரிசை யில் கிளிக் செய்து, பின்னர் [Alt][Shift] கீகளை அழுத்திக் கொண்டு, மேல் நோக்கிய அம்புக் குறி கீயினை இருமுறை அழுத்தினால், வரிசை தானாக முதல் வரிசையாக அமர்ந்து விடும். ஒவ்வொரு முறை அம்புக் குறி கீயினை அழுத்த, வரிசை மேல் நோக்கி நகரும். அதே போல கீழ் நோக்கியும் நகர்த்தலாம். இதே போல சிறிய அளவிலான டெக்ஸ்ட் டையும், அது டேபிளுக்கு வெளியே இருந்தாலும் நகர்த் தலாம்.

ஒரு கிளிக்-பல பைல்கள்: வேர்டில் பல பைல்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொள்ளும் சூழ்நிலை நமக்கு எப்போ தும் உண்டு. இந்த பைல்களை அனைத்தையும் சேவ் செய் திட வேண்டும் என்றால், ஒவ்வொன்றாக சேவ் செய்தி டலாம். இன்னொரு வழியில் இவற்றை மொத்த மாகவும் சேவ் செய்திடலாம். [Shift] அழுத்தியவாறு File மெனுவி னை விரித்தால், அங்கு Save All என ஒரு கட்டளை இருப் பதைக் காணலாம். இதனை தேர்ந்தெடுத்து அழுத்த, அனை த்து பைல்களும் சேவ் ஆகும்.

இந்த வழி வேர்ட் 2007 மற்றும் வேர்ட் 2010ல் கிடைப் பதில்லை. ஆனால், நாம் விரும்பினால் Save All கட்டளை யை Quick Access Toolbar இல் சேர்க்கலாம். கீழ்க் குறிப்பி ட்டவாறு செயல்படவும். Office பட்டனில் கிளிக் செய்து பின் னர் Word Options தேர்ந்தெடுக்கவும். இங்கு இடது பக்கம் உள்ள பிரிவில் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின் Commands தேர்ந்தெடுக்கவும். இதில் கீழாகச் செ ன்று Save All என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Add பட்டன், அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: