Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அழகு குறிப்பு: அழகான கழுத்துக்கு…

கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் மட் டும் அழகாக இருந்து கழுத்தில் மரு க்கள் அல்லது கழுத்தேயில்லாமல் முகத்தோடு உடலை ஒட்ட வைத் திருந்தது போல் அமைந்தால் பார் க்க நன்றாக இருக்காது.

சிலருக்கு கழுத்து அழகாக இருந்தா லும் அதில் கரும் புள்ளிகளும், மரு க்களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்வாறு கரும் புள்ளி கள், மருக்கள் தோன்ற ஆரம்பிக் கும்போதே சிகிச்சைகள் எடுத்துக் கொண்டால் மேலும் பரவாமல் இருக்கும்.

இந்த மருக்கள் ஏற்பட முக்கிய காரணம் சுத்தமின்மை. அதிகமான நகைகளை தொடர்ந்து அணிந்து கொண்டிருப்பது முதலியன. மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளை நீக்க இதற் கென்று தயாரிக்கப்பட்ட கிரீம் உள்ளது. இதை தொடர்ந்து தடவி வர கரும்புள்ளிகளும் மருக்களும் அடியோடு நீங்கி விடும்.

கழுத்து அழகை பாதிக்கும் மற்றொரு காரணம் தைராய்டு சுரப்பியால் ஏற்படும் பாதி ப்பு. தைராய்டு சுரப்பி கழுத் துப் பகுதியில் உள்ளதால் இச்சுரப்பியை தூண்டும் வ கையில் கழுத்தை மேலும், கீழும் பக்கவாட்டங்களிலு ம் மெல்ல சாய்த்தல் வேண் டும். இப்படி பலமுறை செய் யலாம். தலையை அப்ப டியே வலது புறமாக 10 முறையும் செய்யலாம்.

வெது வெதுப்பான நீரில் துணி யை நனைத்து கழுத்தில் அதை அப்படியே இரண்டு சுற்றுகள் வரு வது போலச் சுற்றி 10 முதல் 15 நிமிடங்கள் வைக்க வேண்டும். தினமும் ஒரு வேளை இப்படி செய்து வர பலன் தெரியும்.

தவிர யோகாசனப் பயிற்சிகளின் மூலமும் இதை குணப் படுத்த முடியும். தனுராசனம், சர்வாங் காசனம் போன்றவை இதற்கு நல் ல பலன் தரும்.

அழகுக்கலை நிபுணரின் ஆலோ சனையுடன் உணவுக் கட்டுப்பாடு மேற்கொள்ளுதல் வேண் டும். பச்சைக் காய்கறிகள், பழச்சாறு, சாக்லட் வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தவிர எளிய மூலிகை மருந்துகளும் யுனா னி முறையில் இதற்கு உண்டு.

தைராய்டு சுரப்பி அதிகமாக இயங்கினாலும் பல பிரச்சனை கள் வரும். இதையும் முறை யாக கட்டுப்படுத்தி வைக்க வே ண்டும். தைராய்டு பற்றிய சந் தேகம் எழும் போதே மருத்துவ ரின் ஆலோசனையை நாட லாம்.

சிலருக்கு கவரிங் நகை அணிவதால் ஒவ்வாமை வரும் வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஒவ்வாமை வருபவர்கள் என் றால் கவரிங் நகைகளை தவிர்ப்பது நல்லது. அப்படி இல்லை யென்றால் ஒவ்வா மையினால் ஏற்படும் புண் களும் அரிப்பும் அருவருப்பு தருவதோடு ஆரோக்கிய த்தையும் பாதிக்க வல் லது. அவ்வாறு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூலிகை மருந்துகள் உண் டு. முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்து கழு த்தில் தடவி 30 நிமிடம் பொறுத்து சுத்தம் செய்வதால் கழுத்து சுருக்கம் இருக்காது. மேலும் பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்.

முட்டை ஒன்றின் வெள்ளைக் கருவோடு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் பொறுத்து கழுவி னால் சுருக்கங்கள் விழுவதை தவிர்க்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: