Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

காவல் நிலையத்தில் ரஞ்சிதா…

ரயிலில் உட்கார துண்டு போட்டு இடம் கொடுத்த போர்ட்டர் மீது ஒரு தலைக் காதல் கொண்ட கல்லூரி மாணவி ரஞ்சிதா, வீட்டை விட்டு ஓடி வந்து விடுகிறேன், ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக் கலாமா என்று கேட்டதால் அந்த போர்ட்டர் அதிர்ச்சி யாகி போலீஸாரிடம் முறையிட்ட கதை திருச்சியில் நடந் துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழைத் தம்பதி யின் மகள் ரஞ்சிதா. 19 வய தான இவர்தான் அந்த வீட்டில் முதல் முதலில் பிளஸ்டூ பாஸ் செய்தவர். தற்போது திருச்சி யில் உள்ள கல்லூரியில் முத லாமாண்டு படித்து வருகிறார்.

தினசரி மணப்பாறையிலிருந்து ரயில் மூலம் திருச்சி வந்து கல்லூரிக்குப் போய் விட்டு மாலையில் ஊர் திரும்புவார் ரஞ்சிதா.

அவருக்கு கருமண்டபம் பகு தியைச் சேர்ந்த, திருச்சி ரயி ல் நிலையத்தில் போர்ட்ட ராக பணியாற்றும் ஒருவர், ஒரு நாள் ரயிலில் உட்கார து ண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுத்தார். இதில் அவர்க ளுக்குள் நட்பு ஏற்படவே, தினசரி அவர் ரஞ்சிதாவுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துக் கொடுக்க ஆரம்பித்தார்.

தன் மீது அந்த போர்ட்டருக்கு தனிப் பிரியம் ஏற்பட்டதாக உணர்ந்த அந்தப் பெண், போர் ட்டரை காதலிக்க ஆரம்பித்துள் ளார். இது போர்ட்டருக்குத் தெரி யாது.

தினசரி அந்த போர்ட்டரைப் பார் க்காமல் இருக்க முடிய வில்லை ரஞ்சிதாவால். அவர் ஒரு நாள் வரா விட்டாலும் கூட மனசு ஒரு மாதிரி ஆகிவிடுமாம். இந்த நிலையில், ரஞ்சிதா ஏழைப் பெண் என்பதால் அவ்வப் போது பேனா உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுப்பார் அந்த போர்ட்டர். இதை காதல் பரி சாக நினைத்துக் கொண்ட ரஞ் சிதா, போர்ட்டர் மீதான காதலை வலுவாக்க ஆரம்பி த்தார்.

இந்த நிலையில் ஒரு நாள் போர்ட்டரைப் பார்த்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூற அவருக்கு ஒன் றும் புரியவில்லை. நான் உங்களைத்தான் கல்யாணம் செய் து கொள்வேன். வீட்டை விட்டு வந்து விடுகிறேன். நாம் ஓடி ப்போய்விடலாம் என்று கூற போர்ட்டருக்கு பெரும் அதிர்ச் சியாகி விட்டது.

இப்படிச் சொல்லிய அடு த்த நாள் இரவில் திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து போர்ட்டருக்குப் போன் செய்து நான் வந்து விட்டேன் என்று அவர் கூற போர்ட்டர் விரை ந்து வந்து தனது நிலை யைக் கூறியுள்ளார். நான் ஒருபோதும் உன்னைக் காதலிக்கவில்லை என்று விள க்கியுள்ளார். இதைக் கேட்டதும் ரஞ்சிதா அழ ஆரம்பித்து விட்டார்.

இதைப் பார்த்த மகளிர் காவல் நிலைய போலீ ஸார் விரை ந்து வந்து என்ன ஏது என்று விசாரி த்துள்ளனர். போர்ட்டர் நடந்ததை விளக்கிக் கூ ற ரஞ்சிதாவின் ஒரு தலைக் காதல் குறித்து போலீஸாருக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து ரஞ்சிதாவின் குடும்பத்திற்குத் தகவல் தெரி வித்து பெற்றோரை வரவழைத்தனர். அவர்களும் அழுதபடி ஓடி வந்தனர்.

பின்னர் காவல் நிலையத்தில் வைத்து ரஞ்சிதாவுக்கு போலீ ஸார் புத்திமதி கூறினர். இதையடுத்து தனது பெற்றோ ருடன் ஊருக்குப் புறப்பட்டுச் சென்றார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: