Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தூக்கமின்மை நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பி

உறக்கமின்மை நோயை ஆங்கிலத்தில் insomnia என்று குறிப்பிடுகின்றோம். இந்த நோயைக் குணப்படுத்தக் கூடிய தொப்பியொன் றை வைத்தியர்கள் கண் டு பிடித்துள்ளனர்.

இதன் தொழிற்பாடு மிக வும் சுலபமானது. இந்தத் தொப்பியோடு இணைந் த பையில் குளிர்ந்த நீர் ஊற்றப்படுகின்றது அல்லது ஐஸ் கட்டிகள் போடப்படுகின் றன.

அதை தலையில் அணிந்ததும் அது தலையில் குளிர்ச்சியை ஏற்படுத்தி உறக்கத்தை உண்டாக்குகின்றது. மூளை ஓய்வு பெற மறுக்கின்றபோது உறக்க மும் கண்களைத் தழுவ மறுக் கும்.

இது பொதுவான விடயம். மூ ளை சூடாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். எனவே மூளையை குளிர்ச்சியடைய வை த்து ஓய்வு பெறச்செய்வது தான் இந்த தொப்பியின் வேலை.

இந்தத் தொப்பியை அணிந்து கொள்வதன் மூலம் insomnia பிரச்சினை உள்ளவர்களும், மற்றவர்களைப் போல் நிம்மதி யாகத் துங்கலாம். அமெரிக்க ஆய்வாளர்கள் தான் இந்தத் தொப்பியை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் இலட்சக்கணக்கான மக் கள் insomnia பிரச்சினையால் அவஸ்த்தைப்படுகின்றனர்.

இவர்களுள் அநேகமானவ ர்கள் தூக்க மாத்திரைகளை யும் பாவிக்கின்றனர். தூக்க மாத்திரைகள் வேறு பாதிப் புக்களை ஏற்படுத்தக் கூடிய வை. எனவே இத்தகையவர்க ளுக்கு இந்தத் தொப்பி பாது காப்பான ஒரு மாற்றீடாக அமையும் என்று நம்பப்படுகி ன்றது.

நெற்றிக்குக் கீழ் இருக்கின்ற மூளைப் பகுதியை இந்தத் தொப் பியின் மூலம் குளிரச் செய்யலாம். அதன் மூலம் அது மூளை யை ஓய்வு பெறச் செய்து உறக்கத்தைக் கொண்டு வரும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: