Monday, September 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பிரபல இணையமா! தேவை கவனம்!!

கம்ப்யூட்டரில் இணையத்தில் தகவல்களைப் பெற்றுக் கொ ண்டிருக்கையில், உங்களிட ம் உள்ள பிளாஷ் ப்ளேயர், குயிக் டைம் புரோகிராம், ஸ்கைப் போன்ற ஏதேனும் ஒன்றுக்கான அப்டேட் தயா ராக இருப்பதாகவும், அத னை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள் ளவும் என்று ஒரு பாப் அப் செய்தி கிடைக்கும். உடனே நாம் அதாகத்தானே செய்தி வந்துள்ளது என்று எண்ணி, உடனே அப்டேட் செய்திட இசைவு தரும் பட்டனில் கிளிக் செய்திடுவோம். இங்கு தான் நாம் மாட்டிக் கொள்கிறோம்.

இது போன்ற அறிவிப்புகளுக்குப் பின்னர், அந்த இணைய தளங்களிலிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்த முனையும் போது கவனமாக இருக்க வேண் டும். பெரும்பாலான வைரஸ் மற்றும் பிஷ்ஷிங் புரோ கிராம்கள் இந்த முறையில் தான் இறங்குகின்றன. பின் நம் கம்ப் யூட்டரை முடக் குகின்றன. பெர்சனல் தகவல் களைத் திருடி அனுப்புகி ன்றன. எனவே வெப்சைட்டி லிருந்து புரோகிராம்களை டவுண்லோட் செய்திடும் மு ன் அந்த வெப்சைட் அதிகார பூர்வமானதா என்று ஒரு முறைக்கு இரு முறை கவனிக்கவும். வைரஸ் பரப்பும் நோக்கமுடையவர்கள் பெரும்பாலும் பிரபலமான நிறுவன ங்களின் பெயர்களில் மாற்றம் தெரியாத வகையில் ஒரிரு எழுத்துக்களில் மாற்றம் செய்து அல்லது அப்படியே பெயர் அமைத்து வெப்சைட்டுகளை உருவாக்கி இவற்றைப் பரப்பு கின்றனர். எடுத்துக்காட்டாக குயிக் டைம் என்ற மீடியா பிளேயர் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் பெயரில் ஒரு வெப்சைட் திறக்கப்பட்டுள்ளது. நாம் நம் கம்ப்யூட்டரில் குயிக் டைம் பிளேயரை வைத்திருந்தால் அது அறிந்து கொண்டு இந்த சாப்ட் வேருக்கு அப்டேட் பைல் உள்ளது; இந்த லிங்க்கில் கிளிக் செய் திடவும் என்று மெசே ஜ் அனுப்புகிறது. நாம் கிளிக் செய்தால் சிறி து நேரத்தில் வைரஸ் புரோகிராமினை நம் க ம்ப்யூட்டரில் பதித்து விட்டு அப்டேட் புரோகிராமினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிக்க இயலவில்லை என்ற செய்தி யைத் தந்துவிட்டு மறை ந்துவிடுகிறது. அடுத்த முறை கம்ப்யூட்டர் இயக்கும்போது வைரஸ் உடனடியாகச் செயல் பட்டு அனைத்து நாச வேலை களையும் மேற்கொள்கிறது. இதே போல மைக்ரோசாப்ட், விண் ஆம்ப் போன்ற தளங் களின் பெயர்களிலும் போலி வெப்சைட்டுகள் உருவாக்கப்பட்டு வைரஸ்கள் பரப்பப்படுகி ன்றன. எனவே இது போன்ற தளங்களில் இருந்து புரோகி ராம்களை டவுண்லோட் செய் திடும் முன் அந்த தளங்களின் ஹோம் பேஜ் சென்று அவை உண்மையிலேயே அந்த நிறுவனத் தளங்கள் தானா என்று உறுதி செய்து கொண்டு பின் டவுன்லோட் செய்திட வேண் டும்.

அடுத்ததாக டவுண்லோட் செய்திடத் தொடங்கும் முன் நம க்கு அந்த புரோகிராமினை இயக்கவா அல்லது சேவ் செய் திடவா என்று ஆப்ஷன் கேட்கப்படும். அப்போது ஒரு தனி போல்டரில் இதனை சேவ் செய்திடவும். சேவ் செய்தபின் கம்ப்யூட்டரில் உள்ள ஆண்டி வைரஸ் புரோகிராம் மூலம் சோதனை செய்த பின்பே இன்ஸ்டால் செய்திடவும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply