Sunday, February 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அதிரடி ஆரம்பம்

ஜூன் 2011 (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம்

மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக பொறுப் பேற் றிருக்கும் செல்வி ஜெயலலிதா அவர்க ளுக்கு, நல் வாழ்த்து க்கள்.

எவருமே எதிர்பார்த் திராத இந்த வெற்றி யானது. முன்னாள் முதல்வர் மீது மக்களு க்கு ஏற்பட்ட வெறுப்பி னாலோ அல்லது இன்றைய முதல்வரு மீது மக்களுக்கு உள்ள விருப்பத்தினாலோ ஏற்பட்ட வெற்றியல்ல•

மாறாக இது ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம்! முடங் கிப் போன நிர்வாகத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தி, எல்லாவற்றையும் விட மாற்றத்தை விரும்பிய மக்களின் எதிர்பார்ப்பு

எவராலும், கணிக்க முடியாதபடி அமைச்சரவைப் பட்டி யலை வெளியிட்டது… அதிகாரிகளை மாற்றம் செய்தது… பதவி ஏற்ற அன்றே மக்கள் நலத்திட்டங்களில் இறங்கியது… ஒவ்வொரு துறை அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் கலந்து திட்டமிட்டது… இப்படி முதல்வரின் ஆரம்பமே அசத்தல்தான்.

ஆனால் அதேசமயம் புதிய தலைமைச்செயலகத்தைக் காட் சிப் பொருளாக்கி, மக்களின் வரிப்பணத்தை வீண்டித்திருப் பது… சமச்சீர் கல்வித் திட் டத்தை  ஒரே நொடியில் தூக்கி யெறிந்திருப்பது… ஹெல்மெட் அணிவது கட் டாய மென்று அறிவித்து, அடுத்த நாளிலேயே அந்த விதியை தளர்த்தியிருப் பது போன்ற நடவடிக்கை களைப் பார்க்கும் போது இன்றைய முதல்வர் இன் னும் அன்றை நிலையிலி ருந்து மாறவே இல்லையோ என்ற கவலையும் மக்கள் மனதில் தோன்றுகிறது.

ருப்பினும் இன்றைய முதல்வரிடம் அடக்கி வாசிக்கும் தன்மையும் அனைவரையும் அனுச ரித்து செல்ல வேண்டும் என்ற எண்ணமும், எதிர் க்கட்சித் தலைவர்களு க்கும் உரிய மரியாதை யைத் தருவது.. பத்திரி கையாளர்களை மதிப் பது போன்ற பண்புக ளும்… வாக்குறுதிகளை விரைந்து நிறை வேற்றி மக்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற துடிப்பும் ஆரோக்கிய மான மாற்றமாகத் தெரிகிறது.

ஆனால் அதிரடி நடவடிக்கை என்கிற பெயரில் சென்ற அர சின் செயல்பாடுகளை அப்படியே அப்புறப்படுத்தாமல் தே வையானவற்றில் உரிய மாற்றங்களைச் செய்து சிறந்தவற் றை செயல்படுத்த வேண்டும் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: