சாதாரண நடிகராக திரையுலகில் நுழைந்து முன்னணி நடிகர் அந்தஸ்துக்கு உயர்ந்து, மா ஸ் ஹீரோவாகி, அரசி யல் கட்சி தொடங்கி, எம்.எல். ஏ.ஆகி… இப்போது எதிர்க் கட்சி தலை வராகவும் ஆகி விட்டார் விஜயகாந்த். தே. மு. தி. க என்ற பெய ரில் அரசியல் கட்சி தொடங்கிய நேரத்தில், எந்த டி.வி., சேன லும் விஜயகாந்த் பற்றியோ, அவரது கட்சி பற்றியோ செய்தி வெளியிடவில்லை. கட்சித் தலைமையின் அன்றாட நடவடி க்கைகளை தொண்டர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள ஏதுவாக தனி சேனல் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு கேப்டன் டிவி தொடங்கப்பட் டது. ஆரம்பத்தில் செய்திகள் இ ல்லாத பொழுதுபோக்கு அம் சங்களுடனான சேனலாக ஒளி பரப்பான கேப்டன் டிவியில் பின்னர் செய்திகள் ஒளிபரப் பப்பட் டன. சாதாரண அரசியல் கட்சி யாக இருந்து இப்போது எதிர்க்கட்சி அந்தஸ் துக்கு உயர்ந்து விட்ட நிலையி ல், கட்சிக்கென்று தனி நியூஸ் சேனல் தொடங்க வேண்டும் என நினைத்த விஜயகாந்த், இப்போது அதற்கான வேலைகளில் இறங்கி யுள்ளாராம். கலைஞர் செய்திகள், ஜெயா ப்ளஸ் போன்று விரைவில் கேப்டன் செய் திகள் என்ற பெயரில் 24 மணிநேர செய்திச் சேனல் தொடங் கவுள்ளது கேப்டன் குழுமம். கேப்டன் செய்திகள் சேனலில் விஜயகாந்தின் அன்றாட நடவடிக்கைகளில் தொடங்கி, தேமுதிக செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட உள்ளது.