Friday, August 12அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இறந்தும் இறவாமல் வாழ…

மனித உயிர்களைக் காக்கும் மருத்துவத்தில், உடல் உறுப்பு தானத்துக்குத் தனி இடம் உண் டு. அதனால்தான் உடல் உறுப்பு தானம் பற்றி ஏராளமான விழிப் பு உணர்வுப் பிரச்சாரங் கள் நடைபெறுகின்றன. ஆனாலும் உறுப்புகள் பற்றாக்குறை தீரவே இல்லை. இந்தச் சிக்கலான பிரச் னைக்குத்தீர்வு காணும் விதமா க, ஒரு புதுமையான அறுவைச் சிகிச்சையை நடத்திக் காட்டி இருக்கிறார்கள், சென்னை கு ளோபல் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கள்.

இது குறித்து, குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இய க்குநர் டாக்டர் கே.ரவீந்திரநாத் பேசுகிறார்.

”இலங்கை, கண்டியைச் சேர்ந்த இரண்டு நோயாளிகள் கல் லீரல் சிகிச்சைக்காக எங்களைத் தேடி வந்தார்கள். அதில் 50 வய தான முகம்மது நசீம் என்பவரு க்கு க்ரிப்டோஜெனிக் எனப்படும் காரணம் சொல்ல முடியாத கல்லீ ரல் பாதிப்பு இருந் தது. இன்னொரு நோயாளி 48 வயதான நசீர், கல் லீரல் பாதி ப்பு முற்றிய நிலையில் இருந்தார். இருவருக்குமே கல் லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும். நசீமின் மனை வி ஃபாத்திமா, தன் கல்லீரலின் ஒரு பகுதியைத் தா னமாகத் தருவதற்கு முன்வந்தார். அதேபோல், தந்தை நசீருக்காக 21 வயது மகன் முகம்மது சமீர், தானம் கொடுக்க முன்வந்தார். ஆனால், உறவுகளுக்குள் ரத்த வ கை பொருந்தாமல் போனதுதான் துரதிர்ஷ்டம்.

நசீர், நசீம் இருவருக்குமே கல்லீ ரல் தானம் செய்பவர்கள் அடுத்து யாரும் கிடைக்கவில்லை. கால ம் தாமதித்தால் உயிருக்கு ஆப த்து ஏற்படுமே என்று விழித்த நேரத்தில், ஒரு புதிய சிந்தனை தோன்றியது. ஏன் கொடை யாளிகளை மாற்றிப் பயன்படுத்தக் கூடாது என்று யோசித் தோம். உடனே இரு குடும்பத்தாரிடமும் டாக்டர்கள் குழு பேசி, அவர்களை ஒப்புக் கொள்ளச் செய்தது. அத ன்படி, அனைத்துப் பரி சோதனைகளும் செய் தோம்… நல்ல வேளை யாக மிகச்சரியாகப் பொ ருந்தியது. அதனால் நசீ ருக்கு, நசீம் மனைவி யின் கல்லீ ரலையும், நசீமுக்கு நசீர் மகனுடை ய கல்லீரலையும் பொரு த்தினோம். இப்போது, இரண்டு குடும்பத்தாரும் மகிழ்ச்சி யுடன் இருக்கிறார்கள். இரண்டு நோயாளிகளுக்கும் கல்லீரல் பிரச்னை தீர்ந்துவிட்டது!” என்றார்.

உலகின் முன்னணி கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபு ணரும், குளோ பல் மருத்துவமனை குழுமத்தின் ஹெ ச்.பி.பீ. அண்ட் லிவர் டிரான்ஸ் பிளா ன்டேஷன் இயக்குநருமான பேராசிரி யர் முகம்மது ரேலா தலைமையில் 20 பேர் அடங்கிய குழு, இந்த அறுவை சிகிச்சையை செய்து இருக்கிறது. 12 ஆண்டுகளுக்கு முன்பே, உயிருடன் இருக்கும் ஒருவரிடம் இருந்து உறுப்பை எடுத்து, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை யை, முதன் முறையாக இங்கிலாந் தில் வெற்றிகரமாக நடத்தியவர் டாக்டர் ரேலா. அவரிடம் பேசினோ ம்.

”ஒரே நேரத்தில் பேஷன்ட், டோனர் என்று நான்கு பேருக் குமே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். மே ஜர் ஆபரேஷன் இது. அதனால் நால் வரின் உடல் நிலை மற்றும் மன நிலையைப் பரிசோதித்து, முறைப்படி டிரான்ஸ்ப்ளான்ட் ஆஃப் ஹுயூமன் ஆர்கன்ஸ் சட்டத்தின்படி அனு மதி பெற்று, சிகிச் சையைத் தொடங்கி னோம். 16 மணி நே ரம் இந்த அறு வைச் சிகிச்சை நீடித்தது. தானம் செய்த இரு வரிடம் இருந்தும், சு மார் 55 முதல் 60 சதவிகித கல்லீரல் எடுத்து, நோயாளிக ளுக்குப் பொருத்தி னோம். தானம் கொ டுத்தவர்கள் ஒரே வாரத்திலும், தானம் பெற்றவர்கள் மூன்று வாரத்திலும் குணம் அடைந்தார்கள். இப்போது, சிகிச்சை முடிந்து ஒரு மாதம் ஆன நிலையில் எல்லோருமே நன்றாக உள்ளனர்.

இப்போது, 30 வயது முதல் 50 வயதுக்குள் நிறைய பேருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படுகி றது. பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினரும் கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளலாம். 80 வய தில் ஒருவருக்கு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், அவர் இனி வாழ இருக்கும் காலம் மற்றும் பொருளாதாரச் சூழ்நி லையையும் பொறுத்துத்தான் முடிவெடுக்க வேண்டும்.

இந்த ஆபரேஷனுக்குப் பிறகு சிலருக்கு உடலில் எடை கூடி விடும். அதிக அளவு கொழுப்பு, சர்க்கரை, உப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரை, பழங்க ளை உணவில் அதிக அள வில் சேர்த்துக் கொண்டு, தினமும் போதுமான உடற் பயிற்சியும் செய்துவந்தால், ஆயுள் முழுக்க ஆரோக்கிய மாக இருக் கலாம்.

நம் நாட்டில் கல்லீரல் நோய் பாதிப்பும், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை தேவை ப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் மிகவும் அதிகம். அதனால் இந்த உறுப்புகளுக்குக் கடுமையான பற்றாக்குறை நிலவுவதால், அறுவைச் சிகிச்சைக்காக காத்தி ருப்போரின் பட்டியல் நீண்டு செல்கிறது. இது போன்ற சூழ்நிலையில், தானம் கொடுக்க முன் வருபவர்களை எப்படியே னும் பயன்படுத்திக் கொ ள்ள முன் வர வேண்டும் என்பதற்கான முதல் படிதான் இந்த ஆபரே ஷன். இதுபோன்ற செயல் நாடெங்கும் பரவும்போது, மாற்று அறுவைச் சிகிச்சைக்காக காத்திரு க்கும் நோயாளி கள் எண்ணிக்கை வெகுவாகக் குறையும்!” என்றார்.

உடல் உறுப்பு தானம் பெருகட்டும்… மனித உயிர்கள் நீடுழி வாழட்டும்!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: