Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கல்லை நொறுக்கும் மணல் – அகஸ்தீஸ்வரர்

நமது செயல்பாடுகள் எல்லாமே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடுமை யாகப் போராடுகிறோம். ஆனால், பல தடைக் கற் கள் நம்மை மூச்சிறைக்க வைக்கின்றன. இவற்றை யெல்லாம் நொறுக்கித் தள்ளுபவராக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அகஸ்தீஸ்வரர் அருளு கிறார். இவர் மணலால் செய்யப்பட்ட லிங்கமாக இங்கு அருளுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தல வரலாறு: கயிலாயத்தில் சிவபிரான், பார்வதிதேவியை திருமணம் செய்த போது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. உலகை சமப்படுத்த பொதிகை மலைக்கு செல்லு மாறு, அகத்தியருக்கு சிவன் கட்டளையிட்டார். அங்கு செல் லும் வழியில், அகத்தியர் பல இடங்களில் லிங்க பிரதி ஷ்டை செய்து வழிபட்டார். அமராவதி ஆற்றங்கரைக்கு வந் த போது, மணலில் ஒரு லிங்கம் வடித்தார். அகஸ்தியர் வடி த்த லிங்கம் என்பதால் சுவாமிக்கு அகஸ்தீஸ்வரர் என்ற திருப் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், லிங்கம் இருந்த இடத்தில், பிற்காலத்தில் கோயில் வடிக்கப்பட்டது. இந்த ஊரே தற்போதைய தாராபுரம்.

சிறப்பம்சம்: பஞ்சபாண்டவர்கள் ஒரு ஆண்டு இங்கு வாழ்ந்ததாக கூறப்படுகிறது. திரும லை சுவாமி சித்தர் வழி பட்டு ள்ளார். ராமேஸ்வரம், கும்ப கோணம், காஞ்சிபுரம் நகரி லுள்ள கோயில்களில் உள்ள மணல் லிங்கங்களுக்கு அபிஷே கம் நடப்பதில்லை. ஆனால், இங்கு தினமும் அபிஷேகம் நடந்து வருகிறது. எண்ணெய் காப்பு சாத்தும் முன் இந்த லிங்கத்தில், மணலில் சேர்ந்துள்ள “காக்கா பொன்’ என் னும் துகள் ஜொலிப்பதைக் காணலாம். இந்த லிங்கத்தை இங்கு ஸ்தாபிதம் செய்யும் முன்பு, இத்த லத்தின் மகிமை யால் ஈர்க்கப்பட்ட அகஸ்தியர், இவ்வூரில் காசியில் இருந்து ஒரு லிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய விரும் பினார். அது முடியாமல் போனதால், அமரா வதி ஆற்றை கங்கையாக எண்ணி, அதிலுள்ள மணலை பிடித்தே லிங்கம் வடித்தார். இதனால், தடையில்லாமல் வி ரைவில் செயல்க ளை முடிக்க இந்த அகஸ்தீஸ்வரரை வண ங்குகின்றனர். குறிப்பாக நீதிமன்ற வழக்குகள் முடிவு க்கு வரவும், தடை பட்ட சுபநிகழ்ச்சிகள் நடக்கவும், படித்து முடித் ததும் தாமத மின்றி வேலை கிடைக்கவும், முன்னேற்ற திருப்பங்கள் ஏற்படவும் பூஜை செய்து வரலாம்.

ஞ்சலிங்க வழிபாடு: நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகா யம் ஆகிய ஐந்து பஞ்ச பூதங் களையும் வணங்கும் வகை யில் ஒரே சன்னதியில் ஐந்து லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இவை உயரத்தில் மாறுபட்டவை. சிவ ராத்திரி மற் றும் பிரதோஷ காலங்களில் பஞ்சலிங்கங்களை வழிபடுவ தன் மூலம் வாழ்க்கையில் அனைத்து வெற் றிகளும் கிடைக்கும். இங்குள்ள அகிலாண்டேஸ்வரி அம்பிகை சன் னதியில், கன்னியர்கள் திருமணத் தடையை நீக்கவும், திருமணமான பெண்கள் சுமங்கலி பாக்கியம் வேண்டியும் வழி படுகின்றனர். அமரா வதி ஆற்றில் குளித்து ஈரப் புடவையுடன் அம்பாளை பயப க்தியுடன் வணங்கு வதை காண முடிகி றது. அத்துடன் அம் பாள் சன்னதியிலோ, வீட்டி லோ திரிசதி 300 நாமாவளியை ஐந்து அல்லது ஒன்பது வெள்ளிக்கிழமை பூஜித்து வந்தால் திருமணத்தடை விலகு வதுடன், குழந்தை பாக்கியம், கல்வி முன்னேற்றம், வேலை வாய்ப்பு ஆகிய பல ன்கள் கிடைக்கும்.

குறைதீர்க்கும் பெருமாள்: கோயில் வாசலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி எழுந்த ருளியுள்ளார். பெருமாளை வணங்கிவிட்டு அகஸ்தீஸ்வரர் கோயிலுக்கு உள்ளே செல்லும் வகையில் கோயில் அமைக் கப்பட்டுள்ளது. இந்த பெருமாள் மனக்குறையைத் தீர்த்து வைப்பவராக உள்ளார்.

திருவிழா: கந்த சஷ்டி, ஆடிப்பெருக்கு, நவராத்திரி, சிவ ராத்திரி, பொங்கல், சித்திரை விஷுவன்று கனி காணுதல்.

திறக்கும் நேரம்: காலை 6.30- பகல் 11.30 மணி, மாலை 4.30- இரவு 7.30 மணி.

இருப்பிடம்: திருப்பூரில் இருந்து 60 கி.மீ., ஈரோட்டில் இருந்து 80 கி.மீ.,. ஐந்துமுக்கு ஸ்டாப் அருகில்.

போன்: 98420 16848

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: