Wednesday, September 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பட்ஜெட் விலைகளில் புதிய மாடல் மொபைல் போன்கள்

பிரிமியம், நடுத்தரம் மற்றும் பட்ஜெட் விலைகளில் புதிய மாடல்களாக பல மொபைல் போன்கள் சென்ற சில வாரங்க ளில் அறிமுகமாகியுள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1.எல்.ஜி. ஆப்டிமஸ்2 எக்ஸ் (LG P990 Optimus 2X): நவீன ப்ராசசர் ஒன்றுடன் வடிவ மைக்கப்பட்ட முதல் ஸ்மா ர்ட் போன் இது. இதன் டெக் ரா 2 டூயல் கோர் ப்ராசசர், ஒரு கிகா ஹெர் ட்ஸ் வே கம் கொண்டது. ப்ரையோ ஆண்ட்ராய்ட் 2.2 சிஸ் டம் இயங்குகிறது. இதன் நான் கு அங்குல அழகிய வண்ண த் திரையில் உங்கள் வீடியோ கிளிப்களைத் தெளி வாகவும் துல்லியமாகவும் பார்த்து ரசிக்கலாம். இதன் பேட்டரியின் திறனும் கூடுதலாக 1500 mAh பவர் கொண்டுள்ளது. P990 Optimus 2X எனப் பெயரிடப்பட்ட இந்த மொபைல் போன், 6.4 ஜிபி மெமரி கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்கலாம். 3ஜி அழைப்பு மற் றும் ஸூம் வசதியுடன் கூடிய கேமரா 8 எம்பி திறன் கொ ண்டதாக உள்ளது. முன்புறத்தில் வீடியோ அழைப்புகளுக்கெ ன தனி கேமரா ஒன்று தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம். எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ் மெயில் ஆகிய நெட் வொர்க் வசதிகள் எளிமையாகவும் விரை வாகவும் கிடை க்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடி யோ, A2DP இணைந்த புளு டூத் மற்றும் அக்ஸி லரோமீட்டர் ஆகியவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இதன் அதிக பட்ச விலை ரூ. 25,481.

2. சாம்சங் சி3560: இது ஒரு கிளாம் ஷெல் போனாக வடிவ மைக்கப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளு டன் சில சிறப்பு அம்சங்களையும் கொண்டு ள்ளது. 2.2 அங் குல டி.எப்.டி. வண்ணத்தி ரை, ஸ்டீரியோ எப்.எம் . ரேடியோ, புளுடூத், மைக் ரோ எஸ்.டி. கார்ட் மூல ம் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத் துதல், 2 எம்.பி. திறனுடன் ஸூம் வசதி கொண்ட டிஜிட்டல் கேமரா, வீடியோ இயக்கம், எஸ்.எம். எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், இ மெயில் வச தி, எம்.பி.3 மியூசிக் பிளேயர் ஆகியன தரப்பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 4,231.

3.சாம்சங் இ2232: குறைந்த பட்ச அடிப்படை வசதிகளுடன் இந்த போன் வடிவமைக்கப் பட்டிரு ந்தாலும், இரண்டு சிம் களை இதில் இயக்கலாம். 1.77 அங்குல டி.எப்.டி. டிஸ்பிளே, போட்டோ மற்றும் வீடி யோ எடுக்க விஜிஏ கேமரா, புளுடூத், 3.5 மிமீ ஆடியோ ஜாக், எம்பி 3 மியூசிக் பிளேயர், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவற்றுடன் கேண் டி பார் போனாக இது உள்ளது. இதன் நினைவகம் 20 எம்பி. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். அனுப்ப முடியும். இமெயில் பெறும் வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு A2DP இணைந்த புளுடூத் ஆகியனவும் தரப் பட்டுள்ளன. இதன் அதிக பட்ச விலை ரூ. 2,308.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: