Thursday, February 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

18 அடியில் பனிலிங்கம்: அமர்நாத் குகை கோவிலில் . . .

காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், 18 அடி உயர பனி லிங்கம் உருவாகி யுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், இமய மலையில் அமர்நாத் குகைக் கோவில் உள் ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 856 அடி உயரத்தில் உ ள்ள இந்த குகைக் கோவிலில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர் கள், நாடு முழுவதிலுமிருந்தும் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பனி லிங்கத்தை தரிசிப் பதற்காக, இரண்டு லட்சத்திற்கு ம் அதிகமான பக்தர்கள் முன் பதிவு செய்துள்ளனர். அமர் நாத் குகைக் கோவிலில் இந்த ஆண்டு 18 அடி உயரத்தில் இயற் கை பனி லிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிப்பற்கான யாத்திரை விரை வில் தொடங்க உள்ளது. அமர் நாத் குகைக்கோவிலுக்கு காஷ் மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பகல்காம் வழியாகவும், மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் வழி யாகவும் செல்ல லாம். பக்தர்கள் எளிதாக யாத்திரை மேற் கொள்வதற்கு வசதியாக, இந்த இருவழிகளையும் சீர்படுத் தும் பணிகளை அம்மாநில அரசு செய்து வருகிறது. மேலும், பக்தர்களின் பாதுகாப்புக்காக, மாநில போலீசாரும், 50 கம் பெனி துணை ராணுவப் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ள தாக அம்மாநில அரசு தெரி வித்து ள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

%d bloggers like this: