Tuesday, September 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அண்மையில் அறிமுகமான எச்.டி.சி. சல்சா மொபைல்

எச்.டி.சி. நிறுவனம் தயாரித்து அண்மையில் மொபைல் உல கக் கருத்தரங்கில் அறிமுக மான சல்சா மொபைல், இந் தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள து. இதன் அதிகபட்ச விலை ரூ.20,399 என்பது பலர் வர வேற்கும் செய்தியாக உள்ள து. இது ஒரு ஸ்மார்ட் போன். இதில் பேஸ்புக் த ளம் செல்ல என ஒரு தனி பட்டன் தரப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் ஜிஞ்சர் ப்ரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குகிறது. 3.4 அங்குலத்தில் வண்ணத் தொடு திரை தரப்பட்டுள்ளது. இதன் பிக்ஸெல் அமைப்பு 320×480 ஆகும். இதன் ப்ராசசர் 800 மெஹா ஹெர் ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. பயன்பாட்டு நினைவகம் 512 எம்பி மற்றும் மாறா நினைவகம் 512 எம்பி தரப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் நினைவகத்தினை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம். ஆ ட்டோ போகஸ், முகம் அறி ந்து போட்டோ எடுத்தல், இட ம் சுட்டுதல், எல்.இ.டி. பிளா ஷ் ஆகியவற்றுடன் 5 எம்.பி. கேமரா தரப்பட்டுள்ளது. மி கக் குறைந்த வெளிச்சத்தில் கூட இதனால் போட்டோ எடு க்க முடியும். முன்புறம் மற் றொரு விஜிஏ கேமரா உள் ளது. இதன் மூலம் வீடியோ அழைப்பு களை மேற்கொள்ள முடியும்.

இந்த போனில் 3ஜி சேவை, GPRS, EDGE, WiFi, Bluetooth 3.0 மற்றும் GPS with AGPS ஆகிய தொழில் நுட்பங்கள் மூலம் இயங்குவது, வாடிக்கையாளர்களுக்கு இதனைப் பயன்படுத் து வதனை எளிதாக்குகிற து. இதில் நான்கு பேண்ட் அலை வரிசை இயக்கம் இ ருப்பதால், உலகின் எந்த நாட்டிலும் இதனைப் பயன் படுத்தலாம்.

இந்த போனில் 1520 mAh திறன் கொண்ட பேட்டரி தரப்பட்டுள்ளது. 585 நிமிட ங்கள் தொடர்ந்து பயன்படு த்தலாம். பயன் படுத்தாவி ட்டாலும் 465 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்கி றது. இதன் எடை 120 கிராம். அளவு பரிமாணங்கள் 5.89 x1.23 x10.91 செ.மீ. பேஸ்புக் தளத்தினை அதிகம் பயன்படுத்துவோர், அதற்கென தனியே ஒரு கீ இருப்பதால், ஆர்வத்துடன் இந்த போனை வாங்கிட விரும்பலாம்.

இதே போன்ற இன்னொரு மொபைல் போனை எச்.டி.சி. நிறு வனம் சாச்சா (Chacha) என்ற பெயரில் விரைவில் வெளியிட இருக்கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply