Saturday, July 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

நோய்த்தடுப்பு ஆற்றல் கொண்ட வெற்றிலை

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன் பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத் தப்படும் தாவரங்களில் வெற்றிலை யும் ஒன்றாகும். கிமு 2-ம் நூற்றா ண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகாவம்சம் என் னும் நூலில் வெற் றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் மிதவெப்ப மற்றும் குளிர்ச்சியான பகுதிகளில் வெற்றிலை வளர்க்கப்படுகிற து. வங்காளம், ஒரிசா, தமிழ் நாடு மும்பை போன்ற இடங்க ளில் இதன் இலைக்காக பயிரி டப்படுகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகி யன அதிகம் உள்ளது. இது த விர வெற்றிலையைப் பயன்ப டுத்தி பல நோய்களையும் குண ப்படுத்தலாம்.

செயல்திறன் மிக்க வேதிப் பொ ருள்கள்

கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட் ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது.

 மருத்துவப்பயன் உடை ய பகுதிகள்

இலைகளும், வேர்களும் மருத்துவ பயன் உடை யவை. இலைகளில் கா ணப்படும் எளிதில் ஆவி யாகும் எண்ணெய் மூச் சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத் தன்மையை போக்குகிறது. அரைடம்ளர் தேங்காய் எண்ணெ யில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடி கட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங் கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறி தளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குண மாகும்.

 தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடி த்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷ ம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

ர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப் பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரை கொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உண வுக்கு முன்பு சாப்பிடவும்.

 அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றி லையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வர வும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இர ண்டு அவுன்ஸ் சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகிய வற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

தாம்பூலம் தரித்தல்:

நமது உடலில் சுரக்கும் 24 விதமான “அமினோ அமில ங்கள்” வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரி தும் உறுதுணையாகும் இந்த “அமினோ அமிலங் களை” வெற்றிலை மூலம் நாம் அடையும்போது ஜீரண ம் எளிதாகின்றது. அதனால் தான் நம்முன்னோர்கள் உண வுக்குப் பின் “தாம்பூலம்” தரிக்கும் வழக்கத்தை ஏற்படு த்தியுள்ளனர்.

வெற்றிலைப் பாக்குடன் கூடிய தாம்பூலம் “மங்கலப் பொ ருள்” என்பது பலர் அறிந்த உண் மை. ஆனால் நம் முன்னோர் அதி ல் மருத்துவப் பயனையும் புகுத் தியுள்ளனர். மிகச்சிறந்த “நோய்த் தடுப்பு ஆற்றல்” தாம்பூலத்தில் உள்ளது. வெற்றி லை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும் போது உமிழ்நீர் சுரப்பி னை தூண்டுவதுடன் ஒரு வித உற்சாக உணர்வினை தரு கிறது. பெரும்பாலான நாடுகளில் வெற்றிலைக்கு பால் உணர்வை மற்றும் நரம்பு வலுவேற்றும் சக்தி இருப்பதாக கருதப்படுகிறது. அதனால்தான் புது மண தம்பதியர்களுக்கு தாம்பூலம் தரிப்பது என்பது ஒரு சடங்காக நடைபெறுகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply