Saturday, September 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பாலியல் உந்து சக்தியை அளிக்கக் கூடிய வெந்தயம்

நாம் அன்றாடம் சமையலில் பாவி க்கும் ஒரு திரவியம் வெந்தயம். வாச னைக்காகவும், சுவைக்காகவும் இதை பொதுவாகப் பயன்படுத்துவ துண்டு. இது நிறைய மருத்துவ குண ங்களை தன்னகத்தே கொண்ட ஒருவகை மூலி கை.

தெற்காசிய நாட்டவர்களே இதை அதி கம் பயன்படுத்துகின் றனர். ஆனால் விஞ்ஞானிகள் இதைப் பற்றிய இன்னொரு முக்கியத் தகவலை கண்டுபிடித்து வெளியிட்டுள்ளனர். இது பாலி யல் உந்து சக்தியை அளிக்கக் கூடியது என்பதுதான் அந்தப் புதிய கண்டுபிடிப்பு.

ஆண்கள் இதை அதிகம் எடுத்துக் கொள்வதால் தமது இய ல்பான பா லியல் சக்தியை குறைந்த பட்சம் இன்னும் கால்வாசியால் அதிக ரித்துக் கொள்ள முடியும். 25 வயது க்கும் 52 வயதுக்கும் இடைப்பட்ட அறுபது ஆரோக்கியமான நபர்கள் மத்தியில் இது சம்பந்தமான ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

இவர்களுக்கு ஆறு வார ங்களுக்கு தொடர்ந்து தினசரி இரு தடவை வெந்தயம் வழங்கப்ப ட்டது. மூன்று வாரங்களு க்குப் பின்னர் ஆறு வா ரம் வரையான காலப் பகுதியில் இவர்களின் பாலியல் உணர்வுகள் பரி சோதிக்கப்பட்டன.

அப்போது இவர்களில் 28 வீதமானவர்களிடையே 16.1வீதம் முதல் 20.6 வீதம்வரை வீரிய உணர்வு மேலோங்கி இருந்தது அவதானிக்கப்பட்டது.இதே காலப் பகுதியில் இன்னொரு பிரி வினருக்கு பாலியல் சம்பந்தமான மாத்திரைகளும் வழங்கி அவர் களும் அவதானிக்க ப்பட்டனர்.

அனால் அவர்களில் எந்த முன் னேற்றமும் தெரியவில்லை. வெந் தய விதை மற்றும் கீரை ஆகிய இரண்டுமே மிகச் சிறந்த வை. இந்திய உணவுகளில் இவை பெருமளவு பன்படுத்தப்படுகின் றன. வெந்தயத்தில் saponins என ப்படும் மூலப்பொருள் கலந்துள் ளது.

இது ஆண்களின் விந்து உற்பத்தி உட்பட பாலியல் ஹோர்மோன்களைப் பலப்படுத்தக் கூடி யது. படுக்கை அறையை சூ டாக்க வெந்தயம் பெரி தும் கை கொடுக்கும் என்று இந் த ஆய்வை நடத்திய விஞ் ஞானிகள் தெரிவித்துள்ள னர்.

அவுஸ்திரேலியாவின் பிரி ஸ்பேன் நகர மருத்துவ பீட ஆய்வாளர்களே இந்த முடி வை அறிவித்துள்ளனர். பாலியல் குறைபாடு உள்ளவர்களுக்கு வெந்தயம் மூலம் தாங்கள் அளித்த சிகிச்சை சிறந்த பெறுபேறைத் தந்துள்ள தாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply