Thursday, November 26அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அலங்கார மீன்கள்

நன்னீர் மீன்கள், குட்டி ஈனுபவை மற்றும் முட்டையிட்டு இனப் பெருக்கம் செய் பவை என இரு வகைப் படும். குட்டி யிட்டு இனப் பெருக்கம் செய்பவைக ளில் கப்பி, மொலி, பிளா ட்டி, ஸ்வோர்ட்டேய்ஸ் ஆகியவைகள் சாதாரண மாகக் கண்ணாடித் தொ ட்டியை அலங்கரிப்ப வை.

கப்பி: ஆண் மீன்கள் 2.5 செ.மீ. நீளமும், பெண் மீன்கள் 5 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 7.5-8.5 கார அமில நிலையும் வளர்ப்பிற்கேற்ப தட்பவெப்ப சூழ்நிலையும் (26-30 டிகிரி செ.கி) ஏற்றவை. 4-6 வார காலத்திற்கு ஒருமுறை 50 குட்டிகளை இடுகின் றன.

மோலி: கறுப்பு, வெள் ளை, ஆரஞ்சு மற்றும் சாக்லேட் நிறமுடை யவை. 9 செ.மீ. நீள மும், 10-15 கிராம் எடை வரையிலும் வளர் பவை. 5 வாரத் திற்கு ஒரு முறை 250 குட்டிகளை இடும். ஆண் மீன்களின் முது குத் துடுப்பு நிமிர்ந்து விசிறி போல் காணப்படும்.

பிளாட்டி: பல்வேறு வண்ண வகையினை உடையது. ஆண் மீன்கள் 4 செ.மீ. வரையிலும், பெண் மீன்கள் 5 செ.மீ. வரை யிலும் 3-4 வார இடைவெளிக்கு ஒரு முறை 50-75 குட்டி களை இடும். 10 பெண்சி னை மீன்களுக்கு ஒரு ஆண்மீன் என இருப்பு செ ய்ய வேண்டும்.

ஸ்வோர்ட்டெய்ல்: ஆண் மீன்கள் 8 செ.மீ. வரையி லும் பெண் மீன்கள் 12 செ.மீ. நீளம் வரையிலும் வளர்கின்றன. 5 பெண் மீன்களுக்கு ஒரு ஆண் மீன் போதுமானது. ஆண்மீனின் வால் துடுப்பு வீரனின்வாள் போல் நீண்டு வனப்புடன் காணப்படும்.

எல்லா வகையான குட்டியிடும் அலங்கார மீன்களுக்கும் நீர் ப்பாசிகள் மறைவிடமாகவும் பாதுகாப்பாகவும் விளங்குகி ன்றன. புழு, பூச்சி போன்ற உயிர் உணவுகளையே மீன்கள் விரும்பி உண்கின்றன. எனவே சினை மீன்களின் இனப் பெருக்க உணர்ச்சியினைத் தூண்ட புரதம் நிறைந்த உணவுக ளையும் தகுந்த மறைவிடங்களையும் அளித்து குட்டிகளைப் பாதுகாத்து உற்பத்தி செய்ய வேண்டும்.

முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்ற மீன்களில் கோய் கெண்டை, செவ்வால் சுறா, பொன்மீன், ரோசி பாரிப், டைகர் பாரிப், டெட்ரா, கவு ராபி, பைட்டர், ராமி ரன் நீல சிக்ளிட், அவு ரோங்கல், ஏஞ்சல், ஆஸ்கார் ஆகியவை கண்ணாடித் தொட் டிகளை அலங்கரித்து கண்களுக்கு விருந்தூ ட்டுபவை. வியா பார ரீதியில் வளர்த்து உற்பத்தி செய்து விற் பனை செய்வதற்கு ஏற்றவை.

பொன்மீன்: சிவப்பு ஒராண்டா, சிங்கத்தலை, முட்டைக்கண் முத்துச்செதில், காரிகோ, கருப்புமூர் போன்ற நூற்றுக்கணக் கான வகையான பொன் மீன்கள் உள்ளன. இம்மீ ன்கள் தாவர மற்றும் புழு பூச்சி போன்ற மாமிச உணவுகளை உண்டு 4 மாதகாலத்தில் 20 முத ல் 25 கிராம் உடல் எடை யினைப் பெறும். 5 முத ல் 6 மாத காலத்தில் பரு வ முதிர்ச்சியடைந்து இனப்பெருக்கம் செய்கி ன்றன. காரத்தன்மையுடையதும் (7.5 – 8.5) மிதமான வெப்ப நீரும் (25-28.5 டிகிரி செ.கி), மித கடின நீரும் (150-250 மி.கி /லி) பொன் மீனுக்கு ஏற்ற நீர்ச்சூழல் குணங்கள் 25 கிராம் எடையுள்ள பொன்மீன் கிட்டத்தட்ட 750 ஒட்டும் தன்மை யுள்ள முட்டைகளை நீர்ப்பாசிகளில் இடுகி ன்றன. சிறிய நூல் போன்ற நுண் குஞ்சுகள் 65-72 மணி நேரத்தில் பொரிந்து வெளிவருகின்றன. பொன்மீன்களைத் தொட்டிகளில் தனி யாகத்தான் வளர்க்க வேண்டும். (தகவல்: தமிழ்நாடு கால் நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகம், சென்னை-1) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply