நெட்டு வரிசை முழுவதும் செலக்ட் செய்திட வேண்டுமா? கர்சரை அங்கு கொண்டு சென்று கண்ட்ரோல் +ஸ்பேஸ் பார் (Ctrl+Spacebar) அழுத்தவும்.
படுக்கை வரிசை முழுவதும் செலக்ட் செய்திட கர்சரை அந்த வரிசையில் கொண்டு சென்று ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift +Space bar) அழுத்தவும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்புள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும்.
Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கி றதோ அந்த செல் சம்பந்தப்பட்ட பார்முலாக்கள் காட்டப் படும்.
ஷிப்ட் + ஆரோ கீ (Shft+ Arrow key) அழுத்தினால் செல்கள் தேர்ந்தெடுக்கப் படுவது ஒரு செல்லுக்கு நீட்டிக்கப்படும்.
கண்ட்ரோல் + ஷிப்ட் + ஆரோ கீ (Ctrl+Shft+Arrow key) அழுத் தினால் அதே படுக்கை அல்லது நெட்டு வரிசையில் டேட்டா இரு க்கும் கடைசி செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப்படும்.
ஷிப்ட் + ஹோம் கீகள் (Shft+Home) அழுத்தப் படுகையில் படு க்கை வரிசையின் முதல் செல் வரை செலக்ஷன் நீட்டிக்கப் படும்.
கண்ட்ரோல்+ஷிப்ட்+ ஹோம் (Ctrl+Shft+Home) கீகள் அழுத் தப் படுகையில் செலக்ஷ ன் ஒர்க் ஷீட்டின் முதல் செல் வரை நீட்டிக்கப்ப டும்.
கண்ட்ரோல்+ஷிப்ட் + எ ண்ட் (Ctrl+Shft+End) கீகள் அழுத்தப்படுகையில் செ லக்ஷன் ஒர்க்ஷீட்டில் கடைசியாகப் பயன்படுத் தப்பட்ட செல் வரையில் நீட்டிக்கப்படும்.
என்டர் கீ (Enter) அழுத்தப்படுகையில் அந்த செல் முடிக்கப் பட்டு கர்சர் கீழாக உள்ள செல்லுக்குச் செல்லும்.
ஆல்ட் + என்டர் (Alt +Enter) அழுத்தினால் அதே செல்லில் அடு த்த வரிக்குக் கர்சர் செல்லும்.
டேப் கீ (TAB) அழுத்தப் படுகையில் கர்சர் இ ருக்கும் செல்லில் டே ட்டா தருவது நிறை வடைந்து கர்சர் வலது புறம் இருக்கும் அடுத்த செல்லுக்குச் செல்லும்.
ஷிப்ட்+ டேப் (Shft+TAB) கீகளை அழுத்தினால் செல்லில் டேட்டா தருவது நிறைவடைந்து கர்சர் இடது புறம் இருக்கும் முந்தைய செல்லுக்குச் செல்லும்.
செல் ஒன்றில் என்டர் செய்த டேட்டா வினைக் கேன்சல் செய்திட எஸ்கேப் கீயை அழுத்தவு ம்.
செல் என்ட்ரிக்குள்ளாக ஆரோ கீ அழுத்தினால் ஆரோவின் திசைக்கேற்ப இடது, வலது, மேல், கீழாகச் செல்லும்.
எக்ஸெல் ஷார்ட்கட்ஸ் எக்ஸெல் தொகுப்பில் செயல் படு கையில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷா ர்ட் கட் வழிகள் இங்கு தரப்படுகின்றன.
CTRL+SPACEBAR – கர்சர் இருக்கும் நெட்டு வரிசை தேர்ந் தெடு க்கப்படும்.
SHIFT+SPACEBAR : கர்சர் இருக்கும் படுக் கை வரிசை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL+HOME : ஒர்க் ஷீட்டின் தொடக் கத்திற்கு செல்ல
CTRL+END: ஒர்க்ஷீட்டின் இறுதிக்குச் செல்ல
SHIFT+F3 : பார்முலாவில் ஒரு பங்ஷனை ஒட்ட
CTRL+A: பார்முலா என்டர் செய்கையில் பங்ஷன் பெயர் டைப் செய்தவுடன் பார்முலா பேலட்டைக் காட்டும்
CTRL+A: பார்முலா என்டர் அல்லது எடிட் செய் யாதபோது அனைத்தையும் தேர்ந்தெடுக்கும்.
CTRL+‘ : (சிங்கிள் லெப்ட் கொட்டேஷன் மார்க்) செல் வேல்யூ மற்றும் செல் பார்முலாவை அடுத்தடுத்துக் காண லாம்.
F11 or ALT+F1: அப்போது உள்ள ரேஞ்ச் சார்ந்து சார்ட் தயார் செய்யப்படும்.
CTRL+; –– (செமிகோலன்) தேதியை இடைச் செருக
CTRL+: (கோலன்) நேரத்தை இடைச் செருக
CTRL+ENTER: தேர்ந்தெடுக்கப்பட்ட செல் ரேஞ்சில் அப்போதைய என்ட்ரி உருவாக்க
F5: Go To டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+1: Format Cells டயலாக் பாக்ஸ் காட்ட
CTRL+C: காப்பி செய்தல்
CTRL+V: ஒட்டுதல்
CTRL+Z: செயல்படுத்தியதை நீக்க
CTRL+S: சேவ் செய்திட
CTRL+P : பிரிண்ட் செய்திட
CTRL+O : புதிய பைல் திறக்க போல்டரைக் காட்டும்.