Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிலருக்கு, வாய்விட்டு சிரித்தால் நோய் வந்து சேரும் ஏன்?

சிரிப்பு வந்தாலும் சிரிக்க முடியாத நிலையில் சில பெண்கள் இருப்பதேன்? இது என்ன வினோத நோய்?

சில பெண்களுக்கு சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினா லோ, சிறுநீர்க்கசிவு ஏற்படும். இதை மருத்துவ ரீதியாக, Stress Urinary Incontinence என்று கூறு வர். இதுவொரு வி னோதமான நோய்தான். சிரித்தாலோ, இருமி னாலோ, தும்மினாலோ, எடை தூக்கினாலோ வரும் சிறுநீர் கசி வை பற்றி தங்கள் பெற்றோரிட மோ, கணவன்மார்களிடமோ கூட இதைப்பற்றி பேச கூச்சப்படுகிறார் கள். வீட்டில் நடக்கும் சுப காரியங் களில் கூட கலந்து கொள்வதில் லை. வெளியில் சென்றால் சிறு நீர்க்கசிவு ஏற்பட்டு, சிறுநீர் வாடை அடித்து விடுமோ என்று கவலை க்கு உள்ளாகிறார்கள்.

வீட்டில் உள்ளவர்களிடத்திலேயே இத்தகைய பிரச்சினை களைப் பற்றிப் பேசாத பெண்கள் மருத்துவர்களிடத்தும் வரு வதில்லை. மேலும் தங்கள் வீட்டில் உள்ள வயது முதிர்ந்த பெண்களிடம் பேசி, அவ ர்கள் இதை வயது முதி ர்ச்சியால் வருவது, இத ற்கு ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி விடுவதால் இதை அப்ப டியே விட்டு விடுகின்ற னர். வீட்டு வேலை செய் யும் பெண்களைக் காட் டிலும், வெளியில் பணி புரியும் பெண்கள்தான் அ திகம் இதனால் மனரீதியில், உடல் ரீதியில் பாதிக்கப்படு கின்றனர். ஆனால், இப்போது இந்நிலை மாறிவிட்டது. அமெரிக்கா போன்ற வல் லரசு நாடுகளில்தான் இத ற்கான சிகிச்சை அளிக்க ப்படும் என்ற நிலை மை மாறி இங்கேயும் இதற்கு சிகிச்சை அளிக்கப்படு கிறது.

! இந்த விநோத நோய் எத்தகைய பெண்களுக்கு வரும்?

இந்த நோய் சுகப்பிரசவமான பெண்களுக்கு, அடுத்து வயது முதிர்ச்சியானவர்களுக்கு, ஆஸ்துமா, மலச்சிக்கல் உள்ள பெண்களுக்கு, 35 வயதிற்கு மேலா னவர்களுக்கு, குண்டான பெண்களு க்கு, மெனோபாஸ் பிரச்சினை உள் ளவர்களுக்கு, கருப்பை அகற்றப்பட் டவர்களுக்கு, சிறுநீர் பையில் துவாரம் ஏற்பட்டவர்களுக்கும் வர வாய்ப்பு உண்டு. இவர்களுக்கு எல்லாம் கட்டாயம் வரும் என்பதில்லை.

! இந்த நோயின் வெளிப்படையான அறிகுறிகள் எப்படியி ருக்கும்?

ருமினால், தும்மினா ல், சிரித்தால் சிறுநீர் கசி யும். மேலும் சிலருக்கு சிறுநீரை அடக்க முடி யாமல் பாத்ரூமிற்குள் நுழை வதற்குள் அவசர அவசரமாக வந்துவிடும்.

! பெண்களுக்கு கட்டுப் பாடற்ற முறையில் சிறு நீர் கசிய என்ன கார ணம்?

பெண்களின் இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடித்தளத்து தசைகள் சிறுநீர் குழாயினையும், சிறுநீர் பாதையினையும் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இ ந்த அடித்தள தசைகள் Urethra என் கிற சிறுநீர் குழாயினை வலுவாக, மிக சரியாக தாங்கிப் பிடித்து வை த்திருக்கும். சில பெண்களுக்கு இடுப்பு பகுதியில் இருக்கின்ற அடி த்தளத்து தசைகள் தளர்ச்சியோ, பலவீனமோ அடைகின்ற பொழுது பெண்களுக்கு இருமினால், பலமா ன பொருட்களை தூக்கினால், சிரி த்தால் அவர்களையும் அறியாமல் சிறுநீர் கசிந்துவிடும். ஆக கட்டுப் படுத்த முடியாத சிறுநீர் கசிவிற்கு முதல் காரணமாக இருப்பது தசைகளின் தளர்ச்சியே.

அடுத்து-சிறுநீர் (Urethra) குழாயினை Spinchter என்கிற தசை கள் பாதுகாப்புடன் சிறுநீரை நாமாக வெளியேற்றும் வரை யில் இறுக்கமாக மூடியே வைத்திரு க்கும். நாம் சிறுநீர் போ கும்போது இந்த தசைகள் தளர்ந்து சிறுநீரை வெளியேற்றும். ஆனால் இந்த Spinchter தசைகள் சில பெண் மணிக்கு ஒழுங் காக, முறையாக செயல்படாமல் போகும். இதனால் கூட கட் டுப்படுத்த முடியாமல் சிறு நீர் கசியலாம்.

! என்னென்ன சோதனைகள் செய்து இந்த பாதிப்பின் தீவிர த்தை அறி வீர்கள்?

சிறுநீர் டெஸ்ட் செய்து கிருமி தொற்று இருக்கிறதா என்று பார்ப்போம்.

சிறுநீர் பை ஸ்கேன் செய்வோம்.

சிஸ்டஸ்கோபி (Cystoscopy) மூ லம் (Urine Culture test) சிறு நீர்ப் பையின் உட்புறத்தை டெலெஸ் கோப் மூலம் சிறுநீர் பையை ஆரா ய்ந்து கற்களோ அல்லது காச நோய் கேன்ஸர் இருக்கிறதா என்று பார்ப்போம். மேலும் யூரோ டைமன மிக்ஸ் (Uro Dynamics) என்னும் சோதனை முறையில் சிறுநீர் பையின் தன்மை, அதன் வடிவம், செயல் பாடு போன்ற வற்றையும் சோதனையிட வேண்டியிருக் கும்.

! சிரித்தால், இருமினால் வருகிற துன்பத்திற்கு என்ன நவீன சிகிச்சை?

பிரச்சினையின் தீவிரம் பொ ருத்து சிகிச்சை மாறுபடும். ஆரம்ப நிலை என்றால் Pelvic floor exercise (தசைப் பயிற்சி) கற்பிக்கப்படும். அடுத்து Bio Feed bact யோனிக் குழாயில் அல்லது மலக்குழாயில் F.E.S என்கிற Functional Electrical Stimulation எனும் முறையில் பாதிப்பை குணப்படுத்தலாம். எனினும்- இதனை வாழ்நாள் முழுதும் மேற்கொள்ள வேண் டியிருக்கும். இதை எல் லாம் தவிர்த்து நிரந்தர தீர்வு வேண்டும் என் றால் – Sling operation என்கிற அறுவை சிகிச் சை மூலம் குணம் பெற லாம்.

இந்த ஆபரேஷனை செய் துகொண்டு உடனே வீட் டுக்குச் சென்று விடலா ம். இந்த சிகிச்சைக்கு பதிலாக இன்னொரு முறையில் லேப் ராஸ்கோபிக் மூலம் Laproscope Burch ஆபரேஷனும் செய்து கொள்ளலாம். இச்சிகிச்சையும் நிரந்தர தீர்வாகும். இப்பிரச் சினையை வயதானால் வருகிற சாதாரண பிரச்சினை என்று நினைத்துக் கொண்டு மன உ ளைச்சல் அடையாமல் டாக்டரிடம் சென்று பார் ப்பது நல் லது.

! இந்த பெண்களுக்கான சிறுநீர் பிரச்சினை அந்த காலத்திலி ருந்தே இருந்து வந்ததுதானே? இப்போது புதிதாக வந்து ள்ளதா?

சிரித்தால், இருமினால், தும் மினால், அதிக எடை உள்ள பொருட்களை தூக்கினால் பெண்களுக்கு சிறுநீர் கசிவது அல்லது கட்டுபாடற்ற சிறுநீர் கசிவு என்பது பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக உள்ள பிரச்சினைதான். ஆனால் பெண்களின் வினோத -இந்த மாதிரியான நோய்க்கு எந்த வகையான சிகிச்சையும் மிக மிக அண்மைக் காலம் வரை இல் லாமலிருந்தது. இப்போது இந்த பெண் நோயை குணப் படுத்த தமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய மருத்துவ நிபுணர்களே உள்ளனர். மேலும் இந்த வினோத நோயினை பற்றி பெண்களுக்கு வரும் பல வகையான நோய்களை குணப்படுத்தும் பல மரு த்துவர்களுக்கே தெரிவ தில்லை என்பதுதான் உண்மை. எனவே அந்த மருத்துவர்கள் பெண்களி டம் இதுபோன்ற பிரச்சி னையைப் பற்றி எதுவுமே குறிப்பிடுவதில்லை. உலகம் முழுதும் உள்ள 40 சதவீதம் பெண்களுக்கு இந்த பிரச்சினை இன்றைய நாளில் உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா?

இந்த பிரச்சினை ஒன்றும் உயிர் போகிற உடல் நலக் குறை பாடு இல்லை தான். எனினும் வெளி உலகத்திற்கு சகஜமாக போக முடியாமல் சந்தோஷ மாக சிரி த்து மகிழ முடியாமல், மனசுக்குள் புழுங்க வைக்கும் இத்தகைய நோயுடன் வாழ் நாள் முழுதும் வாழத் தான் வேண்டுமா? பெண்கள் இன்றைய நாளில் குடு ம்பத்தை, குழந்தைகளை காப்பா ற்ற தினமும் வீட்டை விட்டு வெ ளியே வந்து அரக்க பரக்க உழை த்துமுன்னேற வேண்டிய நிலை மையில்தான் உள்ளார்கள். இவ் வாறு குடும்பத்திற் குள்ளும் வெ ளி உலகத்திலும் உழைக்க வேண் டிய கட்டாய த்திலிருக்கிற பெண் கள்… இது மாதிரியான சங்கடம் தருகிற நோய்களையும் சுமந்துகொண்டு திரியத் தான் வேண்டுமா? யோசியுங்கள்.

இந்த குறைபாட்டை மறு படியும் வரவிடாமல் செ ய்கிற அதிநவீன சிகிச் சைகள் வந்து விட்டன. இதுபோன்ற பெண்களின் சிறுநீரக மற்றும் சிறுநீர் பிரச்சினைகளை குண ப்படுத்து வதற்கென்றே யூரோ கேனாகாலஜி என்கிற நவீன மருத்து வதுறை வந் துள்ளது என்பது மக்கள் அறிய வேண்டிய ஒன்றாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: