Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பகைவனும் நண்பனாவான் நீ புன்னகைத்தால் . . . .

இந்த உலகில் நம்மை சட்டென்று கவர்பவர்கள் யார் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்? ஐஸ் வர்யா ராய், சினேகா போன்ற பிரப லங்களை சற்றே தள்ளி வைத்து விட்டு பார்த்தால், நம்மை சட்டெ ன்று கவர்ந்து இழுப்பவர்கள், நிச்ச யமாக, சிரித்த முகத்துடன் இருப்ப வர்கள் தான். புன்னகை அவ்வளவு சக்தி வாய்ந்தது. அதனால் தானோ என்னவோ, நம் முன்னோர் ‘புன் னகை இருக்க, பொன் நகை எதற்கு?’ என்று பழமொழியை கூ றி யுள்ளனர். புன்னகை மூலம், எதிரிகளைக் கூட நண்பராக்கிக் கொள்ளலாம். ஒருவரின் தோற்ற த்தை, செலவே இல்லாமல் வசீகர மாக மாற்றக் கூடியது அவரது புன்னகையே. நமக்குப் பிடித்த நபர்களைப் பார்த்தவுடன், நம்மையும் அறியாமல் நாம் புன் புறுவல் பூக்கிறோம் அல்லவா?

அந்த சிரிப்பு, வெறும் உதடுகளின் அசைவு மட்டும் இல்லை. அது உறவின் வெளிப் பாடு. சிரித்த முகத்தை பார்க்கும் போது, எத்த னையோ பிரச்சினைக ளை மீறி, ஒரு நம்பிக் கை விதை மனதில் விழுகிறது. உங்கள் சிரி ப்பு, ‘பெர்சனாலிட்டி’ யை உயர்த்துவதோடு, உங்களை வசீகரமா கவு ம் காட்டும். எனவே, சிரித்த முகத்துடன் இருக்க பழகுங் கள். அழும் குழந்தையை விட, சிரிக்கும் குழந்தையை தானே நாம் அனை வரும் விரும்புகிறோம். சிடுமூஞ்சி பெண்ணை விட, சிரித்த முகம் கொண்ட பெண் தானே விளம்பரங்களுக்கு ஏற் றவள். ஆக, சிரித்த முக மே கூடுதல் வசீகரம். பிறரை வசீகரப்படுத்த வும், எப்படிப்பட்ட நபரை யும் ‘ஹேண்டில்’ செய்வ தற்கும், அவசியமான ஒன்று உங்கள் புன்னகை என்பதை நினைவில் கொள் ளுங்கள். எனவே, வீடாக இருந்தாலும் சரி, பணியாற் றும் இடமாக இருந் தாலும் சரி, புன்னகை பூத்திடுங்கள். பணியிடத்தில் புன்னகையையும், ஆதரவான பார்வையை யும் தவழ விடுங்கள். இது செயற்கையான வி ஷயமாகத் தோன் றலாம். ஆனால், கடுமையான அலுவலகச் சூழலை சரி செய்யும் கருவியாக, உங்கள் புன்னகை செயல்படும். உங்கள் முசுடு உயரதிகாரியையோ அல் லது ‘மூடி’யான கணவனை யோ பார்த்து உங்களுக்கு புன்னகை வர வில்லை என்றாலும், செயற்கை யாக நீங்களாகவே புன்னகையை வர வழையுங் கள். உடனடியாக இல்லாவிட்டாலும், காலப்போக் கில் உங்கள் புன்னகை அவர்களி டம் மாற்றத்தை ஏற்படுத்தி, அவர்கள் உங்களை நடத்தும் விதம் மாறலாம்.

உங்களின் இந்த புன்னகை, நீங்கள் மற்றவருடன் கொள்ளும் உறவை, வலுப்படுத்துவதற்கான மிகச் சிற ந்த ஆயுதம் என்றாலும், உங்கள் புன்னகையை தேவையற்ற இடங் களிலோ அல்லது தேவையற்ற நபரிடமோ காட்டினால், நீங்கள் தே வையில்லாத பிரச்சினையை சந் திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, ஜொள்ள டிக்கும் சக ஊழியர்களிடமோ, பெ ண்களிடம் தவறாக நடக்கும் சீப் பான ஆசாமிகளிடமோ புன்னகை யை நீங்கள் தொடர்வீர்களானால், விளைவு வேறு மாதிரி யாக இருக்கும் என்பதை சற்றும் மறக்காதீர்கள். அப்படி மறந்தால், அனாவசிய வம்பில் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தேவையான இடங்க ளில், உங்கள் புன்னகையை தவழ விட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: