Saturday, July 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கால்சியம் கார்பைடு உபயோகித்து மாம்பழங்களை பழுக்கவைப்பதால் ஏற்படும் தீமைகள்

கால்சியம் கார்பைடு: இது ஒரு ரசாயனப் பொருள். சுத்த மான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலை யில் கருப்பு கலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். வெள்ளைப்பூண்டின் வாசனை சிறிதளவு இருக் கும். இதில் ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரை டு போன்ற நச்சுப் பொருட் கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளி யேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங் களை பழுக்க வைக்க முடி யும். தேவையான அளவு கார் பைடு உப்பை ஒரு பேப்பரில் கட்டி பழப்பெட்டிகளை லாரி யிலோ குடோனிலோ அடுக் கும் போது அதனுள் வைத்து விட்டால் 24-48 மணி நேரத்தி ற்குள் பழங்களின் மேற்தோல் முழுவதும் ரகத்திற்கு ஏற்ற வாறு கலர் மாறிவிடும். முற் றிய காய்களிலுள்ள ஈரம் மற் றும் காய்கள் சுவாசிக்கும் போது ஏற்படக்கூடிய வெப்பத்தா லும் காய்கள் எளிதில் கலர் மாற உதவுகின்றன.

பழுக்கும் முறை: முற்றாத காய்களை பழுக்கவைக்க சற்று அதிகமாக கற்கள் வை க்க வேண்டும். கற்கள் மூலம் பழுத்த பழங்க ளின் மேல்தோல் மட்டு மே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற் கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக கலர் மாறி இருக்காது. ஆனால் கார்பைடு உப யோகித்து பழுக்க வை த்த பழங்களின் மேற் தோல் ஒரே சீராக மஞ் சள் நிறமாகத் தோற்ற மளிக்கும். மணம் குன் றி இருக்கும். இதை வைத்தே கல் வைத்து பழுக்க வைத்த பழங்க ளைக் கண்டறியலாம். இந்த வேதிப்பொருள் மேலைநாடு களில் தடை செய்யப்பட்டுள்ளது.

Normal Mango

உடல்நலக்கேடு: கால்சியம் கார்பைடிலுள்ள ஆர்சனிக் மற் றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு உட லுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வை. இதன் அளவு அதிகமாகும் போது புற்று நோய் வர வாய்ப்பு ள்ளது. சுமார் 33-35 சதவீத அசி ட்டிலின் வாயுவை ஒருவர் சுவா சித்தால் 5-7 நிமிடங்களில் மய க்க மடையலாம். கார்பைடு உபயோ கித்து பழுக்க வைத்த பழங்களை உண் பதால் வாந்தி, பேதி, நெஞ் சில் எரிச்சல், குடற்புண், கண்க ளில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங் குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலை வலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகும். கர்ப்ப காலத்தில் பெண்கள் கண்டிப்பாக செயற் கையாக பழுக்க வைத்த பழ ங்களை உண்ணக்கூடாது. பழ ங்களின் மேற்தோல் ஒரே சீ ராக மாறி இருந்தால் அது கல் வைத்து பழுக்க வைத்தது என் பதை கண்டறியலாம். தெரிந் தோ தெரியாமலோ கல் வை த்து பழுத்த பழங்களை வாங் கினால் தண் ணீரில் 5 நிமிடம் நன்கு கழுவ வேண்டும். பழத் தை அப்படியே சாப்பிடாமல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உண்ண லாம். இப்பழங்களை அதிக நாட்களுக்கு சேமித்து வைக்க இயலாது. மாம்பழ சீசன் துவ ங்கிய உடனே சந்தைக்கு வரு ம் பழங்கள் பெரும்பாலும் கல்வைத்து பழுக்க வைத்ததாக இருக்கலாம். பொதுவாகவே ஜூன்- ஜூலை மாதங்களில் சந்தைக்கு வரும் பழங்கள் இயற்கை யாகவே பழுக்க வைத்த வையாக இருக்கும்.

கொ.பாலகிருஷ்ணன், பேராசிரியர் (பயிர் வினையியல்),
கு.சிவசுப்பிரமணியம், பேராசிரியர் மற்றும் தலைவர்,
விதை நுட்பவியல் துறை, வேளாண்மைக் கல்லூரி,
மதுரை-625 104.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: