Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கியாஸ்-டீசல் விலை உயரும்: மத்திய அரசு

டீசல், சமையல் கியாஸ், மண்எண்ணை ஆகியவற்றின் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி உயர்த் தப்பட்டது. கியாஸ் விலை சிலிண்டருக்கு ரூ.35, டீசல் விலை லிட்டருக்கு ரூ.2, மண் எண்ணை வி லை லிட்டருக்கு ரூ.3 என்ற வீதத்தில் அப்போ து விலை உயர்ந்தது.
மாநில சட்டசபை தேர்த ல்கள், விலைவாசி உள் பட பல்வேறு காரணங்க ளால் கடந்த ஓராண்டாக டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை விலை உயர்த்தப் படவில்லை. பெட்ரோல் விலை 10 தடவை உயர்த்தப்பட்டு விட்ட நிலையில், இவற்றின் விலை உயர்வை மட்டும் மத்திய அரசு தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது.
இதனால் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோ லியம், இந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகிய எண்ணை நிறு வனங்களுக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட் டது. தினமும் 450 கோடி ரூபாயை இந்த எண்ணை நிறுவனங்கள் இழந்து வரு கின்றன.
இந்த நிறுவனங்கள், பெட் ரோல் விலையை மட்டுமே தங்கள் இஷ்டத்துக்கு ஏற்ப நிர் ணயித்துக் கொள்ள உரிமை வழங் கப்பட்டுள்ளதால், டீசல், கியாஸ், மண்எண்ணை விலை விஷயத்தில் மத்திய அர சின் முடிவையே எதிர்பார்த்துள்ளன.
கடந்த ஓராண்டில் பல தடவை இந்த நிறுவனங்கள் கோரிக் கை விடுத்தும் மத்திய அரசு கண்டு கொள்ளவில் லை. தங்களுக்கு ஏற்பட் டுள்ள இழப்பை சரிகட்ட வேண்டு மானால் டீசல் விலையை லிட்டருக்கு ரூ.15.44-ம், மண் எண்ணை விலையை லிட்டருக்கு ரூ.27.47-ம், கியாஸ் வி லையை சிலிண்டருக்கு ரூ.381-ம் உயர்த்த வேண் டும் என்று இந்த நிறுவனங்கள் சமீபத்தில் வலியுறுத்தின.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை உயர்ந்து விட் டதால், இனியும் இழப்பை தாங்க முடியாது என்று இந்த நிறுவனங்கள் உறுதிபட கூறின. எனவே டீசல், சமையல் கியாஸ், மண் எண்ணை விலை கடந்த மாதமே உயர்ந்து வி டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டீசல், கியாஸ் விலையை உயர்த்தி னால், அத்தியாவசியப்பொருட்கள் விலை கட்டுப்படுத்த முடியாத படி உயர்ந்து விடும் என்ற பயத்தில், மத்திய அரசு அதை ஒத்திப் போட்டது.இந்த நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட் ரோலியம் ஆகிய 3 எண்ணை நிறுவனங்களும் தங்களது கடன் அளவு 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாயை கடந்து விட்டதால் நிர்வாகத்தை நடத்த இயலாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளன.
இதே நிலை நீடித்தால், கச்சா எண்ணை இறக்குமதியை இந்த எண்ணை நிறுவனங்கள் நிறுத்த வேண்டியதிருக் கும். கச்சா எண்ணை வர த்து தடைப்பட்டால், டீசல், சமையல் கியாஸ், மண் எண் ணைக்கு தட்டுப் பாடு உருவாகும். இதனால் இவ ற்றின் சப்ளையை 3 எண் ணை நிறுவனங்களும் நிறு த்தும் நிர்ப்பந்தம் ஏற்படும்.
இந்த இக்கட்டான சூழ்நிலையை மத்திய அரசிடம் கடந்த வாரம் எண்ணை நிறுவனங்கள் தெளிவு படுத்தி உள்ளன. முதல் கட்டமாக சமையல் கியாஸ் சப்ளையை நிறுத்தப் போவதாக எண்ணை நிறுவனங்கள் அச்சுறுத்தி உள்ள ன.  கடந்த ஓராண்டாக நிலமையை சமாளித்து விட்ட மத் திய அரசு இனி பெட்ரோலியப் பொருட்கள் விலையை உயர் த்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலைக்கு தள் ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், பெட்ரோ லியம் அமைச்சர் ஜெய்பால் ரெட்டியும், சமீபத்தில் ஆலோ சனை நடத்தினார்கள். அப்போது கியாஸ், டீசல் விலையை உயர்த்த வேண்டியது பற்றி ஜெய்பால் ரெட்டி விளக்கம் அளி த்தார். இதை பிரதமர் மன் மோகன் சிங் ஏற்றுக் கொண் டார்.
இதையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) முதல் மத்திய மந்திரி கள் குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் சமையல் கியாஸ், டீசல், மண்எண்ணை விலை உயர்வு பற்றி முடிவு செய்து அறிவிக்கப்படும். இந்த தடவை விலை உயர்வு சற்று அதிகமாக இருக்கும் என்று பெட் ரோலிய அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
கியாஸ் விலை ரூ.25 முதல் ரூ.50 வரையும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.6 வரையும் உயர வாய்ப்புள் ளதாக கூறப்படுகிறது. சமையல் கியாஸ், டீசல் விலை உயர் வை மத்திய அரசு வெளியிடும் அதே தினத்தன்று பெட் ரோல் விலையை உயர்த்த எண்ணை நிறுவனங்கள் திட்ட மிட்டுள்ளன.
இந்த தடவை பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரிக்க எண்ணை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25-ந் தேதி பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை பெற்ற எண்ணை நிறுவனங்கள் இது வரை 10 தடவை பெட்ரோல் விலையை உயர்த்தி உள் ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply