Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

குறைமாத குழந்தைகள் பிறப்பது ஏன்?

முழு கர்ப்ப காலம், அதாவது, 37 முதல் 41 வாரங்கள் முடிந்த பிறகு பிறக்கும் குழந்தை களே, நிறைமாத குழந்தை கள். 37 வாரங்களுக்கு (259 நாட்கள்) குறைவாக பிறக் கும் குழந்தைகள், குறை மாத குழந்தைகள் என, அழை க்கப்படுகின்றன.

பிறந்த குழந்தையின் எடை , 2.5 கிலோ கிராம் இருந் தால், எடை குறைவான குழந்தை. பெண்களுக்கு கு றைந்த வயதில் திருமணம் செய்தாலும், தாய்க்கு நீண்ட கால நோய்களான இதய பாதிப்பு, சிறுநீரக பாதிப்பு மற்றும் நீரிழிவு நோய் இருந்தாலும், பொருளாதார ரீதியாக பின் தங்கிய நிலையில் இருந்தாலும், உடலில் எடை மற்றும் உயரம் குறைவாக இருந்தாலும், கர்ப்ப காலங்களில் அதிக மான ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், அ திக வேலை மற்றும் மன உளை ச்சல் உள்ளிட்ட காரணங்களா லும், குறைமாத குழந்தைகள் பிறக்கின்றன. ஒரே பிரசவத்தி ல், ஒன்றுக்கும் மேற்பட்ட குழந் தைகள் பிறக்கும் போதும், இது போன்ற குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது.

ஆயிரம் கிராமிற்கு குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், 27 முதல் 28 வாரங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்க, இங்குபேட்டர், வென்டிலேட் டர் மற்றும் சர்பக்டென்ட் சிகிச் சைகளை பயன்படுத்தி உயிர் பிழைக்க வைக்க முடி யும்.

இந்தக் கருவிகள், வெளிநா ட்டில் இருந்து இறக்குமதி செ ய்யப்படுபவை.

தாய்ப்பால் கொடுப்பது எப் போது: பிறந்தவுடனேயே தாய்ப் பால் அருந்த, குழந்தை முழு தகுதி அடைகிறது. ஒருவேளை சிசேரியன் செய்த தாய் க்கு, தாய்ப்பால் உடனடியாக கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், எவ்வளவு சீக்கிரம் கொ டுக்க முடியுமோ, அவ் வளவு சீக்கி ரம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். தாய்ப் பாலில், குழந்தைக்கு தேவை யான புரதம், நீர்ச்சத்து, தாதுப் பொரு ட்கள், நோய் எதிர்ப்பு சக்தி உள்ளி ட்டவை இருக்கி ன்றன. நாள் ஒன்று க்கு, எட்டு முதல் 10 முறை கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்ப தால், மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறை வு என, ஆய்வுகள் பல தெரிவிக்கின்றன. பிறந்த குழந்தை கள், பாலை மட்டும் குடிக்காமல், காற்றையும் சேர்த்து குடிப் பதால், வாந்தி ஏற்படுகிறது. அதிக பாலை அருந்துவதா லும், அருந் திய பால், உணவு பாதையில் இருந்து, மீண்டும் வாய் வழியாக திரும்புவதா லும், வாந்தி ஏற்படுகிறது. இதனால், பயப்பட தேவையி ல்லை. குழந்தைகளின் எடை குறையாது. ஆனால், தொடர் ச்சியாக வாந்தி எடுத்தால், மருத்துவரை அணுகி, உணவு பாதை அடைப்பு மற்றும் மூளைக் காய்ச்சல் உள்ளதா என்பதை பரிசோதித்து, சிகி ச்சை மேற்கொள்ள வேண்டும். பிறந்த குழந்தைகள் தினமும் ஐந்து முறைக்கு மேல் மலம் கழிக்கும். சில குழந்தைகள், பால் குடித்தவுடன் மலம் கழிக்கும். ஒரு சில குழந்தைகள், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, மலம் கழிக்கும். இவை அனைத்தும், இயற்கையான செயலே. அதே நேரத்தில், தொடர்ச்சியாக 72 மணி நேரம் மலம் கழிக்கவில்லை எனி ல், மருத்துவரின் அறிவுரைப்படி, தைராய்டு பிரச்னை மற் றும் மலக்குடலில் சுருக்கம் போன்ற பிரச்னைகள் உள்ளதா என்பதை அறிந்து, சிகிச் சை தர வேண்டும்.

டாக்டர் அ.கண்ணன்
குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்
மதுரை

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: