Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதன் முறையாக தமிழ் மொழிபெயர்ப்பில் கூகுள் புரட்சி!

உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் பேசப்படுகிறது. இந்தி யாவில் மட்டும் சு மார் 32 மொழிகள் உள்ளது. கூகுள் இ ணை யமானது சில குறிப்பிட்ட உலக மொழிகளை மொழி பெயர் ப்புச் செய்யும் கருவியை உருவா க்கி இருந்தது. உதா ரணமாக ஆங்கிலத்தில் நாம் எழுதுவதுவதை கூகுள் கருவி உட னடியாக பிரெஞ்சு, டச், ஸ்பானிய என்று சுமார் 58 உலக மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யவல்லது. அதேபோல பிற மொழிகளையும் ஆங்கிலத்திற்கு மாற்றவல்லது. ஆனா ல் தற்போது நீங்கள் தமிழ் யூனிக்கோட்டில் அடிக்கும் சொல் லை அது ஆங்கிலத்துக்கு மொழிபெயர்ப்பது மட்டுமல்லாது, பந்தியாக இருக்கும் வசனங்களையும் அது மாற்றுகிறது.

அதாவது தமிழில் இரு ந்து ஆங்கிலத்திற்கோ இல்லை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கோ இ னி நாம் சுலபமாக மொ ழி பெயர்க்கலாம். ஆங் கில இணையம் ஒன்றி ல் நீங்கள் ஒரு செய்தி யை வாசிக்கிறீர்கள்,  விளங்கவில்லை என் றால் அச்செய்தியை அப்படியே காப்பி பண்ணி கூகுள் மொழி பெயர்ப்பில் இட்டால் உடனடியாக அது அதனை தமிழுக்கு மாற்றிக் காட்டுகிறது. இருப்பினும் தற்போது கூகுள் இத னை ஒரு பரீட்சாத்தமகவே விட்டுள்ளது. பல லட்சம் தமி ழர்கள் இதனைப் பாவிக்க ஆரம்பிக்கும்போது, சில ஆங் கிலச் சொற்களுக்கும், சில தமிழ் சொற்களுக்கு சரியான அர்த்தங்களை அவர்கள் எழுதுவார்கள். அதை திரு த்தும் வசதிகளும் இருக் கிறது. திருத்தப்படும் வச னங்களும் சொற்களும் நாளடைவில் பெருகி ஒரு நேர்த்தியை அல்லது முழு மையைப் பெறும்.

திருத்தும் வசனங்களும் சொற்களும் சேமிக்கப்படுவதால், இன்னும் சில காலத்தில் கூகுள் தமிழ் மொழிபெயர்ப்பு பூரண மன நிலைபெற்ற கருவியாக உருமாற உள்ளது. அதற்கு நீங் களும் உதவலாம். உதாரணமாக ஈழத் தமிழர்கள் பாவிக்கும் பல சொற்களுக்கு அங்கே அர்த்தம் கிடையாது. கூடுதலாக தமிழ் நாட்டில் இருப்பவர்கள் தாம் வழக்கமாகப் பாவிக்கும் சொற்களை இடுகைசெய்கின்றனர். எனவே பண்டைய தமிழ் மாறாது.. பிறமொழிக் கலப்புகள் இல்லாத ஈழத் தமிழர்கள் தமது சொற்களை இட்டு அதற்கான அர்த்தத்தை கூகுள் கரு வியில் சேமிக்கவேண்டும் என மனிதன் இணையம் வேண்டி நிற்கிறது. உலகில் நூற்றுக்கணக்கான மொழிகள் இருந்தா லும் கூகுளானது 63 மொழிகளையே பாவனையில் வைத்து ள்ளது.

அதில் தமிழும் அடங்கும் என்பது பெருமைக்குரிய விடைய மாகும். தமிழீழத்துக்காகப் போராடும் நாம்.. தமிழுக்காவும் போராடவேண்டும். எமது மொழிபோல உலகில் வேறு எந்த மொழியும் கிடையாது என்பதே உண்மையாகும் !

http://translate.google.com

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: