Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

“இளைய தளபதி” விஜய்-ஐ பற்றி சில சுவாரஸ்யத் தகவல்கள்

நாயகனாக அறிமுகமானது அப்பா இயக்கத்தில் “நாளைய தீர்ப்பு” படத்தில். நான்கைந்து படங்களுக்குப் பிறகு விஜய காந்த்தோடு நடித்த செந்தூரப் பாண்டி, விஜய்யைப் பட்டி தொட்டி எங்கும் கொண்டு போய்ச் சேர்த்தது. அதை இப் பவும் ஒப்புக்கொள்வார் விஜய்! காவலன் வரை 51 படங்கள் வெளியாகி உள்ளன. வேலா யுதம் ரிலீஸுக்கு வெயிட்டிங். நண்பன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. பின்னணிப் பாடகராக தேவா படத்தில் பாட ஆரம்பித்த விஜய், 2005-ல் சச்சின் படத்தில் உள்பட பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

ஏனோ இப்போது பாடுவதைத் தவிர்த்து, புதிய பாடகர்களை உற்சாகப்படுத்து கிறார்! விஜய்க்குத் திருமணம் ஆனவுட னேயே அவரது பெர் சனல் காஸ்ட்யூம் டிசைனராக மாறி விட்டார் மனைவி சங்கீதா. இன்றைக்கு வரைக்கும் அவர் தேர்ந்தெடுத்துத் தரு கிற டிரெஸ்களை மட்டுமே அணிகிறார் விஜய். இந்த காஸ்ட்யூம் டிசைன் சினிமா வரைக்கும் போகிற வாய்ப்பு இருக்கிறது!

திடீரென்று நினைவு வந்தால் நண்பர்களோடு காரில் வந்து ஆசையாக லயோலா கல்லூரி வகுப்பு பெஞ் சில் உட்கார்ந்துவிட் டுச் செல்வார் விஜய். அன்றைக்கு மாணவ ர்களோடு உட்கார்ந்து கலகலப்பாக உரை யாடும் விஜய்யை நீங்கள் இதற்கு முன் கண்டிருக்க மாட்டீ ர்கள்! ஜூன் 22 பிறந்த நாளன்று எங்கே இருந்தாலும் ஓடி வந்து தாயின் அருகில் இருக்கவே விரும்புவார்.

வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்து கிளம்பிவந்து அன் று முழுவதும் அம்மா பக் கமே இருக்கிற அம்மா பிள்ளை விஜய்! எவ்வளவு வேலை, ஷூட்டிங் முடிந் து வந்தாலும் ஹோம் தியேட்டரில் ஏதாவது ஒரு ஆங்கிலப் படம் பார்த்து விட்டுத்தான் தூங்குவார். அதிசயிக்கும்படியான பெருவாரியான சி.டி. கலெக்ஷன் உண்டு அவர் வீட்டில்.

நான்-வெஜ் உணவுகளின் மேல் விஜய்க்குப் பிரியம் உண்டு. அதுவும் அம்மா சமைத்த அசைவ உணவுகளுக்கு விஜய் அடிமை! விஜய்க்கு நகைகளின் மீது அவ்வளவாக ஆசை கிடை யாது. ஆனால், இப்போது இரண்டு சிறு நெளி மோதிர ங்களை அணி யத் தொடங்கியிருக்கிறார்! ஹிந்தி யில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் அமிதாப்தான். இன்றைக்கும் அவர் நடித்து வெளியாகிற ஹிந் திப் படங்களுக்கு முதல் நாள்… முதல் ஷோ பார்க்க ஆசைப்பட்டுப் போவார்! ஜாலி மூடில் இருந்தால் மனைவி சங்கீதாவை ஹாய் கீஸ் எனக் கூப்பிடுவார்.

எப்பவாவது கொஞ்சம் கோபமாக இருந்தால் வாங்க போங்கதான்! வருஷத்துக்கு ஒரு தடவை யாவது மனைவி, குழ ந்தைகளுடன் நிச்சயம் லண்டன் டிரிப் உண்டு. சங்கீதாவின் அப்பா வீட்டில் கொஞ்ச நாள் இருந்த பிறகு, பய ணம் அதற்கடுத்த ஐரோ ப்பிய நாடுகளுக்கும் விரி வடையும். எந்த நாட்டு க்கு, எந்த இடம் என்று டிசைட் பண்ணுவது பை யன் சஞ்சய்தான்! விளை யாடுவதற்கு மிகவும் பிரியப்படுவார்.

கொட்டிவாக்கம் வீட்டில் டென்னிஸ். இப்ப இவருக்கு விடாப் பிடியாக ஜோடி கட்டுவது அவரது மகன் சஞ்சய்தான்! சஞ்ச ய்யின் ஒவ்வொரு வயது கூடும் போதும் அவனது நடவடிக்கை களை வீடியோவில் பதிவு செய்து வைத்திருக்கிறார். 20 வயது ஆனதும் அவனது பிறந்த நாளுக்கு விஜய் அளிக்கப்போ கிற பெரிய பரிசாம் அது! அப் பாவிடம் முதலில் சினிமாவில் நடிக்கிற ஆசையைச் சொல்ல, பேசிக் காட்டியது அண்ணா மலை பட வசனம்தான்.

அதனால் இன்றைக்கும் அந்த வசனத்தை மனப்பாடமாகப் பேசிக் காட்டுவார்! நடனத்தில் மிகவும் பெயர் பெற்ற விஜ ய்க்கு பிடித்த நடனக்காரர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், மாதுரி தீட்சித்தானாம்! நெருக்கமான கல்லூரி நண்பர்களை அழை ப்பது மச்சி . மற்றவர்களை விஜய் அழைப்பது என்னங்கண் ணா! கிச்சன் பக்கமும் எட்டிப் பார்ப்பார் விஜய்.

நெருங்கிய நண்பர்கள் குடும்ப த்தோடு வந்தால், அழகிய தோ சை வார்த்துக் கொடுப்பது இந்த அழகிய தமிழ் மகன் தான். அவர் தயாரித்துத் தருகிற காபி விசேஷ சுவையாக இருக்குமாம்! எப் போதும் விரும்பிச் சாப்பிடுவது மட்டன் குருமா, தோசை. இளம் தோசையாக இருந்தால் இன்னும் பிடித்தமாகச் சாப்பிடுவார்! வீட்டின் வராந்தாவில் காத்தி ருக்கும் எல்லா கார்களின் நிறமும் கறுப்பு.

அம்மா ஷோபா சந்திரசேகரை இசை கச்சேரிகளில் பாட ஊக்கம் கொடுத்து உற் சாகப்படுத்துவார். அம் மாவின் கச்சேரிகளு க்கு முதல் ஆளாக ஆஜர் ஆவார் எப்போ தும்! மகன் சஞ்சய்யும், மகள் திவ்யா சாஷா வும் அப்பாவின் நடி ப்பில் ஆர்வமாக இருந் தாலும் படிப்பிலும் அவ ர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருகிறார் விஜய். எவ்வளவோ அழைப்புகள் வந்தும் பிற மொழிப் படங்களில் நடிக்கச் சம்மதிப்பது இல்லை விஜய்.

தமிழில் மட்டுமே நடி ப்பேன் என்பதில் உறு தியாக நிற்கிறார்! விஜய்யோடு அதிக படங்களில் ஜோடியா க நடித்தவர்கள் சிம்ரன், ஜோதிகா, த்ரிஷா. நிறைய புதுமுகங்களோடு ஜோடி சேர்ந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு! ஜாலியாக ரிக்கார் டிங்கில் உட்கார ஆசை ப்படுவார் விஜய்.

எப்பவும் அவரது சமீப த்திய பாடல்களில் முணுமுணுப் போடு தான் காணப்படுவார் விஜய்! சில வருடங்க ளாக அரசியலில் பெரி தும் ஆர்வம் காட்டுகி றார். கடந்த தேர்தலில் இவர் ஆதரித்த அதிமுக வெற்றி யடைந்ததில் விஜய்க்கு ரொம்ப சந்தோஷம். நேரடி அரசிய லில் இறங்குவதில் விஜய்யை விட விஜய்யின் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வரு கிறார்கள்.!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

One Comment

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: