2ஜி வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போ து இந்தியா சிமெண்ட்ஸ், யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி. க்கு பணம் கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே இது தொடர் பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
÷இந்த நிறுவனங்களிடம் இவ்வாறு விளக்கம் கேட்பதால் குற்றம் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அர்த்த மில்லை என்றும் சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.
÷இந்தியா சிமெண்ட்ஸ் நிறு வனத்தின் என். சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பா ட்டு வாரியம் (பிசிசிஐ) செய லராகவும் உள்ளார். அவரி டம் இந்த விவகாரம் குறி த்து தொடர்பு கொண்ட போது, “சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதா என்பது குறி த்து இது வரை தனக்கு எதுவும் தெரியாது’ என்று தெரிவித்து ள்ளார்.
யுபி குரூப் நிறுவனத்தின் து ணைத் தலைவர் பிரகாஷ் மிர் பூரி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், விளம்பரம் கொடுத்த வகை யில் தான் யுபி குரூப் நிறுவனம் கலைஞர் டி.வி.க்கும் பணம் கொடுத்துள்ளது. இதுதவிர வேறு எந்த வகையிலும் அவர்க ளுக்கும் எங்களுக்கும் கொடு க்கல் வாங்கல் இல்லை. இது தொடர்பாக சிபிஐ எங்களிடம் தொடர்பு கொண்டால், விள க்கம் தருவோம் என்று அவர் கூறியுள்ளார்.