Wednesday, August 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

மத்திய அரசின் லோக்பால் – அன்னா ஹசாரேவின் ஜன லோக் பால் முக்கிய வித்தியாசங்கள்

மத்திய அரசின் லோக்பாலுக்கும் அன்னா கேக்குற ஜன லோக் பாலுக்கும் உள்ள முக்கிய வித்தியாசங்கள்

Vs.

1) மத்திய அரசின் லோக்பால் – மக்கள் ஊழல் புகாரை லோக்சபா அல்லது ராஜ்ய சபாவின் சபாநாயகரிடம் மட்டுமே அளிக்கனுமாம். அவராப்பாத்து முடிவு பண்ணி விசாரிக் கலாம்னு நெனக்கிற கேசை மட்டும் லோக்பால் அமைப்புக்கு அனுப்புவாராம். (நடக்கிற காரியமா இது!)

ஜன லோக்பால் – இதுல ஊழல் பத்தி தானாவே புகார் பதிவு பண்ணவும், மக்கள் நேரடியா அளிக்கிற புகார்களைப் பதிவு பண்ணவும் அதிகாரமுண்டாம்.

2) மத்திய அரசின் லோக்பால் – இது வெறும் ஆலோசனை மட்டுமே சொல்ல வேண்டிய அமைப்பாம். சபாநாயகர் அனுப்புற புகார் சம் பந்தமா விசாரணை நடத்தி அந்த அறிக்கையை உரிய அரசு அதிகாரிகளுக்கு அனுப்பனுமாம். (எப்படியிருக்கு? இதையும் ஆன்னா ஊன்னா நீங்க அமைக்கிற கமிட்டி மாதிரியே ஆக்கிரலாம்னு திட்டமா?)

ஜன லோக்பால் – இதுக்கு விசாரிக்கிறதோட மட்டுமல்லாம ஊழல் பண்ணவங்களுக்கு தண்டனை வழங்குற அதிகாரமும் உண்டு.

3) மத்திய அரசின் லோக்பால் – இதுக்கு போலீஸ் பவர் ஒன்னுமே கெடயா தாம். சும்மா டம்மியாம். (அப்போ… இது என்ன நாக்கு வழி க்கவா?)

ஜன லோக்பால் – இதுக்கு போலீசுக்கு இருக்கிற அத்தனை பவரும் உண்டாம். எஃப்.ஐ.ஆர் போடறதிலயிருந்து விசா ரணை பன்றது வரைக்கும் போலீஸ் மாதிரியே எல்லாப் பவ ரும் இதுக்கும் உண்டாம்.

4) மத்திய அரசின் லோக்பால் – சி.பி.ஐ க்கும் இதுக்கும் சம்மந்தமே கெடயா தாம்.

ஜன லோக்பால் – சி.பி.ஐ யின் ஊழல் தடுப்பு பிரிவும் இதுக்கு கீழேதான் இயங்குமாம். (அப்படிப்போடு அருவாள!)

5) மத்திய அரசின் லோக்பால் – இதுல யாராவது தவறான புகார் அளிச்சா கடுமையான ஜெயில் தண்டனை உண்டாம். ஆனா புகாருக்கு உள்ளாகும் அதிகாரப் பதவியிலிருப்ப வருக்கு ஜெயில் தண்டனை எதுவும் கெடயாதாம். அதே மா திரி இதுல பதிவு பன்ற புகாரை லோக்பாலும், ஏற்கனவே இயங்கிட்டிருக்கிற அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளும் தனித்த னியா விசாரிக்குமாம். (அப்போதானே முதல்லயே எல்லா ஆவனங்க ளையும் அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளை வச்சு அழிச்சிரலாம். லோக்பால் அமைப்பு விசாரணைக்கு எந்த ஒத்துழைப்பும் கெடைக்காம வெறுங்கைய நக்கிட்டு நிக்க வேண்டிய துதான்!)

ஜன லோக்பால் – இது புகார் குடுக்குற சாதாரண மக்களுக் கான பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அம்சங்களையும் உள்ளடக் கியதாம். இதுல நாட்டுல இருக்கிற எல்லா அரசு ஊழல் தடுப்பு பிரிவுகளும் இதோட நேரடிக்கட்டுப்பாட்டுல வந்துரு மாம். இதுக்கு அனைத்து மந்திரிகள் முதல் பிரதம மந்திரி வரைக்கும், எல்லா அரசு அதிகாரிகளையும், நீதிபதி களையும் கூட புகார்ல விசாரிச்சு தண்டனை வழங்குற அதிகாரம் உண்டாம். (அதான் ஒத்துக்கமாட்டேன்றானுக!)

6) மத்திய அரசின் லோக்பால் – இதுல விசாரணைக்கும் தீர்ப்புக்கும் எந்தக் கால வரையறையும் கெடயாதாம்.(வழ க்கம் போல கேச ஜவ்வா இழுக்கலாம்ல?!) லஞ்சம் வாங்குற அதிகாரிகளுக்கு எதிராவும் எந்த சரத்தும் இல்லையாம். அதுவுமில்லாம இது எல்லாத்தையும் தாண்டி ஏதோவொரு அதிசயமா ஊழல் நிரூபிக்கப்பட்டாக்கூட அதுக்கான தண்ட னை வெறும் ஆறு மாசத்திலயிருந்து ஏழு வருஷம் வரைக்கு ம்தானாம். அது மட்டுமில்லாம ஊழல்ல தண்டனை பெற்ற வன் கிட்டயிருந்து எந்தப்பணத்தையும், சொத்தையும் ரெக வரி பண்ண மாட்டாங்களாம். அவன் ஜெயில் தண் டனை முடிஞ்சி வந் ததும் ஊழல்ல சம்பாதிச்சதெல்லாம் ஹாயா அனுபவிக்க லாமாம். (த்த்தூ… சொரணை கெட்ட ஜென்மங் களா… உங்களு க்கெல்லாம் கொஞ்சம் கூட வெக்கம் மானம் கெடயாதா?!)

ஜன லோக்பால் – இதுல பதிவு பன்ற புகாருக்கு ரெண்டு வருஷத்துக்குள்ள கேஸ் முடிஞ்சி தண்டனையும் வழங் கப்படுமாம். லஞ்சத்தால பாதிக்கப்படுற பொது மக்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்தே ஃபைன் வசூலிச்சி இழ ப்பீடு வழங்குவதோடு லஞ்சம் வாங்குற அரசு அதிகாரி களை டிஸ்மிஸ் செய்யவும் இதுக்கு அதிகாரம் உண்டாம். ஊழல் நிரூபிக்கப்பட்டால் குறைந்தபட்சமாக ஐந்து வருடம் முதல் ஆயுள் தண்டனை வரைக்கும் வழங்க வழிவகைகள் உண் டாம். அதுமட்டு மில்லாம ஊழல் நிரூபிக்கப்பட்டவரிட மிரு ந்து அவர் ஊழலில் சம்பாதித்தவை மொத்தமும் ரெக்க வரி செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப் படுமாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: