Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

திரை விமர்சனம்: “பாலா”வின் அவன் இவன்

இயக்குநர் பாலா தான் இயக்கும் ஒவ்வொரு படத்தையும் முடிக்க கிட்டதட்ட மூன் று ஆண்டுகள் எடுத்துக் கொள்வார். அப்படி ஆண் டு கணக்கில் பாலா எடு த்த படம் அவரையும், அந்த படத்தையும் பற்றி பல ஆண்டுகள் புகழ்ந்து பேசும் அளவுக்கு இருக் கும். அப்படி பட்ட பாலா ஒரே வருடத்திற்குள் எடு த்து முடித்து வெளியான படம்தான் ‘அவன் இவன்’. பாலா இவ்வளவு சீக்கிரமா பட த்தை முடித்துவிட்டாரே! ஆச்சரியப்படும் அத்தனை ரசிகர் களும் இந்த படமும், இது பாலா படமா! என்ற ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது.

என்ன சொல்ல வருகிறார் எதை சொல்ல வருகிறார் என்று எதுவும் புரியாமல் போகிறது படம். படத்தில் இடம்பெறும் எந்த எபி சோடும் அழுத்தம் இல்லாமல் போ வதுதான் படத்தின் பெரும் பலவீ னம்.

திருடுவதை நிறுத்தினா சாமி குத்த மாயிடும்! என்று சொல்லும் அளவு க்கு திருடுவதை குலத்தொழிலாக செய்து வருபவர்கள் அண்ணன் தம்பிகளான விஷாலும், ஆர்யா வும். இவர்களை சொந்த பிள்ளைக ளைப்போல வளர்த்து வரும் ஊர் ஜமீன்தார் ஜி.எம்.குமார், இவர்க ளுடன் சேர்ந்து குடியும், கும்மாளு மாக ஜாலியாக சுற்றி வருவதுதான் படம். இப்படி சுற்றி வரும் இந்த மூவர் கூட்டணியில் ஒருவர் இறக்க, மீதமுள்ள வர்கள் இறப்புக்கு காரணமானவனை கொலை செய்து பழி தீர்த்துகொள்வதுதான் க்ளைமாக்ஸ்.

படத்தில் சரக்கு இல்லையென்றா லும், நடிகர்களிடமும் அவர்களின் கெட்டப்புகளிலும் அதிகமாக்வே சர க்கு இருக்கிறது. அதிலும் விஷா லின் கதாபாத்திரமும் அதற்காக அவர் கஷ்ட்டப்பட்ட விதமும் ஒவ்வொரு காட்சியிலும் நம க்கு நன்றாகவே தெரிகிறது. அதிலும் விஷாலின் அறி முக காட்சி நடனமும், நவரசத்தை காட்டும் காட்சியிம் விஷாலுக்கு பல பெருமைகளைத் தேடி தரும்.

ஆர்யா இதில் காமெடி பீஸாக வருகி றார். ஆனால், அவர் செய்யும் காமெ டியை பார்த்து ரசிகர்களுக்கு சிரிப்பு தான் வரல. (பிதாமகன் படத்தில் இருந்த அளவுக்கு கூட இதில் காமெடி எடுபடல) நீதிபதியின் வீட்டில் பூட்டை திறப்ப தோடு ஆர்யாவின் அமர்க்கள காட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப் படுகிறது.

எப்போதும் போல இந்த படத்திலும் ஹீரோயின்க ளை ஒரு ஷோ கேஸ் பொம்மைகளைப் போல வேதான் பாலா இந்த படத்திலும் பயன்படுத்தி யிருக்கிறார். பாலாவின் மற்ற படங்களை காட் டிலும் இதில் அநியாயத் துக்கு நாயகிகளை ஓர மாக நிற்கவைத்து வேடிக்கை பார்க்க வைத்திருக்கிறார்.

ம்பிகா, பிரபா என அத் தனை நடிகர்களும் ஆரம்ப த்தில் ஆரவரமாக அறிமுக மாக, போக போக எங்கே அவ ர்கள் என்று தேடும் நிலை தான் ஏற்படுகிறது. ஜி.எம். குமாரின் அந்த தைரியமான நடிப்புக்கு மட்டும் சபாஷ் சொ ல்லலாம். என்ன இந்த படத் ற்காக இப்படி நடிச்சிட்டாரே! என்று புலம் பவும் செய்கிறது மனம்.

ஏதோ ஒரு கருவை எடுத்துகொண்டு கதை எழுதிய பாலா, அதை திரைக்கதையாக்கிய வித த்தில் கோட்டை விட்டிருக்கிறா ர். காட்சிகளை கண்மூடித்தன மாக நகர்த்தி எங்கெயோ சுற்றி வந்து பிறகு க்ளைமாக் ஸில் இதுதான் படம் என்று சொல்லும் போது, அட இவ் வளவுதானா. என்று சலுப்பு ஏற் பட வைக்கிறது படம்.

ஆர்தர் ஏ.வில்சனின் ஒளிப்பதி வும், யுவன்சங்கர் ராஜாவின் இசையும் திருப்தி அளிக்கிறது.

பிதாமகன் படத்தின் இரண்டாம் பாகம் என்று சொல்லாமல் எடுத்திருக்கிறார் பாலா. என்ன! அதில் இருந்த அழுத்தமும், ஆக்ரோஷமும் இதில் இல்லை.

மொத்தத்தில் யானைக்கும் அடிசறுக்கும் என்றுதான் சொல் ல வேண்டும். ஆனால் அதுவே நிரந்தரமாக இருக்காது. அடு த்த படத்தில் யானை தனது முழுபலத்தை காட்டும் என்று நம்பலாம். – Mr. J. Sukumar

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply