Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தேசிய அரசியலில் முதல்வர் ஜெயலலிதா

தேசிய அரசியலில் நுழையும் எண்ணமில்லை எனவும், தே சிய அளவில் 3வது அணி அமையுமா என்பதை எதிர் காலம் என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண் டும் என முதல்வர் ஜெயலலிதா கூறி யுள்ளார்.இது தொடர் பாக பேட்டியளித்த முதல்வர் ஜெயலலிதா, காங்கிரசுக்கு ஆதரவளிப்பேன் என கடந்த 2010ம் ஆண்டு கூறினேன். 2010க்கு பிறகு சூழ்நிலைகள் மாறிவிட்டன. தி.மு.க.,வுடன் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டி யில் உள்ளது.என்னுடைய ஆதரவை ஏன் ஏற்கவில்லை என காங்கிரஸ் கட்சியிட ம் தான் கேட்க வே ண்டும். ஆதரவளிப்ப து என்பது அப்போது எடுக்கப் பட்ட முடிவு. தற்போது அது போன் ற சூழல் நிலவவில் லை. ஊழல் வாதிகளு க்கு எதிராக பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழல் அமைச்சர்களுக்கு எதிராக பிரதமரின் நடவடிக்கை தேவை. தயாநிதி பதவி விலக வேண் டும் என நான் கூறியு ள்ளேன். தயாநிதி பதவி நீக்கப்படு வாரா என பிரதமர் தான் விளக்கம ளிக்க வேண்டும். தேர்த லில் மோசடி செய்து சிதம்பரம் வெற்றி பெற் றுள்ளார். சிதம்பரம் தேர் தலில் தோல்விய டைந் தது தான் உண்மை. அடு த்த தேர்தலுக்குள் கூட்ட ணியில் மாற்றங்கள் ஏற்படலாம். இது குறித்து தற் போது எதுவும் கூற முடியாது. அரசியலில் எதுவும் நிகழலா ம். மாற்றம் என்பதே அரசி யலில் சூத்திரமாக உள்ள து. அர சியலில் ஒருவர் நெகிழ்ந்து கொடுக்க வேண்டும். அரசி யலில் இது போன்ற சூழ்நிலை கள் ஏற்படும் போது அதனை சமாளிக்கும் திறன் எங்களுக்கு உள் ளது. அனைத்து அரசி யல் கட்சிகளிலும் என க்கு நண்பர்கள் உள்ளனர். 3வது அணி அமையும் என்பதை எதிர்காலம் என்ன சொல்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். லோக்பால் மசோதாவில் பிரதமரை சேர் க்க தேவையில்லை. ஒரு கட்சி ஆட் சி என்பது முடிந்து விட்டது. கூ ட்டணி கட்சிகள் இல்லாமல் எந்த கட்சி யும் நீண்ட நாட்கள் ஆட்சி நடத்த முடியாது. தேசிய அரசி யலில் நுழையும் எண்ணமில் லை தேசிய அரசியல் குறித்த குறிக்கோள் எதுவும் இல்லை. எதிர்கால இந்தியா குறித்த எண்ணம் எனக்கு உண்டு. என் னை பற்றி இல்லை என கூறினார்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply