Saturday, June 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

புதிய தலைமை செயலகத்தில் குழந்தைகள் மருத்துவமனை அமைக்கலாம்; அன்புமணி ராமதாஸ்

பா.ம.க. இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:-  
தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் பா.ம.க. உறவு சுமூகமாக உள்ளது. நாங்களும் விடு தலை சிறுத்தைகளும் முதன் முறையாக இணைந்த தேர்தல், விடு தலை சிறுத்தைகள் இணைந்த சமூக மக்கள் விரும்பவில்லை என்று கூறுவது தவறு. வருங்காலங்களிலும் இந்த கூட்டணி தொ டரும்.
பா.ம.க.வை பொறுத்தவரை நல்ல எதிர்க்கட்சியாக செயல் படும். எதிரிகட்சியாக இருக்க மாட்டோம். அரசாங்கம் நல் ல திட்டங்கள் கொண்டு வந் தால் வரவேற்போம். மக்களு க்கு எதிரான திட்டங்கள் கொ ண்டு வந்தால் எதிர்த்து போரா டுவோம்.  
கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கலைஞர் காப்பீடு திட் டம் முழுமையும் காப்பீடு செய்யப்பட்டது. அதில் தனியார் களும், தனியார் மருத்துவம னைகளும் தான் லாபம் அடை ந்தன. எங்களுடைய கருத்து அரசு மருத்துவ மனைகளில் அதிகம் முதலீடு செய்ய வே ண்டும். அதன்மூலம் மருத் துவ மனைகள் தரத்தை உய ர்ந்து நவீனபடுத்த வேண்டும். காப்பீடும் இருக்க வேண்டும்.
மக்களை சோம்பேறிகளாக்கும் இலவச திட்டங்கள் வேண் டாம். இலவசங்களை நிறுத்தி விடுங்கள் என்று தொடர்ச் சியாக நாங்கள் சொல்லி வருகிறோம். தி.மு.க. அரசு புதிய சட்டமன்ற வளாகத் தை கட்டியது. கட்டியது சரி, ஆனால் கட்டிய இடம் சரியி ல்லை என்பது என் தனிப்ப ட்ட கருத்து.
சென்னைக்கு வெளியே 1000 ஏக்கர் பரப்பளவில் ஒரு மினி டவுன்ஷிப் போல் கட்டியிருக்க வேண்டும். மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு நகரத் தை உருவாக்கியிருக்க வேண்டும். அடுத்த 100 ஆண்டுகளு க்கு பயன் உள்ளதாக இருக்கும்.
புதிய தலைமை செயலகத்தை வீணடித்து விடக்கூடாது. அதில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை, மகப்பேறு மருத் துவமனையை கொண்டு வரலாம். இதனால் லட்சக்கணக் கான குழந்தைகளும், பெண்களும் பயன் அடைவார்கள். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். இவ்வாறு அவர் கூறி னார்.
NEWS MALAIMALAR

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: