Saturday, August 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

லேப் டாப் வாங்குகையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தேவையானவை:
1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூ ரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலி ருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப் டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்த வும், தகவல்களைத் தே டவும் இதனைப் பயன்படுத் தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே மின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட லேப் டாப் கம்ப்யூ ட்டரைத் தேடிப் பெறவும்.

2. குறைந்த எடை: ஏற்கன வே பள்ளி மற்றும் கல் லூரிகளுக்கு நூல்களும் மற்ற தேவைகளும் கொ ண்டு செல்கையில், ஒவ் வொரு மாணவரும் கணி சமான எடையைத் தூக்கி ச் செல்ல வேண்டும். என வே மிகக் குறைந்த எடை யுள்ள லேப் டாப் கம்ப்யூட் டரையே நாம் தேர்ந்தெ டுப்பது, அதனை எப்போதும் எடுத்துச் சென்று பயன்படுத்த வழி வகுக்கும்.

3. கீ போர்டு வசதி: கற்பதற்கு ஒரு கருவியாய் லேப் டாப் மாணவர்களுக்குப் பயன்பட இருப்பதால், அதிகமாக இதில் டைப் செய்திடும் வேலை இருக்கும். மேலும் ஆன் லைன் சேட்டிங், பேஸ்புக், ட்விட்டர் என மாணவர்கள் எந் நேரமும் செல்லும் தள ங்கள் இருக்கும். என வே டைப் செய்திடும் வேலையை எளிதாக்கும் கீ போர்டு இருப்பது நல்லது.

4. அதிக திறன் கொண்ட வெப்கேமரா: இப்போது வரும் அனைத்து லேப்டாப் கம்ப்யூட்டர் களும் வெப் கேமரா இணை க்கப்பட்டே கிடைக்கின்றன. ஆ னால் அனைத்தும் ஒரே வகை யான திறனுடன் இருப்பதில்லை. ஆன்லைன் சேட்டிங் அல்லது குடும்பத்தினருடன் கலந்துரை யாடல் என எதில் ஈடுபட்டாலும், குறைந்த ஒளியிலும் சிறப்பாக உங்களைக் காட்டும் திறனுடன் கூடிய வெப் கேமரா உள்ள லேப் டாப் கம்ப்யூட்டரைத் தேடிப் பெற வும்.

5. வாரண்டி: லேப்டாப் பார்ப்பதற்கு மென்மையானதாக இரு ந்தாலும், மாணவர்கள் அத னைச் சற்றுக் கடுமையாகவே கையாள் வார்கள். பைகளில் வைத்து எடு த்துச் செல்வதும், பைகளில் லேப் டாப் உள்ளது என்று அறியாமல், பைகளைக் கையாள்வதும் மாண வர்களுக்கே உரித்தான செயல் பாடு. எனவே சற்று கடினமான பாதுகாப்பு சுற்றுப் புறங்களைக் கொண்ட லேப் டாப்களை வா ங்குவது நல்லது. எதனையும் சோ தனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ண மும் இவர்களிடம் இருக்கும். என வே அதிக காலம் வாரண்டி தரும் திட்டத்துடன் வரும் லேப் டாப் கம்ப்யூட்டர்கள் நமக்கு லாபமே.

6. இயக்கப் பாதுகாப்பு: கம்ப்யூட்டர்களைப் பொறுத்தவரை அதி கம் திருடப் படுவது லேப் டாப் கம்ப்யூ ட்டர் களே. கவ னக் குறைவால் தொலைக்கப்ப டுவதும் அவை யே. எனவே தொலைந்து போனாலும், திருடப்பட்டாலும் அவற்றைத் திரும் பப் பெற வழி கொண்ட சாப்ட்வேர் தொகுப்பு பதியப்பட்ட லேப்டாப்கள் இந்த வகையில் நமக்கு கை கொடுக்கும். அதே போல நல்ல தொரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இதில் பதியப்பட்டு அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டும்.

தேவையற்றவை:
1. குவாட் கோர் ப்ராசசர்: குவாட் கோர் ப்ராசசர் இயக்கம் கொண்ட லேப்டாப் நமக்கு நல் லதுதான். ஆனால் மாணவர் நிலை யில் கம்ப்யூட்டர் இயக்குபவர்களு க்கு டூயல் கோர் சி.பி.யு. கொண்ட கம்ப்யூட்டரே போதும். இவை பய ன்படுத்தும் மின்சக்தி குறைவு; விலையும் குறைவு. அதே நேரத்தில் மாணவர்கள் மேற்கொள்ளும் அ னைத்து பணிகளுக்கும் கை கொ டுக்கும்.

2. அதிக திறன் கொண்ட கிராபிக்ஸ்: நல்லதொரு கிராபிக்ஸ் சிப் எந்த கம்ப்யூட்டரி லும் ஒரு நல்ல நண்பன் தான். வீடியோ காட் சிகள் தெளிவாகக் கிடை த்திட, வேகமாக இணை ய உலா செல்ல, முப்ப ரிமாண விளையாட்டுக் களை இயக்கி விளையா ட, என இதன் பயன்க ளைப் பட்டியலிடலாம். ஆனால் அதே நேரத்தில் சில பாதகமான அம்சங்களும் இதில் உள்ளன. இவை இய ங்கும் போது அதிக வெப்பம் உருவாகும்; பேட்டரி சக்தி விரைவில் குறையும்; சிஸ்டத்தின் எடையை அதிகரிக்கும்; பெரிதா க்கும். நிச்சயம் விலை யும் அதிகரிக்கும். இவ ற்றைக் கருத்தில் கொ ண்டு கிராபிக்ஸ் கார் டைப் பெறுவது நல்ல து.

3. சாலிட் ஸ்டேட் ட்ரை வ்: வழக்கமான ஹார்ட் ட்ரைவ் களைக் காட்டிலும் சாலிட் ஸ்டேட் ட்ரைவ், சற்று அதிக வேகத்தில் இயங்கக் கூடியவை யே. நீண்ட நாட்கள் உ ழைக்கக் கூடியவை. ஆ னால் இதனால் இன் றையச் சூழலில் விலை அதிகமாவத ற்கு வாய்ப்புகள் அதி கம். சாலிட் ஸ்டேட் ட்ரைவ் பல வகைக ளில் சிறந்தது என்றா லும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இது சற்று அதிகம் தான்.

4. டச் ஸ்கிரீன்: இன்றைக்கு கம்ப்யூட்டரை எடுத்துக் கொண் டாலும், மொபைல் போனை எடு த்துக் கொண்டா லும், தொடு திரை இயக்கத்தினயே அனைவ ரும் நாடுகின்றனர். ஆனால் லேப்டாப்களில் இயங்கும் சாப் ட்வேர் தொகுப்புகள், இன்னும் டச் ஸ்கீரின் இயக்கத்திற்குத் தயாராகவில்லை. எனவே இத னை இன்னும் சில காலத்திற்குத் தள்ளிப் போடலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: