Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வரும் 29-ந் தேதி முதல் 25,50 பைசா நாணயங்கள் செல்லாது

25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல் லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித் துள்ளது. வரும் 29-ந் தேதி புதன்கிழமை முதல் இது அமல்படுத் தப்பட உள்ளது.

அத்தியாவசியப் பொரு ட்களின் விலை உயர்வு காரணமாக சில்லரை நாணயங்க ளின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறி ப்பாக 25 பைசா, 50 பைசா நாணயங்களு க்கு கடந்த சில ஆண்டுகளாக மதிப்பு இல்லாமல் போய் விட்டது.

25 பைசா, 50 பைசா நாணயங்களை 99 சதவீதம் யாருமே பயன்படுத்துவது இல்லை. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பை ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்டது. இந்த நிலையில் 25 பைசா, 50 பைசா நாணயங்கள் இனி செல் லாது என்று ரிசர்வ் வங்கி அறிவி த்துள்ளது. வரும் 29-ந்தேதி புதன் கிழமை முதல் இது அமல்படுத்தப் பட உள்ளது. வரும் புதன் கிழமை முதல் 25 பைசா, 50 பைசா நாணய ங்களை யாரும் பயன்படுத்தவும் இயலாது.

யாரேனும் 25 பைசா, 50 பைசா நாணயங்களை சேமித்து வைத்திருந்தால் அவற்றை வங்கிகளில் கொடுத்து ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நாட்டுடமையாக்கப்பட்ட 19 வங்கிகளின் கிளைகளில் 25 பைசா, 50 பைசா நாண யங்களை கொடுத்து பணம் பெற லாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணமாற்றத்துக்காக ஏராளமானவ ர்கள் வங்கிகளை தேடி வரத்தொடங்கி உள்ளனர். இந்தியா விலேயே கேரளா வில் தான் 25 பைசா, 50 பைசா மாற்றம் அதிகம் நடப்பதாக தெரிய வந்துள்ளது. இதனால் பொது மக் கள் வசதிக்காக திருவனந்தபுரத்தில் 2 சிறப்பு கவுண்டர்க ளை ரிசர்வ் வங்கி திறந்துள்ளது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply