Tuesday, March 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்த வாலிபர்

குஜராத் மாநிலத்தில், பஞ்ச்மஹால் மாவட்டத்தில் வசித்த தஞ்சி தாமூர் என்ற பெயர் கொண்ட 25 வயது வாலிபர், சீன போன் ஒன்றினால் தன் உயிரை இழந்துள்ளார். மிக வும் மலிவான விலையில் கிடைக்கிறது என்பதற்காகத் தரம் குறைந்த சீனாவில் இரு ந்து இறக்குமதியான மொபை ல் ஒன்றை சார்ஜ் செய்தவாறு பேசுகையில் இந்த சோக சம் பவம் நடை பெற்றுள்ளது. அதிக வோல்டேஜ் அளவில் உடம்பில் மின்சாரம் பாய்ந்து உயிரைப் பறித்ததாக, இவரின் உடம்பினைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித் துள்ளனர்.

போன்களை அடையாளம் காட்டும் தனி எண்கள் இல்லாத மொபைல் போன்களுக்கு இந்திய அரசு தடை விதித்த பின் னரும், மலிவான சீன போன்கள் இன்னும் இந்தியாவில் பல மாநிலங்களில் விற்பனை செய்ய ப்பட்டு வருகின்றன. பல வசதிகளு டன், மிகக்குறைந்த விலையில் இவை கிடை ப்பதால், இவற்றைப் பெரும்பா லான மக்கள், குறிப்பாக கிராமப்புற மக்கள், வாங்கிப் பயன் படுத்துகின்றனர். எந்த தர அடிப்படைக்கும் ஏற்றதாக இந்த போன்கள் இருப்ப தில்லை. சீனாவில் ஆயிரக் கணக்கானோர் இது போன் ற போன்களைத் தயாரிக் கும் பணியில் ஈடுபட்டுள்ள னர். ஷா ன்ஷாய் போன்கள் எனப் பொதுவாக இவற்றை அழைக்கின்றனர். பிரபல நிறுவனங்களின் போன்கள் போல இந்த போன்கள் தயாரிக்கப்படுவதால், ஆங்கிலம் தெரியாத பலர் இதனால் ஏமாற்றப்படுகின்ற னர்.

இந்த போன்களைத் தயாரிக்கும் போதே, சில கெடுதல் விளை விக்கும் மால்வேர் புரோகிராம்களும் ப திந்தே அனுப்பப் படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்த போது, சீன அரசு இவற்றிற்கு எதிராக நடவடிக்கை எடுப்ப தாக அறிவித்தது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுத்ததா கத் தெரியவில்லை. சென்ற ஆண்டு இதே போல ஒரு பெண், சீன மொபைல் போனால் மின்சாரம் தாக்கி இறந்தது நினை விருக்கலாம்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: