குடும்பப் பிரச்சினைகளால் மனம் உடைந்த 16 வயது சிறு வன் ஒருவன் ஓர் உயர்ந்த பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டிய சம்பவம் சீனா வில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.
யாரும் நெருங்கி வந்து விடாதபடி கத்தியை தன்னுடன் வை த்துக் கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தான் அந்த சிறுவன் போலிஸார் என்ன செய்யலாம் ? என்று அறியாமல் திகை த்து நின்றபோது, பொதுமக்களுடன் நின்று வேடிக்கை பார்க் க வந்த 19 வயது இளம் பெண் ஒருவர். அச்சிறுவனின் காதலி என்று சொல்லிக் கொண்டார். அந்த நிறுவன் நின்ற இடத் துக்குப் போய்ச் சேர்ந்தார். அச்சிறுவனுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். திடீரென்று அந்த சிறுவனை கட்டி அணை த்து முத்த மழை பொழிந்துவிட்டார். .
இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று உணர்ந்த போலிஸார் வேகமாக செயல்பட்டு அச்சிறுவனை ஒரே அலக்காக தூக் கிச் சென்றனர். அச்சிறுவன் தற்கொலை முயற்சியில் இரு ந்து காப்பாற்றுப்பட்டான். முத்தம் மழை பொழிந்த இளம் பெண் ணோ சீன மக்களின் ஹீரோயின் ஆகி விட்டார். சம்பவங்களுடன் கூடிய காட்சிகள் இணைய உலகில் மிகுந்த பிரபலம் அடைந்து உள்ளன.